மரண சாஸனம்,மரண சாஸன சாட்சிகள்
5:106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து, அவர் மரண சாஸனம் செய்யும் நேரத்தில் உங்களிலிருந்து நீதியுடைய இருவர் உங்களுக்கு மத்தியில் சாட்சியாக இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரணத்துன்பம் ஏற்பட்டால் உங்களையல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக்கொள்ளவும்: இவ்விருவரும் அதனை சொற்ப கிரயத்திற்கு நாங்கள் விற்று விடமாட்டோம்! (எவருக்கு சாட்சியம் கூறுகின்றோமோ) அவர்கள், (எங்களுடைய) பந்துக்களாக இருந்த போதிலும், சரியே! இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம்! (அவ்வாறு செய்திருந்தால்) அப்பொழுது நிச்சயமாக பாவிகளில் உள்ளவர்களாகிவிடுவோம்!" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
5:107. நிச்சயமாக அவ்விருவரும் (பொய்சாட்சிக் கூறி) பாவத்திற்குரியவர்களாகிவிட்டார்கள் என்று கண்டுகொள்ளப்பட்டால், அப்போது எவர்களுக்கு (பொருளின்) உரிமை இருக்கிறதோ அவர்களிலிருந்து, நெருங்கிய உறவினர் இருவர், (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று, "அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்புமீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகிவிடுவோம்!" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
5:108. இவ்வாறு செய்வது அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி கொண்டுவருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வை அஞ்சி (அவனது கட்டளைகளுக்குச்) செவிசாயுங்கள்; ஏனெனில், அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:109. அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் ஒரு நாளில் அவர்களிடம், "நீங்கள் (மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?" என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: "(அதுபற்றி) எங்களுக்கு எந்த அறிவும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்!" என்று கூறுவார்கள்.
Comments
Post a Comment