9:24 அல்லாஹ்வின் வேதனையே எதிர்பாருங்கள் பாகம் 4

பாகம்  4


3 ஆம் பாகத்தில் தாவூத் நபி ஜாலூத்தை கொன்றது வரை பார்த்தோம்

இதில் பனி இஸ்ரயில் செய்த அழிச்சாட்டியத்தினால் மொதல்ல அழிவு அல்லாஹ் எப்படி கொடுத்தான் என்பதை கவனிப்போம்


புஹாரி

3455. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


‘‘இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார்.


மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

(அல்குர்ஆன் : 2:87)



அவர்கள் காலத்தில் ஒரு தூதர் இறந்த பின் மற்றொரு இறைதூதரை இறைவன் கொடுப்பான், அவர்களின் அட்டூழியம் எந்தளவு சென்றது என்றால் நபிமார்களை அவர்கள் பொய்பித்தார்கள், கொலையும் செய்தார்கள்,


முஸ்லீங்களாகிய நாம் நபிமார்களை கொல்லவில்லையே என்று எண்ண வேண்டாம் நாம் நல்லவர்கள் என்றும் என்னவேண்டாம் நாம் அதைவிட பெரிய பாவிகளாக இருக்கலாம் நபி ஸல் அவர்களுடைய குடும்பத்தை எண்ண செய்தோம் என்று கவனிக்க மறந்து விட்டோம்.


நாம்தான் ஒன்றும் செய்யவில்லையே அது அரபுகள் செய்ததுதானே என்று எண்ணுவதும்,நமக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லையே என்று நினைப்பதும் ஒன்றுதான்                                                                                                                                                                                                                                                                                                                    முஸ்லீம்களை பற்றி இங்கு கூறும்போது (நாம்) என்று சொல்லுவோம் அப்படி சொல்வது ஏனென்றால் கலிமா மொழிந்தவர்கள் எல்லாம் இங்கு இறைவனின் பார்வையில் சகோதரர்கள் 


சகோதரர்களில் ஒருவர் தீமை செய்தால் உலகில் நன்மை செய்து கொண்டு இருப்பவரிடம் அல்லாஹ் விசாரணை செய்வான் நான் உனக்கு கூறின (அறிவுரையை) சொல்லை உன்னுடைய சகோதரிடம் கூறினாயா, இல்லையா என்று கேட்பதற்கு வாய்ப்பு நிறைய உண்டு.


இதன் அடிப்படையில் இங்கு கூறுகிறேன். மறைவானதை நான் இங்கு கூறுகிறேன் உண்மையை (எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்)                                                                                                                                                                                                                            


நபி ஸல் அவர்களுடைய குடும்பம் யாருடைய ஆட்சியில் கீழ் கவனிக்காமல் விட்டார்கள் என்று கவனித்தோமா.


59. ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் 7     (அந்த ஊரில் இருந்து மீட்டு கொடுத்தவை அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை ஆகும் என்று அல்லாஹ் கூறுகிறான்- அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், பங்கு போக வேண்டும் (இதை உமர்(ரலி) அவர்கள் காலம் வரை அவர்கள் கவனித்து வந்தார்கள் அதன் பின் யார் யார் இடம் சென்றது.(எப்படி அதை பங்கு போட்டு கொடுத்தார்கள்) அவர்கள் குடும்பம் என்ன ஆனார்கள் என்று கவலை உண்டா ?)                                                                                                                                                                                                                                                                                                                              



அப்போது இந்த முஸ்லீம் சமுதாயம் மக்கள் அவர்கள் பண்ணுனதைவிட மிக பெரிய துரோகமா செய்து இருக்கிறார்களா? இல்லையா?


இன்று வரை ஒருவர் கூட அவர்களுடைய அரிஞ்சர்களிடம் (நபி ஸல் அவர்களுடைய குடும்பம் என்ன ஆனார்கள் என்று)கேட்டது இல்லை.


