அல்லாஹ்விடமிருந்து மிக கேட்ட பிரதிபலனை
அடைந்தவர்கள் இவர்கள்தான்.
“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 5:59)
“அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 5:60)
(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!” என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்; இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:61)
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
(அல்குர்ஆன் : 5:62)
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
(அல்குர்ஆன் : 5:63)
Comments
Post a Comment