பாகம் 10
பாகம் 9 இல் இது வரைக்கும் அரபி இல்லாத ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வாழ்வில் அல்லாஹ்வின் கட்டளையை மீறி (மறந்து மற்றும் தெரிந்து) நடக்கும் செயல்களை குறித்து பார்த்தோம்.
இஸ்லாத்தில் சிலர் பைபிளை கடவுளுடைய வேதமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள்.
அதில் எனக்கும் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை
ஆனால் நபி ஸல் அவர்கள் காலத்தில் முதல் நுபுவத் கிடைத்ததும் அதை உறுதி செய்த ஒருவரும் கிருஸ்த்துவர்தான்,
புஹாரி :3. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது வஹியை கண்டது பற்றி கூறப்படுகிறது.
அதில் நபி ஸல் அவர்கள் இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட, அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு, “எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்,) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்கிறீர்கள்; சுயகாலில் நிற்க முடியாதவர்களைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)” என்று (ஆறுதல்) சொன் னார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.
வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபி மற்றும்) எபிரேயு (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவுக்கு எபிரேயு மொழியி(லிருந்து அரபி மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்
அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், “என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்கள் சகோதரர் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள்” என்றார்கள்.
அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், “என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவ ரத்தை அவரிடம் சொன்னார்கள்
இதைக் கேட்ட) வரக்கா, “(நீர் கண்ட) இவர்தான், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று நபியவர்களிடம் கூறி விட்டு, “(மகனே!) உம்மை உம்முடைய சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்தச் சமயத்தில் நான் இளைஞனாக (திடகாத்திரமானவனாக) இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!” என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, வரக்கா, “ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத் தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுப்பணி பரவலாகும்)நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன்” என்று சொன்னார்.
பின்னர் வரக்கா நீண்ட நாள் இருக்கவில்லை; இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.
இங்கு கதிஜா ரலி அவர்களுக்கு இங்கு அது வேத அறிவிப்பா என்று சொல்லமுடியாது (நபி ஸல் அவர்களுடைய குணத்தை மட்டுமே கதிஜா ரலி அவர்கள் சொன்னார்கள்.
அதை மக்களுக்கு உண்மை படுத்தியது ஒரு (கிறித்துவர்) தான் இந்த செய்தியை நான் சொல்வதற்க்கு அர்த்தம்.
நபி ஸல் அவர்கள் தாவா செய்யும் போது அல்லாஹ்வால் இறக்கப்பட்ட அந்த பழைய பைபிள் என்று சொல்லக்கூடிய மனிதனால் கறைபடிந்த நூல்தான்.அதை மனதில் வைத்துதான் முஸ்லீமாக வந்தார்கள்.
முன் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தவ்ராத், இன்ஜீல் அவர்கள் தங்களிடம் உள்ளவற்றையும் குர்ஆனையும் பார்த்தால் என்ன செய்வார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 29:49)
(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் : 17:107)
இது பைப்பிளின் வசனம்
உபாகமம்
18 அதிகாரம்
18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
உபாகமம்
18 அதிகாரம்
19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
யோவான்
14 அதிகாரம்
26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
யோவான்
16 அதிகாரம்
11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
யோவான்
16 அதிகாரம்
11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
முஹம்மது நபியை பற்றி பேசினது இதெல்லாம் ஒரு நிராகரிப்பாளர் இல்லாத கிறிஸ்துவர் ஒருவர் கண்டால் இஸ்லாம் அவருக்கு பிடிக்குமா பிடிக்காதா?