நபி ஸல் அவர்களுக்கு மகன்கள் இருந்தால்தானே குடும்பம் இருக்கும் என்றும் சிலர் சிந்திக்க வேண்டாம்,(நபி ஸல் அவர்களுக்கு ஏன் மகன்கள் இருக்க வாய்ப்பில்லை என்ற சிந்தனையை கடைசி பாகத்தில் பாக்கலாம்.)


ஒரு ஹதீதில் அலி(ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) அவர்களையும்  என்னுடைய குடும்பம் என்று கூறி இருக்கிறார்கள்,

மறுமை நாளின் அருகில் வரப்போகும் மஹதி அலை அவர்களும் நபி ஸல் அவர்களுடைய குடும்பம்தான்


இதற்கு இடைப்பட்ட நிறைய அடையாளங்களில் என்னுடைய குடும்பம் என்று சில பேரை கூறி இருக்கிறார்கள்

இதற்க்கு இடைப்பட்ட காலத்தில் அவர்களுடைய குடும்பம் எங்கே போனார்கள் என்று கவலை பட்டதும் இல்லை, யோசிச்சது கூட இல்லை 


இப்படி செய்த மக்களை அல்லாஹ் என்ன செய்வான்,


அல்லாஹ்வின் கோபத்தைதான் நாம் வரலாற்றில் காணாப்போகிறோம்.(எழுத்திலும்,நிஜத்திலும்)


நாம் மூஸா நபிக்கு கொடுத்த வேததில் (தவ்ராத்தில்) பனி இஸ்ரவேலர்கள் செய்த தவறை அல்லாஹ் நமக்கு சொல்லித்தருகிறான். 


17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்

ஆணவத்தோடு நீங்கள் நடப்பீர்கள் என்று தவ்ராத்தில் பனி இஸ்ரவேலர்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்து இருந்தான்

அதை நமக்கு அவர்களுக்கு எப்படி முன்னறிவிப்பு செய்தான் என்றும்


அவர்கள் எப்படி வாக்குறுதி மீறினார்கள் என்றும்

அதற்க்கு கொடுத்த வேதனையும் நீங்கள் வரலாறில் பார்க்கலாம்.


அவர்கள் செய்த தவறும் அதற்க்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று மட்டும் குர்ஆன் கூறும்

அது எப்படி என்று மனிதனாகிய நாமே தேடி சென்று படிப்பினை பெறணும்.


குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.    

(அல்குர்ஆன் : 7:84)


17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்


நான் இதுவரை கூறியது அவர்களுடைய அழிச்சாட்டியம் பற்றி இனி அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த முதல் பெரிய தண்டனை 


பனி இஸ்ராயீல் சூராவில் 4 வசனம் அடுத்து 5 வசனத்தின் இடைவெளி என்னவோ ஒன்றுதான் (அதை அடுத்ததடுத்த வசனத்தில் கூறிவிட்டான்) அதை அவர்களின் காலத்தின் பொருத்தி பார்த்தோமானால் கிட்டத்தட்ட 2400 வருடம் ஆகும் 



குறிப்பு : நபி ஸல் அவர்களுக்கு முன்பு வரை வரலாறுகள் சரியாக கிடைக்காததால் துல்லியமாக எடுத்து கொள்ளமுடியவில்லையென்றாலும் சில ஆய்வின் அடிப்படையில் அனுமானம் இட்டு கூற இயலும் அதன் அடிப்படையில் இந்த வருடக்கணக்குகள் மூலம் பின்வரும் வரலாறுகளை தருகிறோம்


17:5. எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.



