9:24 அல்லாஹ்வின் வேதனையே எதிர்பாருங்கள் பாகம் 6

பாகம்  6


5 ஆம் பாகம் பனி இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கொடுத்த உதவியை பார்த்தோம்.


நபிமார்களின் உதவி மூலம் அவர்களுக்கு கொடுத்த கருணை பார்த்தோம்.


உசைர் நபி பின்புதான் நபி ஈஸா அலை அவர்கள் 500 ஆண்டுகளுக்கு பின்பு வருகிறார்கள்.


நபி ஈஸா அலைஹி அவர்கள் பின்பு அவர்கள் மீது அல்லாஹ் நபிமார்களை அனுப்புவதை நிறுத்திவிட்டான். (கோபமும் கொண்டான்) அல்லாஹ்வின் கோபதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.


குர்ஆனில் நபி ஈஸா அலை அவர்களை மட்டும் இல்லை இந்த நபியை போன்று ஏராளமான நபியை கொல்ல திட்டம் இட்டு இருக்கிறார்கள் நபிமார்களை கொன்னதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.


நபி ஈஷா அலை அவர்களை பற்றி சுருக்கமாக குர் ஆன் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.


3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் "ஆகுக" எனக் கூறினான்; அவர் ஆகிவிட்டார்.


ஆதம் அலை அவர்கள் போன்றே நபி ஈஷாவும் puridy என்பது இதிலிருந்து தெரியவருகிறது.


ஈஷா நபிக்கு கொடுத்த அற்புதங்கள்.


3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் அவர்களிடம், அவர்:) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைப்போல் உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும்; அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் குணப்படுத்துவேன்; இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேமித்துவைப்பவற்றையும் நான் உங்களுக்கு எடுத்துக்கூறுவேன்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் (திடமான) ஓர் அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).


இவ்வளவு அத்தாட்சிகளை அவர்களுக்கு ஈஸா நபி காண்பித்த பின்பும் அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் என்று பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை


பனி இஸ்ரவேலர்களிடம் நபி ஈஷா வந்ததன் நோக்கம்.என்னவென்றால் அவர் அந்த மக்களிடம் கூறியது (43:63 நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக்கூறுவேன் என்பதற்க்காக ) இது அவர் பனி இஸ்ரவேலர்களிடம் கூறின வார்த்தைகள் இந்த வசனத்தோடு ஒத்துப்போகிறது மேலும் முழுமையாக அல்லாஹ்வே அறிந்தவன் என்று (இப்னு கஸீர் கூறுகிறார்.பாகம் 2 பக்கம் 83)


3:50. "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்ப்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின்பற்றுங்கள்!"


43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: "மெய்யாகவே, நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக்கூறுவேன்; ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், எனக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்.


இவர்கள் பிரச்சாரத்தை அவர்கள் ஏற்கவில்லை 


மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

(அல்குர்ஆன் : 2:87)



3:52. அவர்களில் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள்: "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கிறோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். திட்டமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றும் நீர் சாட்சி கூறுவீராக!" எனக் கூறினர்.


அவருக்கு உதவி செய்தவர்களும் இருந்தார்கள்,சூழ்ச்சி செய்தவர்களும் இருந்தார்கள்.


3:53. "எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே, எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சீடர்கள் பிரார்த்தித்தனர்).


3:54. இன்னும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொல்ல) சதி செய்தார்கள்; (எனினும் அல்லாஹ் அவரை இரட்சித்துக் கொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ்வும் (அவர்கள் விஷயத்தில்) சதி செய்தான்; அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.


ஈஸா அலை அவர்களை எப்படி கொலை செய்ய திட்டம் செய்தார்கள் என்பதை பின்வருமாறு இப்னு கசீர் விளக்குகிறார் 


அவர்கள் நபி ஈஸாவை மறைமுகமாக கொல்ல திட்டம் இட்டு இருந்தனர் அவருக்கு தீங்கு இழைக்கவும் அவரை சிலுவையில் அறையவும் என்னிருந்தனர், முன்னதாக ஈஷா அலை அவர்களுக்கு எதிராக ஒன்று திரண்ட அந்த கூட்டத்தினர் அக்காலத்து அரசனிடம் ஈஸாவை பற்றி பொய் புகார்கள் கூறிவந்தனர்.


அந்த அரசன் இறை மறுப்பாளராக இருந்தான் இங்கு மக்களை ஒருவர் தவறான வழிக்கு அழைத்துக்கொண்டு இருக்கிறார்.அரசருக்கு கட்டுப்படக்கூடாது என்று கூறி குடிமக்களை குழப்புகின்றார்.தந்தைக்கும்,தனயனுக்கும் இடையே பிளைவை உண்டாக்குகிறார் என்றெல்லாம் இட்டுக்கட்டு கூறினார்கள்.


இதற்க்கு மேலாக அவர் தவறான வழியில் பிறந்தார் என்று அவதூறு கூறி அந்த மன்னனிடம் கோபத்தை கிளறிவிட்டனர்.


அதை அடுத்து அந்த அரசன் ஈஷா நபியை பிடித்து சிலுவையில் அறையவேண்டும் என்பதற்க்காக அவரை தேடி ஆள்களை அனுப்பினான்.ஈஷா நபியின் வீட்டை சுற்றி வளைத்த அரசனின் ஆட்கள் ஈஷா நபியை பிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பியபோது அவர்களிடம் இருந்து ஈஷா நபியை அல்லாஹ் காப்பாற்றினான்,அவர்கள் இருந்த வீட்டின் சாரளம் வழியாக ஈஸாவை வானத்திற்கு உயர்த்திவிட்டு அவர்களது முக சாயலை அவர்கள் வீட்டில் இருந்த மற்றொருவருக்கு அல்லாஹ் கொடுத்தான்.அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அரசனின் ஆட்கள் இரவு நேரத்தில் இருளில் இருந்த அந்த மனிதரை ஈஷா என்று நினைத்து அவரை பிடுத்து கேவலப்படுத்தி சிலுவையில் அறைந்தார்கள் அவரது தலையில் முள் கிரீடத்தை சூட்டினார்கள்.


