9:24 அல்லாஹ்வின் வேதனையே எதிர்பாருங்கள் பாகம் 5

 பாகம் 5


4 ஆம் பாகத்தில் ஜெருசலம் எப்படி அல்லாஹ் அழித்தான் என்று பார்த்தோம். ஒவ்வொரு வீடும், தேவாலையமும் முழுவதும் இடித்தது தொல்பொருள் ஆராட்சியும், பைபிளும் தெளிவு படுத்தியது இதையே இப்னு கசீர் தஃப்சீரும் விளக்குகிறது.

அதன் பின் இஸ்ரவேலர்களுக்கு எப்படி அல்லாஹ் உதவி செய்தான் என்பதை இப்போது பாப்போம்.


இப்படித்தான் அல்லாஹ் தான் நாடும்போது அவன் மனிதனுக்கு செய்வது.


முஸ்லீம்கள் இது அவர்களுக்கு அவர்கள் வேதத்தில் அவர்களுக்கு எச்சரிக்கும் வசனம், இது நமக்கு பொருந்தாது என்று சொல்வது வேடிக்கைதான்,

அவர்களுக்கு எச்சரித்த (கொடுத்த) வேதனையை நமது குர்ஆனில் ஏன் அல்லாஹ் (நமக்கு)வைக்க வேண்டும் சிந்திக்க வேண்டமா?


இதை அல்லாஹ் நமக்கு கூறுவதன் அர்த்தம் அவர்களுக்கு அறிவுரை நான் கூறினேன் அவர்கள் எல்லை மீறினார்கள். அவர்களுக்கு வேதனை கொடுத்தேன்.


இப்போது முஸ்லீங்களாகிய உங்களுக்கு குர்ஆனில் அறிவுரை கூறியுள்ளேன், அதை நீங்கள் மீறினால் உங்களையும் தண்டிப்பேன் என்பதே அதன் அர்த்தம்.


தாலூத் நபியை அரசாராக ஆக்கியப்போது இவரை அரசராக்க என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி போல்


அரபு மக்களுடைய கேள்வி இருக்கிறது


மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”

(அல்குர்ஆன் : 43:31)


இதே போல் ஏராளமான வசனம் அவர்களுக்கும் நமக்கும் பொருத்தமாக அமையும்.


அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களுக்கு கொடுத்த முதல் அழிவிற்கு பின்பு அவர்களுக்கு நாடிய கருணை


17:6. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் (பனி இஸ்ரவேளர்களின் பால்) திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.


இது என்ன உதவி என்னவென்று கீழே காண்போம்.


வெற்றி வாய்ப்பு தான் ஆலயம் நிர்ணயம் செய்ததும், அவர்களை அந்த ஊரில் குடியமர்த்தியதும் 


பின்பு அல்லாஹ் அந்த ஆலயத்தை நிர்ணயம் செய்தது பற்றி கூறுகிறான், அந்த ஜெருசலத்தில் இருந்து கைதியாகவும், அடிமைகளாகவும் பாபிலோனுக்கு பனி இஸ்ரவேலர்களை நாடு கடத்திய பின்பு அவர்களுக்கு குழந்தைகள் அதிகமாக அவர்களுக்கு கொடுத்து பின்பு அவர்களுக்கு நபிமார்களையும் கொடுத்து அல்லாஹ் உதவி செய்தான் அப்போது வந்த நபி மார்கள் யார் என்று சில நிகழ்வுகளும் நடக்கும் அதை வரலாறுகளில் பொருத்தி பார்ப்போம் 


குர் ஆன் 


2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.



இங்கு ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரை மட்டுமே கூறப்படுகிறது இவர் யார் என்ற விவரங்கள் தபிஸீர்ரில் கிடைக்கிறது.


தபிஸீர் (இஜ்மா) இல்லாமல் இந்த வசனத்தை ஒருவர் தீர்வு கூற முடியாது


இது சவாலாக கூட உங்களிடம் வைக்கிறேன்,இந்த வசனம் படித்து புரியாமல் வேறு ஒருவரிடம் சந்தேகம் கேட்டால் (அதன் பெயர்தான் தப்ஸீர்) 


