9:24 அல்லாஹ்வின் வேதனையே எதிர்பாருங்கள் பாகம் 9

பாகம் 9


பாகம் 8 இல் யூதர்களின் அழிவும் ரோமர்களின் வளர்ச்சியும்,தேவாலயத்தை அழித்ததையும் பார்த்தோம்,


இப்போது ஜெருசலமில் இருக்க கூடிய தேவாலையம் சுலைமான் நபி காலத்தில் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஷா இல்லை,இரண்டாம் கோவில் அழிக்க பட்டு விட்டது, அவர்களின் வேதத்தில் மூன்றாம் கோவில் கட்டுவது குறித்து குறிப்பு இருக்கிறது (இதை குறித்து நிறைய கருத்து வேறுபாடு இருப்பதால் இந்த கட்டுரையில் விட்டு விடுவோம்)


இப்போது ஜெருசலத்தில் இருக்கும் மஸ்ஜித் இரண்டு ஆகும் ஒன்று the dome of the rock,இன்னொன்று உமர் ரலி அவர்கள் கட்டிகொடுத்த ஒரு மஸ்ஜித் (இரண்டும் ஒரே வளாகத்தில் இருக்கிறது)


கி. பி 70 முதல் கி. பி 1900 வரை பனி இஸ்ரவேலர்களில் உள்ள அநியாயகரர்கள் என்று சொல்லக்கூடிய மக்கள் உலகில் அல்லாஹ்வின் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.


2024 இல் இப்போது அவர்களின் ஆட்சிதான் நடக்கிறது இக்காலகட்டத்தில் அல்லாஹ் அவர்களுக்கு நாடியுள்ளான், இன்ஷாஅல்லாஹ் முஸ்லீங்களுக்கு சோதனை கொடுத்த பின்பு முஸ்லீங்களுக்கு நன்மை நாடுவான்.


அந்த சோதனையை பார்ப்போம் 


 இப்போது இவர்களில் இருந்து நமக்கான சோதனையிலிருந்து படிப்பினை எடுக்கலாம். 


அது மட்டும் இல்லாமல் இப்போது அரபுகளுக்கு அழிவு இருக்கிறது என்ற ஹதீத் ஞாபகம் வருகிறது.


மறுமை நாளின் அருகில் அரபுகளில் மூன்று பிரிவினராக பிரிவார்கள் அதில்  ஒரு பிரிவினர் நோயினாலும்,மேலும் ஒரு பிரிவினர் போரில் புறங்காட்டி ஓடுவதாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றும்,மேலும் ஒரு பிரிவினருகே வெற்றி என்று சொல்வதே இங்கு நினைவு படுத்துகிறேன்  (Musleem:5553)


இந்த தாவா பணியை  அரபு அல்லாத மக்களுக்கு எடுத்து சொல்லும் போது  இது அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த வேலை நமக்கானது இல்லை என்று பெரும்பாலான பேர் சிந்திப்பது உண்டு.


இதை புரிந்துகொள்ள மேலும் ஒரு சிறிய ஹதீத் மூலம் நினைவு படுத்துகிறேன்.


போர் அரபிகளுக்கு கடமை நமக்கு தொழுகை, ஜக்காத், ஹஜ் போன்ற இபாதத் கடமை என்றால்,

உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துன்பம், கஷ்டம் வராமல் சொர்க்கம் போக முடியுமா என்ற அல்லாஹ் கேள்விக்கு எப்படி பொருத்தமாகும்.


நமக்கு கடமை இல்லை என்று வைத்து கொண்டால் இஸ்லாமில் சிறு சிறு விஷயத்தை கவனித்து செய்தால் மட்டுமே அந்த உலகத்தின், சோகம், கஷ்டம் எல்லாம் ஈடாகும்.


