பனி இஸ்ராயீல் மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள சில உறுதிமொழி

பனி இஸ்ராயீல் மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள சில பிரமாணங்கள் இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 233 முதல் 236 வரை 

2:83 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ‏

2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

இந்த வசனத்தில் இஸ்ரவேலர்களுக்கு தான் இட்ட கட்டளைகளையும் அவற்றை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர்களிடம் தான் உறுதிமொழி வாங்கியதையும் அவர்களுக்கு நினைவூட்டுகின்ற இறைவன் அதை பற்றி அவர்கள் நன்கறிந்தும்.அதை நினைவில் வைத்திருந்தும் அலட்சியம் செய்தனர் என்றும் திட்டமிட்டு புறக்கணித்தனர் என்றும் தெரிவிக்கிறான் 

இறைவன் இட்ட கட்டளை இதான் தன்னை மட்டும் இஸ்ரவேலர்கள் வணங்க வேண்டும். தனக்கு எதையும் இணையாக்க கூடாது. இந்த கட்டளை அனைத்துப் படைப்புகளுக்கும் பொருந்தும்.இன்னும் சொல்லப்போனால் அதற்காகத்தான் அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான் 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வை வழிபடுங்கள்,தீய சக்தியில் இருந்து விலகிவிடுங்கள் என்று கூறும் இறைத்தூதரை ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நம் அனுப்பினோம் (16:36)

இறைவழிபாடும் மக்கள் தொண்டும்:

இறைவழிபாடுதான் ஒரு மனிதனின் கடமைகளில் மிக உயர்ந்ததும் மிகவும் மகத்தானதாகும் இணை துணையற்ற அல்லாஹ்வை மட்டும் வழிபடவேண்டும் என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச்  செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமையாகும்.இதற்க்கு பிறகுதான் படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் வருகின்றன.படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மிக முக்கியமானதும் ஏற்றமானதும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையே ஆகும்.

எனவேதான் தனக்கு செய்யவேண்டிய கடமையும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையும் இந்த வசனத்தில் இணைத்து கூறுகிறான்.

இதையே வேற்றொரு வசனத்தில் எனக்கும் உன் பெற்றோருக்கும் நீ நன்றி செலுத்த வேண்டும் ஏனெனில் என்னிடமே நீ திரும்பி வரவேண்டியுள்ளது (31:14)என்று இறைவன் கூறுகிறான்.

மற்றொரு வசனத்தில் என்னைத்தவிர நீங்கள் வணங்கலாகாது பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும்.என்று உம்முடைய இறைவன் கட்டளை இட்டுள்ளான் (17:23)என்று சொல்லத்தொடங்கும் இறைவன் நெருங்கிய உறவினருக்கும் ஏழை மற்றும் வழிப்போக்கர்களுக்கும் அவரவரின் உரிமையை வழங்கிவிடுங்கள்.(17:26) என்று கூறி முடித்துள்ளான்.

இதையே இப்போதைய பைபிளிலும் இதை காண முடியும் 

யாத்திராகமம்

20 அதிகாரம்

2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்

உபாகமம்

6 அதிகாரம்

4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறியதாவது நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே மிக சிறந்த நல்லறம் எது?என்று கேட்டேன் அதற்க்கு தொழுகை அதற்கூறிய நேரத்தில் தொழுவது என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் அடுத்து எது ?என்று கேட்டேன் பெற்றோருக்கு நன்மை புரிதல் என்றார்கள் அடுத்து எது? என கேட்டேன் அல்லாஹ்வின் வழியின் அறப்போர் புரிதல் என்றார்கள் முற்றொரு அறிவிப்பில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே நான் யாருக்கு அதிகமாக நன்மை புரிய வேண்டும் என கேட்டார்? அதற்க்கு உம்முடைய தாய் என பதிலளித்தார்கள் அடுத்து யாருக்கு? என கேட்டார் அப்போதும் உம்முடைய தாய் என்றே பதிலளித்தார்கள் அடுத்து யாருக்கு என கேட்டார்கள் ?அப்போது உன்னுடைய தந்தைக்கு என்று கூறிய நபி ஸல் அவர்கள் அதற்க்கு பிறகு உமக்கு நெருக்கமான மற்றவர்களுக்கு என்று கூறினார்கள் 

அடுத்து அனாதைகள் என்று குறிக்க இந்த வசனத்தின் மூலத்தில் 'அல்யத்தாமா' எனும் சொல் இடம்பெற்றுள்ளது இது (யத்தீம் என்பதன் பன்மையாகும்)பொருளீட்டி தருகிற தந்தை யாருக்கு இல்லையோ அந்த கை சிறார்களை குறிக்கும்.

