பாகம் 3
கடந்த இரண்டாம் பாகத்தில் மூஸா நபியை அனுப்பினதையும் மூஸா நபி பற்றி வரலாறு எந்த சூராக்களில் இருக்கிறது என்பதை பார்த்தோம்
இப்போது மூஸா நபி பின் வந்த சில நபி மார்களை பற்றி குர் ஆன் கூறுவதை சில தகவல்கள் மூலமாக காண்போம்
வரலாறாக கூறப்படும் இந்த பாகங்கள் எல்லாம் தொடர்ச்சியாக இல்லாமல் இருப்பது போன்று தோன்றும்.
சூரா பனி இஸ்ரேல்லில் உள்ள வசனம் 4 முதல் 7 வரையில் கூறப்பட்ட பனி இஸ்ரயீல் செய்யும் அழிச்சாட்டியமும், அதே போன்று முஸ்லீம் சமுதாயம் செய்யும் அட்டூழியமும் எப்படி பொருந்தி போகிறது என்ற விளக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது அதனால் வரலாறுகள் தொடர்பு இல்லாதது போல் தோன்றும்.
وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
(அல்குர்ஆன் : 17:4)
இந்த வசனம் இங்கு கூறப்பட்டதன் காரணம் இந்தவசனத்தில் இருந்து படித்து விட்டு மீதி வரலாற்றை புரியவதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக கூறபட்டுள்ளது.
இப்போது தொடங்ககூடிய வரலாறு பனி இஸ்ரவேலர்கள் எவ்வளவு நிராகரிப்பில் ஈடுபட்டு இருந்தும் அல்லாஹ் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நபியை அனுப்பினான், அவர்கள் வந்த நோக்கத்தை பார்ப்போம்
ஷம்வீல் (சாமுவேல்)என்பது கி.மு.1100-1020 பழைய ஷாம் (சிரியா நாட்டில் ) ராமா எனும் ஊரில் வசித்து வந்த இறைத்தூதர் என்று சொல்லப்படுகிறது இந்த நபி யூஷஉ பின் நூன் தான் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் இது ஏற்புக்குரியதன்று ஏனெனில் இந்த சம்பவம் மூஸா அலை அவர்களுக்கு பிறகு நீண்ட காலத்திருக்கு பின் வாழ்ந்த நபி தாவுத் அலை அவர்களது காலத்தில் நடந்ததாகும் மூஸாவுக்கு தாவூதுக்கும் இடையே சுமார் 1000 ஆண்டு கால இடைவெளி உள்ளது ஆகவே தாவூத் அலை அவர்களது காலத்திற்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நபிதான் யூஷஉ தான் அந்த நபி என்று கூறுவது பொருந்தாது (இப்னு கஸீர் ) (பாகம் 1 பக்கம் 680)
தாலூத் ( சவுல்) நபியை தேர்ந்தெடுக்க அவர்கள் எல்லாரும் கூட்டம் கூடி ஷம்வீல் நபியிடம் கேட்டதாக பைபிள் கூறுகிறது. இது குர்ஆனிலும் அந்த நபியிடம் கேட்டதாகவும் கூறுகிறது அந்த நபி பெயர் குறிப்பிடவில்லை பைபிளில் சாமுவேல் என்ற அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருப்பதால் அந்த ஷம்வீல் வரலாற்றுக்கும் ஷம்வீல் நபி மூஸா அலை அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்தான் என்று அறிஞ்சர்கள் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் காணமுடிகிறது, பைபிள் சொல்லும் இந்த வரலாறும் பின் வரும் குர்ஆன் வரலாறும் ஒதுபோகிறது அதனால் ஷம்வீல் (யூஷஉ பின் நூன் தான்) என்று எடுத்து கொண்டால் பைபிள் மற்றும் குர்ஆன் கூறியதற்கு மாற்றமாக வரும்
இது நபி தாவூத் நபி காலத்தை பற்றி பேசுவதால் ஷம்வீல் நபியின் காலத்தையும் எடுத்துக்கொண்டால் மட்டுமே இது பொருந்தும். (இப்னு கசீர் பாகத்தில் கண்டடுக்கப்பட்டதில் உள்ள விளக்கம்)
இப்போது ஷம்வீல் (சாமுவேல்) பற்றி விவிலியம் ஏற்பாட்டில் குர் ஆனில் கூறுவது போன்று இங்கும் கூறப்பட்டுள்ளது.
