பாகம் 2
கடந்த பாகத்தில் பனி இஸ்ரேல் கொடுமை படுத்தியதை பார்த்தோம் இனி இந்த பாகத்தில் பனி இஸ்ரேயிலுக்கு அல்லாஹ் செய்த உதவியை பார்ப்போம்
அதற்க்கு முன் இந்த வரலாறை இன்றைய முஸ்லீம் சமூதாயத்தோடு பொருத்தி பாருங்கள்
ஃபிர்அவுனுடைய வரலாற்றில் பனி இஸ்ரயில் சமூகத்தை ஒடுக்க சொல்லித்தந்தது எது அது எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் எந்த ஒரு வரலாற்று முறையாகவும் இருக்கலாம் ஆனால் பனி இஸ்ரவேலர்களை பல சமூகமாகி ஒடிக்கி பனி இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ்வின் மூலம் சோதனை இருந்ததா......இல்லையா.........
அதேதான் முஸ்லீம் சமுதாயத்திற்கு சூரா தவ்பாவில் மூலம் அல்லாஹ் கூறுகிறான்.
முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் (என்று முஸ்லீங்களுக்கு கூறுகிறான்)
(அல்குர்ஆன் : 9:5)
இது முஸ்லீங்களுக்கு சோதனை அல்லாஹ் கொடுத்த சோதனையாக எடுத்து கொள்வோம், நபி ஸல் அவர்களின் உடன்படிக்கை மறந்து இருந்த காரணத்தினால் இன்று உலகத்தில் பெரும்பாலான மக்கள் இந்தவசனத்தை எடுத்துக்காட்டி (பாருங்கள் முஸ்லீம்கள் வேதத்தில் தீவிரவாதம் போதிக்கிறது) என்று வாதம் வைத்து இன்று உலக அரங்கில் முஸ்லீம்களை ஒதுகிறார்கள்.(பல உரிமையும் பறிக்க படுகிறது)
மனிதன் இறைவன் சொன்ன முறையில் வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் முஸ்லீம்களை பார்த்து இஸ்லாம் மார்க்கம் எவ்வளவு புனிதமானது என்று பார்த்து இஸ்லாமிற்க்கு வருவார்கள்.
ஆனால் இப்போது இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலமை இருக்கிறது, இது எந்தக்கால கட்டத்தில் பொருந்தும் என்று விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது.
இதெல்லாம் முஸ்லீம்கள் அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்கை மீறியதால் வந்த வினையாகும் அல்லாஹ் இறைமாறுப்பாளர்கள் மூலம் அவர்கள் கையில் இருந்து நமக்கு சோதனை தருகிறான். இதை யாராலும் மறுக்க முடியாது.(இதேதான் பனி இஸ்ரவேலர்களும் செய்தார்கள்) தொடர்ந்து படியுங்கள் புரியும்
முஸ்லீம்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் வேததில் உள் உள்ள வசனம் உங்களை தொடரும்.
அல்லாஹ்வுடைய சாபம் மட்டுமே இந்த உம்மத் மீது இருக்கிறது, அதன் பின் அல்லாஹ்வின் உதவியும் இருக்கிறது.
அதனால் அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் மட்டுமே அல்லாஹ்வும் மனிதர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவான்.
இனி அல்லாஹ் பனி இஸ்ரேலை பற்றி அல்லாஹ் கூறுவதை பாப்போம்
பின்பு பனி இஸ்ராயிலுக்கு அல்லாஹ் நன்மை செய்ய நாடினான்
28: 4 ஃபிர்அவ்ன் இப்பூமியில் பனி இஸ்ராயீலின் ஒரு கூட்டத்தை பிரிவாக்கி அதில் ஒரு சமூகத்தவரில் உள்ள ஆண் குழந்தைகளை கொன்று பெண் குழந்தைகளை விட்டுவைத்தான்.
28:5மேலும் அந்த பலகீன படுத்தப்பட்ட மக்களை நான் பலப்படுத்த நினைக்கிறன் என்றும், பலகீன படுத்தப்பட்ட மக்களை தலைவர்களாகவும்,அந்த நாட்டுக்கு வாரிசு ஆக்க விரும்புவதாகவும் அல்லாஹ் அப்போதுதான் நாடுகிறான்.
அதன் பின் மூஸாவின் தாயிடம் அல்லாஹ் இவ்வாறு கூறினான்
28:7 இதன் பின்தான் மூஸாவின் தாயை பார்த்து அவரை ஆற்றில் எறிந்து விடு நீ பயப்படவும் வேண்டாம்,நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் என்றும் அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம் என்றும் வஹீ அறிவித்தோம் என்று கூறுகிறான் அல்லாஹ்
மூஸா நபியின் வரலாறை குர் ஆனில் இருந்து முழுவதும் கூற முடியாது குர்ஆனில் மூஸா அலை அவர்களின் வரலாறு மட்டுமே பாதிக்கு மேல் இருக்கும் இங்கு அவரின் வரலாற்றை கட்டுரையாக கூறினால் படிக்க சிரமமாகும் என்ற அடிப்படையில் மூஸா நபியின் வரலாறுகள் அடங்கிய சில சூராக்களின் அட்டவணையை மட்டும் இங்கு கூறுகிறேன்.(61ஸூரத்துஸ் ஸஃப்ஃபு) (45ஸூரத்துல் ஜாஸியா) (44 ஸூரத்துத் துகான்) (43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (40 ஸூரத்துல் முஃமின்) (5 ஸூரத்துல் மாயிதா) (3 ஸூரத்துல்ஆல இம்ரான்) (4ஸூரத்துன்னிஸாவு) (2 ஸூரத்துல் பகரா) (26 ஸூரத்துஷ்ஷுஃரா) (29 ஸூரத்துல் அன்கபூத்) (32 ஸூரத்துஸ் ஸஜ்தா) (33ஸூரத்துல் அஹ்ஜாப்) (25 ஸூரத்துல் ஃபுர்ஃகான்) (23ஸூரத்துல் முஃமினூன்) (19 ஸூரத்து மர்யம்) (7 ஸூரத்துல் அஃராஃப்) (14ஸூரத்து இப்ராஹீம்) (10 ஸூரத்து யூனுஸ்) (11ஸூரத்து ஹூது) (6 ஸூரத்துல் அன்ஆம்) (37ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்) (28 ஸூரத்துல் கஸஸ்) (41ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா) (20 ஸூரத்து தாஹா) (27ஸூரத்துந் நம்லி) மொத்தமாக மூஸாவின் வரலாறு இதில் அடங்கியுள்ளது மேலும் சில சூறாகளிலும் உள்ளது.
பாகம் 3 தொடரும்
Comments
Post a Comment