இதை இப்போது உள்ள முஸ்லீம்கள் பைபிள் இறைவன் இறக்கியது இல்லை என்று எப்படி சொல்ல முடியும்
இதை இறக்கியதும் அல்லாஹ்தான் ஆனால் வேற்றுமை அதில் என்னவெனில் மனித கரம் படிந்துள்ளது, ஆகையால் குர் ஆனுக்கு முரண்படாத வசனங்களை மேற்கோள் காட்டுவது முழுவதுமாக தவிர்க்க முடியாதது என்று இல்லை, (வரலாற்றுக்கு மாற்றமாக இருக்கிற வசனத்தை மட்டும் மனிதராகிய நாம் சிலதை வேண்டுமென்றால் நிராகரிக்கலாம்)
இந்த முழுவதுமான வரலாறு மனிதனை சோகமடைய (பயமுறுத்துவது) போலவும் இருக்கிறது
மனிதனுக்கு நற்செய்தி கூறுவது போல் ஒரு செய்தி கூட இல்லையே (அதாவது மனிதனுக்கு Positive வான விஷயம் இந்த வரலாறில் இல்லையே negative வான விஷயம் தான் நிறைய இருக்கிறது) என்று பலரும் சிந்திக்கலாம்.
நபி ஸல் அவர்கள் கூறிய ஹதீத் எல்லாம் தொகுத்து கூறிய இந்த வரலாறை நாம் படிக்கும் போது அவர் நமக்கு மட்டுமான தூதர் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்
அல்லாஹ் மனிதனிடம் ஒரு உறுதிமொழி வாங்கினான் அதை மனிதன் செய்ய தவறினான் அப்போது அல்லாஹ் மனிதனுக்கு வேதனை கொடுகிறான்,
அந்த வேதனையை எப்படி கொடுப்பேன் என்றும் அறிவிக்கிறான்,
இது கண்டிப்பாக அல்லாஹ்வை காணவேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதனை சோகமடைய செய்வதும் (பயமுறுத்துவது) போலதான் இருக்கும்.
ஏனென்றால் இறந்த பிறகு மட்டுமே நல்லடியார்களாக இருந்தால் அல்லாஹ்வை காண முடியும்.
எவ்வளவு பெரிய வேதனையின் நடுவிலும், அல்லாஹ்வுடைய அடியாரை (நாடியவரை)அல்லாஹ் காப்பாற்றுவான் ( வயநாடு நிலசரிவில் சிக்கிய வயதுமூதாட்டியையும், குழந்தையையும் யானை மூலம் காப்பாற்றியவனே சாட்சி)
இனி கடைசியாக ஒரே ஒரு தகவல் உடன் முடித்து கொள்கிறோம் இந்த பகுதியை
நபி ஸல் அவர்கள் இரத்த சொந்தமாகவோ, அதே தொடர்ந்து ஒரு நல் அமல் செய்யும் அடியாருடைய சொந்தமோ என்று நினைத்து மறுமையில் பரிந்துரையை எதிர்பார்ப்பது எப்படி என்று
நபி ஸல் அவர்களுடைய வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு நபி ஸல் அவர்கள் கொடுத்த அறிவுரையோடு நமக்கு உண்டான பாடம்
தன்னைத் தானே கடவுள் என்று கூறி கொண்ட ஃபிர்அவ்னைக் கூட சபிக்காத அளவுக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் ஒருவனை பெயர் கூறி சபிக்கிறான் என்றால், அது நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை] அபூ லஹபைத்தான். தந்தையின் சகோதரருக்கு தந்தைக்குரிய அந்தஸ்து இருக்கிறது.
அப்படி அல்லாஹ்வின் தூதருக்கு தந்தை அந்தஸ்தில் உள்ள மிக மிக நெருக்கமான, நேரடி இரத்த உறவானவர் அபூ லஹப் ஆவார்,
மறுமை நாள் வரையில் முஃமின்களின் வாயால் தொடர்ந்து சபிக்கப்படும் வகையில் அல்குர்ஆனில் ஒரு ஸூறாவையே அல்லாஹ் வைத்திருக்கிறான்.
இதற்கூடாக அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் மிகப் பெரும் படிப்பினையொன்றிருக்கிறது.
உங்களது இரத்தம், உங்களது பந்தம், உங்களது நெருக்கம், உங்களது சொந்தம், எதுவுமே அல்லாஹ்விடத்தில் எவ்விதப் பெறுமானங்களும் பெறக்கூடியவையாகாது.
