இறந்ததும் அழுது புலம்புதல்
புகாரி
4267. حَدَّثَنِي عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَامِرٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُغْمِيَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ، فَجَعَلَتْ أُخْتُهُ عَمْرَةُ تَبْكِي وَاجَبَلاَهْ وَاكَذَا وَاكَذَا. تُعَدِّدُ عَلَيْهِ فَقَالَ حِينَ أَفَاقَ مَا قُلْتِ شَيْئًا إِلاَّ قِيلَ لِي آنْتَ كَذَلِكَ.
பாடம் : 45 ஷாம் நாட்டில் நடைபெற்ற “மூத்தா' போர்304
4267. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் (மூத்தா போருக்கு முன்பு ஒருமுறை நோயின் காரணத்தால்) மூர்ச்சையுற்றுவிட்டார்கள். உடனே (அன்னார் இறந்துவிட்டார் என எண்ணிய என் தாயாரும்) அன்னாருடைய சகோதரி (யுமான) அம்ரா (ரலி) அவர்கள், “அந்தோ! மலையாக இருந்தவரே! அப்படி இருந்தவரே! இப்படி இருந்தவரே!” என்று (பலவாறாகப் புலம்பி) அழத்தொடங்கி னார்கள். அவரைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்லலானார்கள்.
அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் மூர்ச்சை தெளிந்(து கண் விழித்)தபோது, தம் சகோதரியை நோக்கி, “நீ சொன்ன ஒவ்வொன்றுக்கும் என்னிடம், “இவ்வாறுதான் நீ இருக்கிறாயா?' என்று (வானவர் ஒருவரால்) கேட்கப்பட்டது” என்று (அழுது புலம்பியதைக் கண்டிக்கும் தொனியில்) கூறினார்கள்.
Comments
Post a Comment