அம்மார் ரலி அவர்களை பற்றி முன்னறிவிப்பு

447. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، قَالَ لِي ابْنُ عَبَّاسٍ وَلاِبْنِهِ عَلِيٍّ انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ. فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً، وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ وَيَقُولُ "" وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الْجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ "". قَالَ يَقُولُ عَمَّارٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ.
பாடம் : 63 பள்ளிவாசல் கட்ட ஒத்துழைத் தல் (அல்லாஹ் கூறுகின்றான்:) இணைவைப்பாளர்களுக்கு, அல்லாஹ் வின் பள்ளிவாசல்களைப் பராமரிக்கும் உரிமை கிடையாது. அவர்கள் தம்மிட முள்ள இறைமறுப்புக்குத் தாமே சாட்சி களாக உள்ளனர். அவர்களின் நல்லறங் கள் யாவும் அழிந்துவிட்டன. நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பவர்கள் யாரென்றால், அல்லாஹ் வையும் மறுமை நாளையும் நம்பி, தொழுகையைக் கடைப்பிடித்து, ‘ஸகாத்’ வழங்கி, அல்லாஹ்வைத் தவிர வேறெதற் கும் அஞ்சாதவர்கள்தான். அவர்களே நல்வழி பெற்றோராக முடியும். (9:17,18)
447. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ (ரஹ்) அவர்களிடமும், “நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, அவர் கூறும் ஹதீஸைக் கேட்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.

அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேல்துண்டை எடுத்துப் போர்த்திக்கொண்டபின் (பல ஹதீஸ்களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். இறுதியாக ‘மஸ்ஜிதுந் நபவீ’ கட்டியது பற்றிப் பேச்சு வந்தபோது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) செங்கற்களை ஒவ்வொன்றாகச் சுமந்து எடுத்துக்கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற் களாகச் சுமந்த வண்ணமிருந்தார்.

அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதி யைத் தட்டிவிட்டு, “பாவம் அம்மார்! அவரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்று விடுவார்கள். அவர்களை அம்மார் சொர்க்கத்தி(ற்குக் காரணமான, தலை மைக்குக் கட்டுப்படும் செயலி)ன் பக்கம் அழைக்க, அந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமான நல்ல தலைமைக்கு எதிராகச் செயல்படுவத)ன் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்டதிலிருந்து) அம்மார் (ரலி) அவர்கள், “குழப்பங்களைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.47

Comments