ஏனெனில் உங்களது இரத்த பந்தமும் திருமணத்துடன் உங்களுக்குக் கிடைக்கும் சட்டபூர்வமான சொந்தமும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.
25:54. இன்னும், அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும், உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன் எனக்கூறுகிறான்.
அல்லாஹ்வால் உங்களுக்குத் (இயற்கையாக) தரப்பட்ட ஒன்றை வைத்து ஏனையவர்களை (மற்றவர்களை) விட உங்களுக்கு முன்னுரிமையோ முக்கியத்துவமோ(ஒருவர்மீது)இருப்பதாக இருந்தால், அது அல்லாஹ்வின் நீதியில் களங்கத்தை (தாக்கத்தை)ஏற்படுத்தும் செயலாகும்.
அத்தகைய தூய எண்ணங்களை விட்டும் அல்லாஹ் முற்றிலும் தூய்மையானவன்.
அல்குர்ஆன் கற்றுத் தரும் அழகிய இஸ்லாத்தின் பார்வையில், உங்களது முயற்சியால் நீங்கள் பெற்றுக் கொள்ளும் (பாடம்) தக்வாவின் அளவுக்கேற்பவே உங்களுக்கான கண்ணியம் கிடைக்கும்.
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்: உங்களில் எவர் (அல்லாஹ்வை) மிகவும் அஞ்சுபவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.
உங்களிடம் தக்வா இருந்தால் நீங்கள் ஃபிர்அவ்னின் மகனாகவே இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் தக்வா இல்லையென்றால் நீங்கள் இறைத் தூதரின் இரத்தமாகவே இருந்தாலும் கூட தோல்வியடைவீர்கள்.
பாகம் 4 இல் நபி ஸல் அவர்களுடைய குடும்பத்தில் நல் அடியார்களை பேசி உள்ளேன்
இந்த பாகத்தில் (இறைவன் சொன்ன கட்டளைக்கு ) அநியாயம் பண்ணுகிறவர்களை பேசி உள்ளேன்
உங்களது இரத்தத்துக்கும் (உறவுக்கும்) நபியவர்களின் (உறவுக்கும்) இரத்தத்துக்குமிடையில் ஏதேனும் தொடர் இருப்பதாக இருந்தால் உங்களுக்கு எவ்விதமான மேலதிக அந்தஸ்தோ கண்ணியமோ கிடைக்கப் போவதில்லை.
அவ்வாறு மறுமை நாள் வரையிலும் நபியவர்களுடைய (உறவு) இரத்தம் பயணிக்கும் வழியைத் தேடித் தேடி கண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு குர்ஆன் வழிகாட்டவுமில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டு விட வழி வகுத்துவிடக்கூடாது என்றுதான் ,
அல்லாஹ் நபியவர்களது ஆண் வாரிசுகளின் தொடர்ச்சியை நபியவர்களின் வாழ்வு முடிய முன்பே இடைநிறுத்தி விட்டான் போலும். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
நபியவர்களின் நேரடி இரத்த உறவான, தினமும் நபியவர்களின் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற அபூ லஹபுக்கே அந்த உறவு பலனளிக்காத போது, 1400 வருட இடைவெளியில் தாங்கி இருக்கும் இரத்தத்துக்கு மட்டும் ஏதேனும் கண்ணியம் கிடைத்து விடுமா?!
அல்லாஹ்வின் தூதருடைய குடும்பம் என்பதால் மறுமையில் அவர்களுக்கு அல்லாஹ்வின் முன்னிலையில் எவ்விதமான சிறப்பு சலுகைகளும் கிடைக்காது.
அனைவரையும் போல் அவர்களும் சரிக்கு சமமாக மஹ்ஷரில் நின்று, நன்மை தீமைகள் நிறுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அந்தத் தீர்ப்புக்கேற்ப தமது நிரந்தர வாழ்வை நோக்கி நகர வேண்டிவரும்.