விவிலியம் ஏற்பாட்டில் கூட சாமுவேலிடம் தான் பனி இஸ்ராயில் மக்கள் எங்களுக்கு ஒரு அரசறை எற்படுத்துங்கள் என்று கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது பைபிளில் மற்றும் குர்ஆனில்
I சாமுவேல்
8 அதிகாரம்
4. அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
5. இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
இப்பொது குர் ஆன் தாலூத், ஜாலூத், தாவூத் இவர்களை பற்றி கூறுவதை பார்ப்போம்
2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
மூஸா நபி இறந்த பின் அவர்களுக்கு பின் வந்த நபியிடம் போரிட ஒரு அரசறை ஏற்படுத்துங்கள் என்று கூறுகின்றனர்
அது ஏன் என்றால் மூஸா நபி இறந்ததும் இவர்கள் ஏற்படுத்தின சில சமூக பிரிவால் யூதர்கள் இல்லாத மன்னனிடம் இருந்து இவர்கள் தாக்குதலுக்கு உட்பட்டு இவர்களிடம் இருந்த மூஸாநபீயுடைய ஒரு பேழை, எடுத்து கொண்டுபோனதோடு சில கொடுமைகளையும் சந்தித்தார்கள் அதனாலே இவர்களுக்கு அல்லாஹ் சில சோதனைகளை கொடுகிறான் அதில் அவர்கள் பொருள், வீடுகள் இழந்து நின்றார்கள் அப்படி நின்றவர்களை பார்த்துதான் அல்லாஹ் போர் இடுவது உங்கள் மீது கடமையானல் நீங்கள் செய்யமாடீர்களா என்று குர்ஆனில் கேட்கிறான்
இதெல்லாம் அவர்களுக்கு உள்ள சோதனை என்ற எடுத்து கொள்ளலாம், பெரிய அழிவாக ஏற்றுக்கொள்வது பொருத்தமாக அமையாது ஏனென்றால் இதற்கு முன் உள்ள அழிவுக்கும் இதற்க்கு பின் உள்ள அழிவுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது, இறைவனால் நிர்ணயிக்க பட்ட புனித பூமியை (பைத்துல் மக்தீஸ் கோவிலை) இறைவனே தன்னுடைய கொடிய அடியார்கள் மூலம் அழித்தாததாக அடுத்த வசனத்தில் கூறுகிறான் ( அந்தவசனத்தில் இடத்தை பற்றி வரவில்லை என்றாலும் இவர்கள் இறைவனுக்கு செய்த மாறுத்தலினால் அந்த ஊரை அளித்ததை இந்த வசனத்திற்கு பொருத்தமாக எடுத்து கொள்ளலாம்)அப்போது பெரிய அழிவாக இதற்க்கு அடுத்து வரும் அழிவுதான் பெரிய அழிவு, ஃபிர்அவுன் மூலம் இருந்த அழிவு வெறும் ஒரு சோதனைதான் என்று வசனத்தில் அப்படியே இறைவன் கூறுகிறான் (சோதனை என்றே)(7:141)
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
தாலூத்தும்,தாவூதும் எப்படிப்பட்டவர் என்று பாப்போம்
தாலூத் என்பவர் பழைய ஏற்பாட்டில் சவுல் (soul ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது இவர் கி.மு 1028 முதல் 1012 வரை என்று சொல்லப்படுகிறது.
தாலூத்தை பற்றி அல்லாஹ் அறிவாற்றல் மட்டும் உடல் வலிமையையும் அதிகமாக வழங்கியுள்ளான் என்று ஷம் வீல் நபி கூறினார் அவர்களுடைய அந்த நபி அல்லாஹ்வால் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கபற்றிப்பதுடன் உங்களை விட அறிவாற்றலாகவும் தாலூத் உள்ளார் சிறந்த பண்பாளராகவும் அவர் உள்ளார் நல்ல தோற்றமுடையவராகவும் உள்ளார் வலிமைமிக்கவராகவும் உள்ளார் போர் நுட்பங்களை நன்றாக முழுமையாக அறிந்தவர் என்றும் உடல் வலிமை பெற்றவர் என்றும் ஷம்வீல் கூறினார்
இந்த வசனத்தின் மூலம் ஆட்சியாளர் அறிவாற்றல் மிக்கவராகவும் நல்ல தோற்றம் உள்ளவராகவும் உடல் வலிமை மன வலிமை பெற்றவராகவும் விளங்க முடிகிறது (இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 682)
இதையே இஜ்மாவாக மக்கள் எடுத்து கொண்டு பின்பற்றினால் அல்லாஹ் ஒரு ஆட்சியாளனை தேர்ந்தெடுக்கும் முறையை போன்று நாமளும் நம்மளுடைய காலத்தில் ஆட்சியாளனை தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் இங்கு தேர்ந்தெடுக்கப்படும் முறை எப்படி என்று பார்த்தால் யாரவது வந்து முஸ்லீம் சமுதாயத்தை காப்பாற்றுவார்களா என்று எதிர்பார்த்து ஆட்சியாளனை தேர்ந்தெடுகிறோம், அவர்களும் ஆட்சிக்கு வந்து தன்னுடைய தேவையை நிறவேற்றி கொள்கிறார்கள்.