Nebuchadnezzar II    (பாபிலோனிய பேரரசர்) இந்த வரலாறு பொதுவாக எல்லாராலும் பேசப்படுகிற வரலாறு குர் ஆனில் இந்த வசனத்தோடு ஒத்துப்போகிறது 


சிதேக்கியா என்றவர் யூதர்களின் ராஜாவாக நியமிக்கப்பட்டதிலிருந்து, சிதேக்கியா என்பவர் பாபிலோனிய கட்டுப்பாட்டை தூக்கி எறிவதற்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தார். அப்போது  கிமு 595 இல் பார்வோன் நெக்கோ II இறந்த பிறகு, சூதாட்டத்தில் பனையதிற்க்காக பணம் கொடுக்காமல் தலைமறைவாக போனதிற்க்காக விவகாரங்களில் எகிப்திய தலையீடு அவரது வாரிசுகளான Psamtik II (r. 595-589 BC) மற்றும் Apries (r. 589-570 BC) ஆகியோரின் கீழ் மீண்டும் அதிகரித்தது. -பாபிலோனிய கிளர்ச்சிகள்.[48] கிமு 601 இல் எகிப்தின் மீது படையெடுப்பதில் பாபிலோனியத் தோல்வியானது பாபிலோனியப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டுவதற்கு உதவியது. இந்த முயற்சிகளின் விளைவு நேபுகத் நஸ்சர்  அதிகாரத்திற்கு எதிராக சிதேக்கியா என்பவரின் வெளிப்படையான கிளர்ச்சியாக இருந்தது  துரதிர்ஷ்டவசமாக, இக்காலத்திலிருந்து கியூனிஃபார்ம் ஆதாரங்கள் எதுவும் பாதுகாக்கப்படவில்லை, மேலும் யூதாவின் வீழ்ச்சியின் அறியப்பட்ட கணக்கு விவிலியக் கணக்கு மட்டுமே


ஜெருசலேமை அழித்துகைதிகளை அழைத்துச் செல்லும் பாபிலோனியர்களின் ஓவியம் மற்றும் 

ஜெருசலேமின் அழிவு மற்றும் பாபிலோனிய சிறையிருப்பின் ஆரம்பம், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பைபிள் உவமையில் சித்தரிக்கப்பட்டுள்ளது


கிமு 589 இல், சிதேக்கியா என்பவர் நேபுகத் நஸ்சர்க்குக் கப்பம் செலுத்த மறுத்துவிட்டார்,


மேலும் அவர் தீரின் அரசரான மூன்றாம் இத்தோபால் என்பவர் சிதேக்கியாவின்  அவரைப் பின்தொடர்ந்தார். கிமு 587 இல், அம்மோன், ஏதோம் மற்றும் மோவாப் ஆகிய நாடுகளும் இதேபோல் கலகம் செய்தன. 


சிதேக்கியாவின் எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில்,[48] நேபுகத் நஸ்சர் கி.மு. 586 இல் யூதா இராச்சியத்தை கைப்பற்றி அழித்தார், 

அவரது ஆட்சியின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகும். 


586 கி.மு. கோடையில் முடிவடைந்த இந்த பிரச்சாரம், 

யூதாவின் நிரந்தர முடிவான ஜெருசலேம் நகரத்தின் சூறையாடலுக்கும் அழிவுக்கும் வழிவகுத்தது, 


மேலும் யூதர்கள் கைப்பற்றப்பட்டு பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டதால், பாபிலோனிய சிறைப்பிடிப்புக்கு வழிவகுத்தது.  தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் ஜெருசலேமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அழிக்கப்பட்டு மக்கள்தொகை இல்லாததை உறுதிப்படுத்துகின்றன.


இந்த நேபுகத் நஸ்சர் கொடுத்த இஸ்ரேல் மக்களின் அழிவின் பின் அந்த மக்களுக்கு அல்லாஹ் மீண்டும் ஒரு கருணை காண்பிக்கிறான்.


(சில அழிவுகளை விவிலியம் ஏற்பாட்டில் எரேமியாவில் கூறியுள்ளது) 


எரேமியா


52 அதிகாரம்                                                                                                                                              


13. அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.


14. காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.


15. ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.


16. ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.)       


                                                                                                                                                                                                               பாகம் 5 தொடரும்

Comments