ஒருவன் மனதில் கடுகு அளவு பெருமை இருந்தாலும் சொர்க்கம் புகமாட்டான். என்ற விஷயம் சின்னதாக இருக்கலாம் இந்த செய்தி உலகத்தில் எந்த மூலையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்கும் பொருந்தும் 


ஏனென்றால் நபி ஸல் அவர்கள் உலகத்திற்கு ஒரு மூலையில் ஒருவர் இருக்கிறார் என்றாலும் அவருக்கும் அவர் நபி அவர் எப்படி வாழவேண்டும் என்ற அடிப்படை நபி ஸல் அவர்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.


அரபுகள் மத்தியில் ஒரு எண்ணம் உண்டு அது போன்று இஸ்ரவேலர்களுக்கும் இருந்தது அவர்கள் (பனி இஸ்ரவேலர்கள் )கூறினார்கள் எங்களை அல்லாஹ் கொஞ்ச காலம் நரகத்தில் வைத்து இருப்பான் பின்பு சொர்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்கதான் பின்பு நீங்கள் நரகத்திற்கு போவீர்கள் என்று நபி ஸல் அவர்களிடம் கூறினார்கள், அதற்கு நபி ஸல் அவர்கள் நாங்கள் ஒருபோதும் போகமாட்டோம் நீங்கதான் நரகத்திற்கு போவீர்கள் என்று கூறினார்கள் இதே எண்ணம் இப்போ இருக்கும் அரபுகள் மத்தியில் இருக்கிறது.


இதை வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பது இல்லை அரபுகள் அவர்களின் குணங்கள் கண்டாலே தெரியும் அரபுநாடுகளின் சொத்து பெரும்பாலாக சேக் சயீத் போன்ற மன்னர்களின் கையில் உள்ளது ஏழையான அரபுகளும் இருக்கிறார்கள். இதில் வித்தியாசம் தெரியலையா, அரபுகள் மட்டுமே பெரிய பதவியில் இருக்க வேண்டும் மற்றவர்கள்  சிறிய பதவியில் இருக்க வேண்டும்.


இதையெல்லாம் நாம் எப்படி நியாயபடுத்த முடியும் அவர் நாடுகளின் சொத்து அவர்கள்தான் பயன்படுத்த முடியும் என்று அவர்களுக்கு முட்டுக்கொடுப்பவர்கள்.


நபி ஸல் அவர்கள் கைபர்லிருந்த சொத்துக்களை ஏன் 5 பங்காக பிரித்து கொடுக்க வேண்டும் அதுவும் மக்கா இருந்த மக்களுக்கு மட்டும் இல்லை அதை சுற்றி உள்ள மக்களுக்கும்,


அப்போது இப்போது உள்ள அரபுகள் மத்தியில் இனபாகுபாடு இருக்குதா இல்லையா?  ஒரு சில பேர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் அதற்க்காக பாகுபாடு பாக்கும் மக்களையும் நல்லவர்களோடு சேர்க்கமுடியுமா? அதில் பெரும்பாலான பேர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாகத்தான் அடையாளம் காட்டப்படும் இறைவனும் அப்படியே அடையாளம் காட்டுவான் அதற்காகத்தான் பனி இஸ்ரவேலர்கள் வரலாறு கூறினேன். அவர்களில் நல்லவர்கள் இல்லையா என்ன இருந்தார்கள் ஆனால் இறைவன் ஒட்டுமொத்தமாக பனி இஸ்ரவேலர்கள் என்று கூறவில்லையா?


(அவர்கள் மத்தியில் வாழ்பவர்களுக்கு தெரியும்)எப்படியென்றால் எங்களுக்குத்தான் அல்லாஹ் வேதம் கொடுத்தான்,நாங்கள் வேறு அஜமிகள் வேறு என்று எண்ணம் இருக்கிறது. இது ஒருவிதமான பெருமை (நபி ஸல் அவர்கள் கருப்பர்,வெள்ளை,அரபு,அஜமி,செல்வம் உள்ளவன்,இல்லாதவன்,வேறு வேறு இல்லை )என்று கூற கேட்டு இருப்போம்.    


                                                                                                                                                                                                                                                                                                                                              பனி இஸ்ரேலுக்கு கொடுத்த வேலை அவர்கள் மீறினது மூலம் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் அடைந்து,


அடுத்து அரபுகளுக்கு கொடுத்தான்.


