ஈஸா நபிக்கு கொடுத்த அற்புதம்,ஈஸா நபிக்குஉதவி செய்தது ஈஸா நபியிடம் உணவு கேட்டது

 ஈஸா நபிக்கு கொடுத்த அற்புதம்,ஈஸா நபிக்குஉதவி செய்தது ஈஸா நபியிடம் உணவு கேட்டது 


5:110. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும் உம் தாயார் மீதும் (நான் அருளிய) அருட்கொடையை நினைவு கூரும்! பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உம்மை பலப்படுத்தியபோது நீர் தொட்டிலிலும், வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசியதையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்)! இன்னும், நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி அதில் நீர் ஊதியபோது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதை; இன்னும், என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); இறந்தோரை என் உத்தரவுக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); அன்றியும், (இஸ்ராயீலின் சந்ததியினராகிய) அவர்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை!' என்று கூறியபோது (அந்த) இஸ்ராயீலின் மக்க(ளின் தீங்குக)ளை உம்மைவிட்டும் நான் தடுத்துவிட்டதையும் நினைத்துப் பாரும்!" என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக)!"


5:111. "என்மீதும், என் தூதர்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என (உமது) சீடர்களுக்கு நான் அறிவித்தபோது அவர்கள், "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.


5:112. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக, உணவு மரவையை (ஆகாரத்தட்டை) இறக்கிவைக்க முடியுமா?" என்று சீடர்கள் கேட்டபோது அவர், "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.


5:113. அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.


5:114. மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானத்திலிருந்து எங்கள்மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களுக்குப்பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும், எங்களுக்கு உணவளிப்பாயாக! நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

5:115. அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், அகிலத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.

Comments