அவர்களுக்கு மத்தியிலிருந்து தன்னுடைய தூதர் ஈஷா அலை அவர்களை காப்பாற்றிய அல்லாஹ் அந்த மக்களை வழிகேட்டில் உழலுமாறு விட்டுவிட்டான். தமது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அவர்களை நம்ப செய்துவிட்டான் அவர்களின் உள்ளங்களில் இறுக்கத்தையும் உண்மைக்கு மாறான நிலைப்பாட்டையும் நிரந்தரமாக குடியேற்றிவிட்டான் அவர்களை இழிவுக்கும் ஆளாக்கிவிட்டான் அது மறுமை நாள்வரை அவர்களை விட்டு ஒருபோதும் நீங்காது இதுவே அல்லாஹ் அவர்களுக்கு செய்த சூழ்ச்சியாகும்.


இதையே அல்லாஹ் அவர்களும் சூழ்ச்சி செய்தனர் நாமும் சூழ்ச்சி செய்தோம். நாமே சூழ்ச்சி செய்பவர்களில் மிக சிறந்தவன் ஆவேன் என்று இந்த வசனம் கூறுகிறது.


மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

(அல்குர்ஆன் : 2:87)


பனி இஸ்ரவேலர்கள் சபிக்கப்பட்டதன் காரணம் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

(அல்குர்ஆன் : 4:157)


நபி மார்களை கொல்லவும் செய்தார்கள் ஈஸா அலை அவர்களை கொன்றதாகவும் கூறிவிட்டார்கள் இதனாலே அல்லாஹ் அவர்களை சபித்தான்.


இவர்களை பற்றி இங்கு பெரிதாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இதன் தலைப்பு பனி இஸ்ரவேலர்கள் செய்த இரண்டு அத்துமீறல்களை பற்றி இங்கு பார்க்கிறோம்.


இந்த இடத்தில் அவர்கள்  (பனி  இஸ்ரவேலர்கள் ) மட்டுமே குற்றவாளிகள் நாம் (முஸ்லீம்மாகிய மக்கள் நாம் இல்லை நாம்தான் நபிமார்களை கொலை செய்யவில்லையே) என்று கூறலாம்


நபி ஸல் அவர்களின் கும்பத்தை என்ன செய்தோம். அவர்களுடைய குடும்பம் எங்கே இருக்கிறது என்று ஒருவராவது கவலைப்பட்டோமா


சில அறிவுஜீவிகள் நபி ஸல் அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லையே அதனால் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுபுவார்கள்,


நபி ஸல் அவர்களுக்கு குடும்பம் இல்லையென்றால் மறுமையின் அடையாளங்களில் என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்தான் மஹதி என்று சொன்னார்களே அது என்ன


வேறு ஒரு தலைப்பில் என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவிரில் இருந்துதான் ஒரு ஃபித்னா தலைதூக்கும் ஆனால் அவர் என்னுடைய குடும்பமே இல்லை என்று சொல்லும்போதே ரஸூறுல்லாஹ் உடைய குடும்பம் இருக்கிறது என்று தெரியவில்லையா.... 


நபி ஸல் அவர்களுடைய குடும்பத்தை அவர்கள் பாதுக்காக்க சொல்ல வில்லையே என்றும் நினைக்கலாம் குர்ஆனில் ஒன்றுகூட்டுதல் (அல் ஹஷ்ர்) அத்தியாயம் கூறும் நோக்கம் என்ன என்று சிந்திக்கவும் இந்த சூரா யாரை பற்றி கூறுகிறது என்று கூறவும் இந்த சூராவில் யார் யார் சம்பந்த படுகிறார்கள் என்று பார்க்கவும். ஏனென்றால் இந்த கட்டுரையின் நோக்கம் பனி இஸ்ரயிலின் அழிச்சாட்டியங்களை பற்றி கூறவே



நபி ஈஷா அலை அவர்கள் அவர்களுடைய சீடர் ஒருவர் இந்த கட்டிடங்கள் எப்படி பட்டது பாரும் என்று ஜெருசலேமில் உள்ள அவர்களின் தேவாலயத்தை பற்றி கேட்கிறார்.


 நபி ஈஸா அலை அவர்கள் அவர்களுக்கு வரும்காலங்களில் முன்னறிவிப்பு செய்கிறார்கள் பின்வரும் காலங்களில் நீங்கள் காணும் இந்த கட்டிடங்கள் ஒரு செங்கல் கூட இல்லாமல் இடிக்கப்படும் என்று  கூறுகிறார்கள் (இதற்க்கு அர்த்தம் நீங்கள் அழிச்சாட்டியம் செய்வீர்கள் அல்லாஹ் இந்த ஜெருசலமை தரைமட்டமாக்குவான் என்பதே அதன் பொருள் )

விவிலியம் புதிய ஏற்பாட்டில் 


புதிய ஏற்பாடு


மாற்கு


13 அதிகாரம்

                                                                                                                                                  1. அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.


2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்


இதன் பின்பு நபி ஏதும் வராததால் அதனுடைய வரலாறு விரிவாக குர் ஆனில் கிடைக்கவில்லை தபிஸீர்களில் கிடைக்கும்.


பாகம் 7 தொடரும்


Comments