பனி இஸ்ராயீல் மற்றும் நம் இருவருக்கும் பழிக்கு பழி என்ற ஒன்றில் ஒன்னு மட்டும் வித்தியாசம்

 


இந்த ஒன்றை உஸ்மான் ரலி அவர்கள் கொல்லப்பட்ட பின்பு  அவருடைய உறவினர்களில் ஒருவர் உயிரூட்டு தொகை வாங்கி விட்டு மேலும் அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்தால்   இந்த ஒன்றை மக்கள் கடைப்பிடித்தார்கள் என்றால் இவ்வளவு பெரிய பிளவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என்னோட கண்ணோட்டம் 


Bhuhari

4498. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ الْقِصَاصُ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ فَقَالَ اللَّهُ تَعَالَى لِهَذِهِ الأُمَّةِ {كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنْثَى بِالأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَىْءٌ} فَالْعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي الْعَمْدِ {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ} يَتَّبِعُ بِالْمَعْرُوفِ وَيُؤَدِّي بِإِحْسَانٍ، {ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ} وَرَحْمَةٌ مِمَّا كُتِبَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ. {فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ} قَتَلَ بَعْدَ قَبُولِ الدِّيَةِ.

பாடம் : 23 இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.

4498. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


இஸ்ரவேலர்களிடையே பழிக்குப் பழிவாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடைமுறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்தாருக்கு, “கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. சுதந்திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவும் (பழிவாங்கப் படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) செலுத்த வேண்டும்” என்று கூறுகிறான்.


“மன்னிப்பளித்தல்' (அஃப்வ்) என்பது திட்டமிட்டுச் செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதனைக் கொலையாளி செலுத்த வேண்டும்.


“இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையும் ஆகும்.” அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள்மீது கடமையாக்கப்பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் எல்லை மீறுகின்றானோ அவனுக்கு-அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு- வதைக்கும் வேதனையே உண்டு. (2:178)


இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


Comments