ஏழைகள் எனும் சொல்லை குறிக்க ;அல் மசாகீன்'  எனும் சொல் ஆளப்பட்டுள்ளது (இது மிஸ்கீன் என்பதன் பன்மையாகும்)இச்சொல் தமக்கும் தமது குடும்பத்தாருக்கு செலவழிக்க எதுவும் இல்லாதவர்களை குறிக்கும்.

நல்லதை பேசுங்கள்:

அடுத்து மக்களிடம் நல்லதையே பேசுங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.அதாவது அவர்களுடன் இனிமையான உரையாடுங்கள் மென்மையாக பழகுங்கள் நன்மையை ஏவுவதும் தக்கமுறையில் தீமையை தடுப்பதும் கூட  இதில் அடங்கும்.

ஹசன் அல் பஸரி ரஹ் அவர்கள் கூறியதாவது நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் பொறுமையை மேற்கொள்ளுதல் (அடுத்தவரின்) தவறை மன்னித்தல் (அதை) பொருட்படுத்தாமல் விட்டுவிடல் மக்களிடம் அழகிய முறையில் உரையாடுதல் ஆகிய அனைத்தும் அல்லாஹ் கூறிய இனிய உரையாடலில் அடங்கும் இவை அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அழகிய குணங்களாகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் நற்செயலில் எதையும் நீ மலிவானதாக கருத்திவிடாதே!(பிறருக்கு உதவ)உன்னிடம் ஒன்றும் இல்லையென்றாலும். உன் சகோதரனை நீ முகமலர்ச்சியோடு சந்திப்பாயாக! (அதுவும் நீ செய்கின்ற உதவிதான்)(புஹாரி 527,2782,5970,7534)

இந்த வசனத்தில் மக்களுக்கு நன்மை புரிந்திடுங்கள் என்று அந்த யூதர்களுக்கு கட்டளையிட்ட அல்லாஹ் அதை தொடர்ந்து மக்களிடம் நல்லதேயே பேசுங்கள் என்றும் கட்டளையிட்டுள்ளான் இதன் மூலம் சொல்லாலும் செயலாலும் நன்மை செய்யவேண்டும் என்று இறைவன் உணர்த்துகிறான்.

தன்னை வழிபடுவதும் மக்களுக்கு நன்மை செய்வது குறித்தும் குறிப்பிட்ட அல்லாஹ் பின்னர் அவற்றில் மிக மிக்கியமானவையான தொழுகை பற்றியும் ஜக்காத்தை பற்றியும் தனித்தனியாக குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளான். அதையே தொழுகையை கடைப்பியுங்கள் ஸகாத் (எனும் கடமையான தர்மத்)தை வழங்குங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

அடுத்து இவை அனைத்தையும் அவர்கள் அலட்சிய படுத்திவிட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான்.அதாவது அந்த யூதர்கள் இவையனைத்தையும் தம் முதுகுக்குப் பின்னர் விட்டுவிட்டனர் அவற்றை பற்றி நன்கு தெரிந்துகொண்டு பிறகும்கூட அவர்களில் சொற்பமானவர்களை தவிர மற்ற அனைவரும் அவற்றை திட்டமிட்டு புறக்கணித்தனர்.

இ(ந்த வசனத்தில் யூதர்களுக்கு உத்தரவிட்ட)தைப் போன்றே (முஹம்மத் ஸல் அவர்களின் இந்த சமுதாயத்திற்கு அந்நிஸா எனும் 4 வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கட்டளை இடுகின்றான்     

4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;

இதையே நபி ஸல் அவர்களின் முழு வாழ்க்கையிலும் காணலாம்  

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி அவர்களையும் எமன் நாட்டுக்கு அனுப்பிவைக்கும் போது உள்ள அறிவுரைகள் உலகத்தில் எல்லாம் ஆதம் உடைய மக்கள்  என்ற அடிப்படையில் அவர்களிடம் நீங்கள்  இருவரும், ‘‘நீங்கள் (மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள். (மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டிவிடாதீர்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுங்கள்; (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக்கொள்ளாதீர்கள்”,அநீதி யிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங் கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை (புஹாரி 2448,3038)

Comments