4:84. எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக! உம்மைத் தவிர, (வேறு எவரும் இவ்விஷயத்தில்) கட்டாயப்படுத்தப்படுவதில்லை; எனினும், நம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான்; ஏனெனில், அல்லாஹ் வலிமை மிக்கோன்; இன்னும், தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.


அல்லாஹ் நபி ஸல் அவர்கள் தவிர போர் இங்கு கட்டாயப்படுத்தவில்லை (அவர்களுக்கு மிஹ்ராஜ் இரவு நரகம் சொர்க்கம் காட்டினதுனாலோ என்னவோ) ஆனால் மற்றவர்களை ஆர்வமூட்டுகிறான்.இதை யார் வேண்டுமாலும் நிராகரிக்கலாம்.அவனுடைய கூட்டம் போராடிக்கொண்டேதான் இருக்கும்.இதனால் போர் நமக்கு விதிக்கவில்லை என்றும் மனிதன் கூறமுடியாது.ஏனென்றால் 


61:10. நம்பிக்கை கொண்டவர்களே! நோவினைச் செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?


61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருட்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.


அல்லாஹ்வின் பாதையில் செலவிடுகிறவர்களுக்கு அல்லாஹ் வியாபாரம் செய்துவிட்டான்.


இதனால் போர் கடமை இல்லை என்றும் சொல்லமுடியாது,கடமை என்றும் சொல்லமுடியாது. ஒரு மெல்லியகோட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் நான் யோக்கியன் என்றும் ஒருவர் சொல்ல தரமான ஒரு ஆதாரம் வேண்டும். ஏனென்றால் உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்; (53:32)


53:32. (நன்மை செய்வோர் யாரெனின்,) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கியபோதும், நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்தபோதும் உங்களை நன்கு அறிந்தவன்; எனவே, உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்; யார் இறையச்சமுடையவர் என்பதை அவன் நன்கறிவான்.


பின்வரும் சிறு சிறு விஷயம் ஒருவர் வாழ்வில் எப்படி மீறப்படுகிறது, இதையெல்லாம் ஒரு மனிதன் கட்டுப்படுத்துனுமா, வேண்டாமா,


இங்கு கல்வி கற்றவர் கல்வி கற்காதவரை இழிவாக பார்ப்பதும் 


பணம் உள்ளவன் பணம் இல்லாதவனை இழிவாக பார்ப்பதும் 


உடல் ஆரோக்கியம் உள்ளவன் ஆரயோக்கியம் இல்லாதவனை இழிவாக பார்ப்பதும் 


உடல் நல்ல உள்ளவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை இழிவாக பார்ப்பதும் 


தொழுகுபவர் தொழாதவரை இழிவாக பார்ப்பதும் 


தாவா செய்யும் நபர்கள் தாவா செய்யாதவர்களை இழிவாக பார்ப்பதும் 


இன்னும் கூட நிறைய சொல்லலாம் இது எல்லாம் பெருமை,கர்வம் என்ற போர்வையுனுள் வரும்.


தொழுகையாளி மட்டுமே சொர்க்கம் செல்வார் என்று சொல்லமுடியாது


ஜக்காத் கொடுப்பவர் மட்டுமே சொர்க்கம் செல்வார் என்று சொல்லமுடியாது


நன்மை மட்டுமே ஏவுபவர் சொர்க்கம் செல்வார் என்று சொல்லமுடியாது


தீமை மட்டுமே தடுப்பவர் சொர்க்கம் செல்வார் என்று சொல்லமுடியாது


ஒருவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை (தன்னுடைய நற்செயல்) குறித்து ஒருவர் திருப்த்தி கொண்டுவிட்டாலே அவர் நஷ்டத்தில் இருக்கார் என்று நினைத்து கொள்ளலாம்,

