சில சடங்கு பற்றி முன்னோர்கள் செய்வது போன்று செய்வோம்

 சில சடங்கு பற்றி முன்னோர்கள் செய்வது போன்று செய்வோம் 


5:103. பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுதந்திரமாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்), வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக, சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்), ஹாம் (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுதந்திரமாக திரியும்படி விடப்படும் ஆண் ஒட்டகம் முதலிய) இவைகளெல்லாம் (மார்க்கச் சின்னங்களாக) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆனால், நிராகரித்தோர் தாம் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றனர்; மேலும், அவர்களில் பெரும்பாலோர் விளங்க மாட்டார்கள்.


5:104. "அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்!" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்).


5:105. நம்பிக்கை கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பெற்று விட்டால் வழிதவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யமுடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீளவேண்டியிருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

Comments