பசியாலும் பொருளாலும் சோதனைக்குள்ளானவர்கள் என்ன கூறுவார்கள்.

 பசியாலும் பொருளாலும் சோதனைக்குள்ளானவர்கள் 

என்ன கூறுவார்கள்.


நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

(அல்குர்ஆன் : 2:155)



(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன் : 2:156)



இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

(அல்குர்ஆன் : 2:157)

Comments