காரணம் நபி ஸல் அவர்கள் செய்த செயல் எப்படிப்பட்டது என்று கேட்டாலே கண்ணீர் வருகிறது, அப்படிப்பட்ட தூதர்


ஒரு நாள் இரவு முழுவதும் நின்று கால் வலிக்க அழுது கொண்டு தொழுதுகொண்டு இருக்கிறார் ஆயிஷா நாயகி அவர்களிடம் நீங்கள் முன், பின், மன்னிக்கப்பட்ட தூதர் நீங்கள் இப்படி தொழுகை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டதற்கு நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வுக்கு நல்ல அடியானாக இருக்கவேண்டாமா என்று சொன்னார்         


                                                                                                                                                                                                                                             புஹாரி 806. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். 


அதற்க்கு மறுமையில் நடக்கக்கூடிய தீர்ப்பை பற்றி நீண்ட ஒரு ஹதீத் அறிவிக்கிறார்கள்.


அதில் நபி ஸல் அவர்கள் தன்னை பற்றி கூறும்போது. சொன்ன மிக முக்கியமான வார்த்தை 


இறைத்தூதர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினம் ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்பதே இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும்.


அவர்களே  ( ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!) என்று சொல்லும்போது நம்மளுடைய நிலைமை ?                                                                                                                                                                                                                                                                                                                              சிறிய ஒரு நற்செயல் செய்த பின்பு செய்ததை திருப்த்தி கொண்டு அதை  மற்றவருக்கு எடுத்து சொல்லிவிட்டால் போதும் என்று நினைத்து தன்னுடைய செயலில் யார் திருப்த்தி அடைகிறரோ அவர் அதனை சிந்தித்து கொள்ளட்டும்.


எந்த சூழ்நிலையிலேலாவது நாம் குர்ஆன் வசனத்தை கேட்டு கண்ணீர் வடித்ததுண்டா? இல்லை அப்போது நாம் யோக்கியவான்களா?


இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் : 5:83)


அல்லாஹ்வின் தீனுடைய செயல் மிக பெரியது (அமானிதத்தை பாதுகாப்பது மிகவும் கடினம்)


மனிதனானவன் இறைவனை வர்ணிக்கும் எந்த ஒரு பொருளை விடவும் மிகவும் தூய்மையானவன் (சுபஹானல்லாஹ்)


அதனால் வார்த்தைகள் கூட அமானிதம் ஆகும்.


ஒருவரின் ரகசிய செயலை அல்லாஹ் அம்பலப்படுத்தும் வரைதான் உலகத்தில் நல்லவர்கள். ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஒரு மிக மோசமான செயல்கள் உள்ளன அதையெல்லாம் அல்லாஹ் பாதுகாப்பானாக (ஆமீன்)


முஹ்மீன்களே கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்,கருத்து வேறுபாடு  கொண்டால் கோழையாகுவீர்கள்,


மஸ்ஜிதுல் ஹரம் (மக்கா) நபி ஸல் அவர்கள் காலம் பின்பு பனி இஸ்ரவேலர்களுக்கு அவர்களுடைய தேவாலையம் தகர்த்துக்கப்பட்டது போல் மக்காவும் முற்றுகை இட்டு தகர்க்கப்பட்டது என்ற வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.  (குறிப்பு அவர்களுக்கு தேவாலையம் முழுவதும் தகர்த்துக்கப்பட்டது அது போன்று அப்படியே நடக்கவில்லையே என்று நாம் நினைக்க கூடாது) இனிமேல்தான் அல்லாஹ் நம் மீது கோவம் கொள்வான் என்று இல்லவே இல்லை முன்பே அது நடந்து விட்டது.பனி இஸ்ரவேலர்களுக்கு நடந்தது போல்


(15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது, முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே- 


15:91. இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கிவைப்போம்).)


இதைவிட ஒரு ஆதாரம் தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்.