உஸைர் நபி (ezra) என்பது கி,மு,500 வாக்கில் நல்ல மனிதர் ஒருவரது பெயராகும்.அவர் இறைத்தூதர் என்பதில் கருத்துவேறுபாடு உண்டு பெரும்பாலோரின் கருத்து அவர் ஒரு இறைத்தூதர் என்பது விவிலியம் பழைய ஏற்பாட்டில்  இவரது பெயர் எஸ்ராவின் புத்தகம் என்றொரு ஆகமம் உண்டு இவர் தவ்ராத்தை (தோரா)எழுதியவர் என்று கூறப்படுகிறது அவர்தான் இஸ்ரவேலர்களை மீட்டு வந்து பாலஸ்தீனம் சேர்த்தார் அங்கு ஜெருசலம் (பைத்தில் மக்தஸ்) பாழடைந்து கிடந்தது nebuchad nezzar என்ற மன்னன் ஜெரூசலத்தை தரைமட்டமாக்கி இருந்தான்.அதை கண்டபோது.அவர் உஸைர் நபி இதை எப்படி அல்லாஹ் புனரமைப்பான் என்று வியந்து போனார் (தபஸீர் மாஜிதி)



இந்த ஊரை கடந்து சென்றவர் யார் என்று பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன அவர் உஸைர் என்பவராவார் என அலி பின் அபீதாலிப் ரலி அவர் கூறியதாக ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது.


இதையே கத்தாதா,ஹசன் அல் பஸரி (ரஹ்),இப்னு அப்பாஸ் (ரலி)ஆகியோரிடமிருந்து இப்னு ஜரீர் (ரஹ்)அவர்கள் இதையே அறிவித்துள்ளார்கள். இந்த கருத்து மிகவும் பிரபலமானதாகும்.


சிலர் அவருடைய பெயரை ஹஸ்கீல் பின் புவார் என்று குறிப்பிட்டுள்ளனர்.


முஜாஹீத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர் இஸ்ரவேலர்களை சார்ந்த ஒருவராவர் 


(பின்னர் அந்த ஊர் விஷயத்திலும் சில கருத்து வேறுபாடு காணப்படுகிறது.எனினும்)பைத்தில் மக்தஸ் என்பதே பெரும்பாலான கருத்தாகும். பக்த் நஸ்ர் என்ற அரசன் அந்த ஊரை அழித்து நாசமாக்கிய அங்கிருந்த மக்களையும் கொன்றான்.அதற்க்கு பிறகு உஸைர் அந்த ஊரை கடந்த போதுதான் இந்த சம்பவம் 


அந்த ஊரை அவர் கடந்த பொது சிறிது நேரம் நின்று பிரம்மாண்டமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான பின்பு இந்த ஊரை அல்லாஹ் எப்படி நிர்மாணிப்பன் என்று சிந்தித்தார் அதன்பிறகு இதை எப்படி உயிர்ப்பிக்கப்போகிறான் என்று சொல்லிக்கொண்டார் அதாவது இந்த ஊரு கடுமையாக சேதமுற்றும் சிதிலமடைந்தும் இருந்ததை பார்த்துவிட்டு அந்த பழையநிலைக்கு கொண்டுவரமுடியுமா என்று எண்ணினார்.


அவரை அல்லாஹ் நூறாண்டுகள் வரை இறக்கச்செய்து பின்னர் எழுப்பினான்.உஸைர் இறந்து 70 ஆண்டுகள் முடிந்தபின் அந்த ஊர் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.மக்கள்தொகையும் பெருகியது.இஸ்ரவேலர்களும் அங்கு திரும்பி வந்தனர்.(இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 713,714)


அந்த நூறாண்டுகள் இடைவெளியில் அந்த ஜெருசலம் புணரமைக்கப்பட்டதாகவும் சில தகவல் அடிப்படையில் உறுதிப்படுத்துகிறேன் இங்கு 


நெகேமியா


1 அதிகாரம்


1. அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,


2. என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.


3. அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.


4. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:


5. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,


6. உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.


7. நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.


சுருக்கமாகச் சொன்னால், நெகேமியா ஜெருசலேமின் நகரச் சுவர்களை மீண்டும் கட்டியதாக பைபிள் சொல்லும் நேரத்தில்தான் கோபுரமும் சுவரும் கட்டப்பட்டன—சுமார் தோராயமாக கிமு 445-ல் என்றும் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தின் ஈலாட் மசார் குறிப்பிடுகிறார்கள் 


இதை குர் ஆன் எப்படி கூறுகிறது எப்படி என்று  பாருங்கள் 


17:6 வது அத்தியாயம் படியும் பனி இஸ்ரவேலர்களுக்கு கருணை கொடுத்து வாரிசுதாரர்களாக ஆக்கி வைத்தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.


இந்த வரலாறுகளில் பனி இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் நாடினபோது அவர்களுக்கு கருணை கொடுத்து பின்பு அந்த புனித இடத்திற்கு வாரிசுதாரர்களாக ஆக்கி அவர்களை ஆட்சியார்களாக ஆக்கினான் (17:6 வது அத்தியாயம் படி )


பாகம் 6 தொடரும்

Comments