இதை நாம் நபி ஸல் அவர்கள் பின் வந்த கலீஃபாக்களில் (அபூபக்கர், உமர் மீது )பொருத்தி பார்க்கலாம்.
இதே போன்று நபி ஸல் குறைஷ் குடும்பத்தில் இருந்து வந்து ஆட்சி செய்தார்கள் ஆட்சி செய்த பின்பு வந்த குலஃபாய ராஷிதீன் அபூபக்கரை,உமரை குறிக்கலாம் ஏனென்றால் இவர்களுக்கு இருக்கும் அந்த (குலம்,ஆட்சி,மன வலிமை,உடல் வலிமை) போன்ற குணங்கள் இங்கு தாலூத்தும் அரச பரம்பரையில் வந்தவரில்லை என்றும் அவருக்கு அல்லாஹ் குடுத்த குணங்கள் பற்றியும் குர் ஆன் கூறுவது ஒத்துபோகிறது.
இதேபோன்று வரலாறு அவர்களுக்கு (ஷஹாபாக்களுக்கு)மட்டும் பொருந்தாது வேறு (வேற்று மொழி பேசும் மக்கள்) உம்மதிலிருந்து வந்த நாம் நபி ஸல் அவர்களுடைய உம்மத்துக்கு மாறிய நமக்கும் பொருந்தும்.நாம் அதை நம் வரலாற்றில் பொருத்தி பார்ப்பதில்லை பொருத்தி பார்த்தால் மட்டுமே தவறுகளில் இருந்து விடுபடலாம். தாலூத் நபிக்கு கொடுத்த அந்த மொத்த குணங்கள் இப்போது வரக்கூடிய மக்களுக்கு ஒரே ஒருவருக்கு மட்டும் கொடுக்காமல் இருப்பதை நாம் பார்க்கிறோம், அந்த திறமைகள் எல்லாம் பல மனிதருக்கு பிரித்து கொடுத்ததாக நான் நினைக்கிறன். காரணம் இந்த நோக்கமாக இருக்கலாம்
இதற்க்கு முன் உள்ள சமுதாயம்,
அவர்களுக்கு (ஒரு சமூகத்திற்கு )அல்லாஹ் ஒரு ஒரு நபியை மட்டுமே அனுப்பி வைத்தான்
ஆனால் நபி ஸல் அவர்களுக்கு பிறகு கடைசிவரை நமக்கு பல சமூகத்திற்கும் சேர்த்து ஒரே நபியாக அரபு சமூகத்தில் உள்ள நபி ஸல் அவர்களை அனுப்பி வைத்துள்ளான்.
தாவூத் நபி
2 வது அத்தியாயம் 247 முதல் 251 வரை ஜாலூத் அவர்கள் வரலாறு சிறிதாகவும் பின்பு ஜாலூத்தை தாவூத் கொன்றதாகவும் ஜாலூத் (இவன் பெயர் கோலியாத் என்றும் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது)இவன் பாலஸ்தீனத்தில் மிக பெரிய சர்வாதிகாரியாக இருந்தான் என்றும் கூறப்படுகிறது (இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 687)
I சாமுவேல்
17 அதிகாரம்
4. அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
5. அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.
6. அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.
7. அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
நபி தாவூத் அலை அவர்கள் david கி.மு.1024 முதல் 963 வரை பெரும் படை வீரராக இருந்து அரசர் ஆனார்கள் அவர்களை அல்லாஹ் தன் தூதராகவும் ஆக்கினான் என்றும் அவர்களுக்கு ஸபூர் எனும் வேதத்தை அருளினான் என்றும் நபி சுலைமானின் தந்தை தாவீது என்று விவிலியம் ஏற்பாட்டில் கூறப்படுகிறது (இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 687)
I சாமுவேல்
17 அதிகாரம்
48. அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
49. தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
50. இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
தாவூத் ஜாலூத்தை கொன்றதை பற்றி கூறுகிறது இந்த தொகுப்பு
பாகம் 4 தொடரும்
Comments
Post a Comment