அல்லாஹ்வுடைய வேதத்தை வைத்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என்ற சொன்னதை மறைத்த சமுதாயத்திற்கு ஒரு பெரிய இழிவு (பேரழிவு) வருவதாக நினைக்கிறேன், அதுவும் மிக அருகில் (நபி ஸல் அவர்கள் காலம் பின்பு மஸ்ஜிதுல் ஹரம்  மீது முற்றுகை இட்ட கால அளவை வரலாற்றில் படித்து தெரிந்து கொள்ளவும்


மனிதனை படைத்த இறைவன் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய அதிகாரம் உள்ளவன் மூஸா அலை அவர்களோ (நூஹ் அலை அவர்களோ) கூறினது இரண்டு பேரில் யார் என்று ஞாபகம் இல்லை.


அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எங்கு தப்பித்து போவீர்கள், இப்போதும் கூட அல்லாஹ் கருணையாளன் அதனால்தான் இப்போது வரை நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், இல்லையென்றால் உடனே உடனே தீர்ப்பு கூறப்பட்டுயிருக்கும் 


அல்லாஹ் மனிதர்கள் யாவரிடதிலிருந்தும் தேவையற்றவன் என்பதை நன்கு புரிந்து கொள்ளவும்.


 இந்த வரலாறுகளை ஏற்கிறவர்கள் ஏற்கலாம், நிராகரிப்பவர்கள் நிராகரிக்கலாம். 


அதனால்  பொத்தாம் பொதுவாக ஒரு செயலை (நன்மையா,தீமையா) என்று  மக்களின் முன் எடுத்து கூறும்போது மனிதர்களாகிய நம் ஒரே ஒரு நபர் கூறும் ஹதீத் மூலம் (அந்த செயலை) மக்களுக்கு எடுத்துத்துரைக்க முற்படுகிறோம்.அது மிக மிக பாரதூரமான விஷயம்.


ஒரு செயலை (நன்மையா,தீமையா) என்று  மக்களின் முன் எடுத்து  சொல்லும் போது மொத்த ஹதீத்களின் தொகுப்பையே ஆராய வேண்டும்,அதன் பின் அதில் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அறிஞ்சர்களின் மத்தியில் பொதுவான கருத்து என்னவாகவோ அதை மக்களுக்கு எடுத்து கூறவேண்டும்.


இதை இரண்டையும் விடுத்தது ,இது தடுக்கப்பட்டவை (ஹராம்) இது அனுமதிக்கப்பட்டது (ஹலால்)  என்றோ முடிவை கூறிவிடாதீர்கள்.                                                                                                                                                                                                                                                                                                                                                முடிவை கூறும் முன் இந்த ஹதீதை படித்து கொள்ளுங்கள்.


புஹாரி : 2051. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:


அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவை இரண்டுக்கு மிடையே சந்தேகத்திற்கிடமான சில செயல்களும் உள்ளன. யார் பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை கைவிடுகிறாரோ அவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் கைவிடுவார்; யார் பாவம் எனச் சந்தேகிக்கப்படுபவற்றைச் செய்யத் துணிகிறாரோ அவர் (பாவம் என்று) தெளிவாகத் தெரிகின்றவற்றிலும் சிக்கிக்கொள்ளக்கூடும். பாவங்கள் அல்லாஹ்வின் வேலிகளாகும். யார் வேலியைச் சுற்றி மேய்கிறாரோ அவர் அதற்குள்ளேயே சென்றுவிடக்கூடும்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அதனால் கருத்து வேற்றுமை கொல்லப்பட்ட ஒரு சமூகம் என்ன ஆனார்கள் என்று நாம் வரலாறுகளில் பார்த்தோம்.


இன்று உலகத்தில் யாரோடு போட்டி போடுகிறீர்கள். யாருக்காக போட்டி போடுகிறீர்கள், எந்த நோக்கத்துக்காக உலகத்தில் இருக்கிறீர்கள் யோசித்தோமா? 


