4479. حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ {ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ} فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، فَبَدَّلُوا وَقَالُوا حِطَّةٌ، حَبَّةٌ فِي شَعَرَةٍ ".
பாடம் : 5 மேலும், “(அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயில் வழியாகப் பணிவாக நுழையுங்கள். “மன்னிப்பாயாக!' என்று கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்துவிடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்கு வோம்” என நாம் கூறியதையும் எண்ணிப்பாருங்கள் (எனும் 2:58 ஆவது இறைவசனம்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ரஃகதன்' (தாராளமாக) எனும் சொல்லுக்கு “விசாலமாகவும் அதிகமாகவும்' என்று பொருள்.
4479. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல்களுக்கு, “(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் பணிவாக நுழையுங்கள். “மன்னிப்பாயாக!' (ஹித்தத்துன்) என்று கூறுங்கள்” (2:58) எனக் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, “ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! தொலி நீக்கப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து)” எஎன்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.13
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Comments
Post a Comment