123. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مَا الْقِتَالُ فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً. فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ ـ قَالَ وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلاَّ أَنَّهُ كَانَ قَائِمًا ـ فَقَالَ "" مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ "".
பாடம் : 45 அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்றுகொண்டு கேள்வி கேட்பது
123. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தால் போரிடு கிறார். (மற்றொருவர்) இனமாச்சரியத்தால் போரிடுகிறார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?” என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தமது தலையை உயர்த்தி, “யார் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றாரோ அவர் தான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.
கேள்வி கேட்டவர் நின்றுகொண்டி ருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்திப் பார்த் தார்கள்
Comments
Post a Comment