4128. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ وَنَحْنُ سِتَّةُ نَفَرٍ بَيْنَنَا بَعِيرٌ نَعْتَقِبُهُ، فَنَقِبَتْ أَقْدَامُنَا وَنَقِبَتْ قَدَمَاىَ وَسَقَطَتْ أَظْفَارِي، وَكُنَّا نَلُفُّ عَلَى أَرْجُلِنَا الْخِرَقَ، فَسُمِّيَتْ غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ، لِمَا كُنَّا نَعْصِبُ مِنَ الْخِرَقِ عَلَى أَرْجُلِنَا، وَحَدَّثَ أَبُو مُوسَى بِهَذَا، ثُمَّ كَرِهَ ذَاكَ، قَالَ مَا كُنْتُ أَصْنَعُ بِأَنْ أَذْكُرَهُ. كَأَنَّهُ كَرِهَ أَنْ يَكُونَ شَىْءٌ مِنْ عَمَلِهِ أَفْشَاهُ.
பாடம் : 32 “தாத்துர் ரிக்காஉ' போர்198 இதுதான் “முஹாரிபு கஸ்ஃபா' போராகும். இவர்கள் “ஃகதஃபான்' குலத் தின் ஒரு பிரிவினரான “பனூ ஸஅலபா' கூட்டத்தார் ஆவர்.199 இப்போரில் நபி (ஸல்) அவர்கள் “நக்ல்' என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (“தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான) அபூமூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால்தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.
4128. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்துப் பயணம் செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததால் தான் அந்தப் போருக்கு “தாத்துர் ரிக்காஉ' (ஒட்டுத் துணிப் போர்) என்று பெயர் சூட்டப்பட்டது.
அறிவிப்பாளர் அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்தபின் அபூமூசா (ரலி) அவர்கள், தாம் இதை அறிவித்ததைத் தாமே விரும்பாமல், “நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல்தான் இருந்தேன்” என்றார்கள். தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லைபோலும்.
Comments
Post a Comment