உலகத்தில் ஒன்றை தேவைக்காக பயன்படுத்து போக

அதை ஆசையாக மாற்றுவதை யார் கற்றுக்கொடுத்தது நீங்கள் பின்பற்றும் இந்த புதியது யார் மார்க்கம் இது,

யார் ஒருவர் உலக தேவைக்காக போட்டி போட்டு அதில் தோல்வியுற்று மனம் அதில் சலிவடைந்து போய் ஒருவர் மரணத்தை தேடிப்போறாரோ 

அவர் மனதின் உள்  உலக ஆசையை தவிர வேறு என்ன இருக்கிறது. 


ஒரு மனிதர் சாதனையாளனாக எண்ணி ஒவ்வொரு துறையிலும் ஜெயித்து பல விதமான winnercup வாங்கி வைத்துள்ளர்கள்  அதில் ஜெயித்த அந்த மனிதருக்கு ஓரிரு துளிகளே அதில் அவருக்கு சந்தோசம் இருக்கும் அப்போது சமூகத்தால் ஒரு மனிதற்க்கு அழகிய முன்மாதிரியாக காட்டப்படுவது யாரை, microsoft இல் சுந்தர் பிச்சையா, current ஐ கண்டுபிடித்த எடிசனா, foodball இல் ரொனால்டோவா, சினிமா வில் ரஜினி, ஷாருக்கான், அல்லு அர்ஜுன், மோகன்லால் போன்ற மனிதர்களா


பெண்களுக்காக காட்டப்படும் முன்மாதிரி என்ன என்று பாருங்கள்

ஃபர்தா இல்லாத முஸ்லீம் பெண்கள் மட்டுமே அவர்கள் உலகத்தில் எந்த உயரத்தில் எட்டியுள்ளார்கள் பாருங்கள் என்று மக்களுக்கு மீடியா காண்பிக்கும்.


முஸ்லீம்கள் மத்தியில் நாகரீகம் இல்லாமல் வாழ்க்கை செல்லவேண்டும் என்று பலத்துறைகளில் கீழ்  வேலை நடந்து கொண்டு இருக்கிறது, நமக்கு முன்னால் வரக்கூடிய சிறிய செய்தியையும் இஸ்லாமோடு பொருத்தி பாருங்கள்.


பெண்களை ஃபர்தா உள்ள முஸ்லீம் பெண்களை என்றாவது மீடியா காண்பித்துள்ளதா காட்டமாட்டார்கள், உலகத்தில் முஸ்லீம்களை நாகரீகம் இல்லாமல் உயரத்தில் கொண்டு போய் விடவேண்டும்  என்று அவர்களுக்கு இபிலீஸ் கொடுத்த order.


இங்கு யார் நபி ஸல் அவர்களையும் , காலீத் பின் வலித் அவர்களையும், அம்மார் பின் யாசிர் அவர்களையும் பிலால் ரலி,அப்துல்லாஹ் பின் ஸுபைர்,ஸைத் பின் ஹாரிஸா,ஜாஅபர் பின் அபுதாலிப்,ஹம்சா பின் அப்துல் முதலிப்,குபைப், ஸுபைர் பின் அல்அவ்வாம்,தல்ஹா பின் உபைதுல்லாஹ், அபூ தல்ஹா, உமர், உஸ்மான், அபூபக்கர் இவர்களையெல்லாம் யார் முன்மாதிரியாக விரும்புகிறோம்,


இங்கு பெயர் வைப்பதிலும் இவர்கள் பெயர் வைப்பது கூட இல்லை இப்போது பெயர் வைக்க வேண்டுமென்றாலும் கூட trent ஆக இருக்கனும் என்று தான் வேறு பெயர் வைக்கிறோம்


யார் உலகத்தோடு போட்டி போட்டு இருக்கிறவர்களை போன்று ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் (பொருள் அறிந்து) பாதுகாப்பு கோருவோம்.


அடிக்கடி ஓதும் 7 வசனங்களில் அதன் மொத்த பொருளும் அடங்கி உள்ளது கடைசி 3 வசனம் 


1:5. நீ எங்களை நேர்வழிப்படுத்துவாயாக!

1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல; நெறி தவறியோர் வழியுமல்ல.    .

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                பாகம் 10 தொடரும்

Comments