அதை நபி ஸல் தன்னுடைய மகள் ஃபாத்திமாவையே நபியவர்கள் அப்படித்தான் எச்சரித்து வளர்த்தார்கள்.
ரெக்கமண்டேஷனும், ஸ்டேட்டஸும் மனிதர்களிடம் வேகுவது போன்று அல்லாஹ்விடத்தில் வேகுவதில்லை.
எனவே, வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கான பாதையை இரத்தத்தில் தேடாமல் இஸ்லாத்தில் தேடுங்கள்!
நீங்கள் உங்களுக்குள்ளே வெட்டி மாய்த்துகொள்ளாதீர்கள் என்று ஹஜ்ஜத்துல் விதாவில் நபி ஸல் அவர்கள் கூறின மிகவும் முக்கியமான விவரம்
மூஸா அலை அவர்களுடைய சமூகத்திற்கு அல்லாஹ் கூறின விஷயங்கள் போலவே இருக்கும்
புஹாரி :4406. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பிறகு,) “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.
இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்
ஹுவ அலா குல்லி சையின் கதீர் (அல்லாஹ் எல்லா பொருளின் மீது பேராற்றல் உள்ளவன்)
அல்லாஹ் எப்படிப்பட்ட பேராற்றல் உள்ளவன் என்ற சிறிய அறிவியல் உண்மையின் மூலம் பகுதியை முடித்து கொள்ளலாம்.
ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டு வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி (ரஹ்) தனது Mishkat al-anwar : "The Niche for Lights" என்ற புத்தகத்தில் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்.
நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டர், "இந்த சூரியனின் நகர்கிறதா?" என்று
அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இல்லை ——— ஆம்" என்று பதிலளித்தார்.
"அது எப்படி?" என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்
அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "'இல்லை ——— ஆம்' என்று நான் பதில் சொல்வதற்குள் இது (சூரியன்) ஐநூறு ஆண்டு கால சமமான தூரம் நகர்ந்து சென்றுவிட்டது" என்று பதிலளித்தார்.
இன்னும், அவன் எத்தகையவனென்றால் இரவையும், பகலையும் சூரியனையும், சந்திரனையும் படைத்தான், (அவை) ஒவ்வொன்றும் (வானத்தில் தமக்குரிய) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன.
(அல்குர்ஆன் : 21:33)
இப்படி நகர்ந்து போகக்கூடிய பூமியில் நாம் எங்கே (இறைவனின் பேராற்றல் புரிகிறதா?)
நபி ஸல் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்
மறுமை நாள் வரை குர்ஆனின் செய்தியோ (ஹதீத்) நபி மொழியோ தெரியாதவர்களிடம் கொண்டு சேர்ப்பவருடைய நிலைமை நபி ஸல் அவர்களின் தூதர்கள்.
அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கே அல்லாஹ்வின் செய்தியை கொண்டு சேர்ப்பது கடமை மட்டுமே கண்காணிப்பாளர் இல்லை. (quran :4:80)
அவருக்கே அந்த நிலைமை என்றால் மறுமை வரக்கூடிய நாள் வரை அவரின் செய்தியை கொண்டு செல்லும் நாம் மற்ற மக்களின் கண்காணிப்பாளர் ஆகுவோமா?
மக்களே அல்லாஹ்வை பயந்தோடும்
ஆசையோடும் பிரார்த்தனை செய்யுங்கள். (quran 7:56)
மரண தருவாயில் உயிர் லேசாக கழட்ட படவேண்டுமா
உயிர் அடித்து கழட்ட பட வேண்டுமா இறைவனை நேசிக்க தொடங்குங்கள்.
இந்த தீனில் எந்த விதமான நிர்பந்தமும் இல்லை (2:256)
ஏற்கிறவர்கள் சோதனைக்கு உட்படுத்துங்கள், ஏற்கிறாதவர்கள் இறைவனிடம் பிழை பொறுங்கள், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக. ஆமீன்.
Comments
Post a Comment