குர் ஆனில் முன் (காலம்)சென்ற மக்கள் தவறு செய்திருப்பின் பின் (காலம்) மக்களுக்கு வரும் வசனம் தெளிவுபடுத்திவிடும்
சிலவரலாற்றை புரியாத மக்களுக்கு தப்ஸீர் (போதுமானதாக இருக்கும்)
குர்ஆனில் 'பனி இஸ்ரேல்' என்பது நபி யாகூப் அஸ் அவர்களின் வழித்தோன்றல்களைக் குறிக்கிறது. 'இஸ்ரேல்' என்ற வார்த்தை எபிரேய மொழியில் இருந்து வந்தது, ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதில் அறிஞர்கள் மத்தியில் வேறுபடுகிறார்கள்.தோழர் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரழி அவரின் கருத்துப்படி, , இஸ்ரா-எல் என்றால் "கடவுளின் (-எல்) வேலைக்காரன் (இஸ்ரா)'.2
பனி இஸ்ராயீல் என்பது ஜகோபாஸ் நபியின் வழித்தோன்றல்களைக் குறிக்கிறது. பனி என்றால் மகன் மற்றும் இஸ்ரேல் என்பது ஜகோபாஸ் நபிக்கு வழங்கப்பட்ட பட்டம். இந்த வார்த்தை இஸ்ரேலின் மகன்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இது (Abdul Hadi Masood phase one the 1924 journey)என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவலின் அடிப்படையில் பதிவிடுகின்றேன்.
யஃகூப் நபி அவருக்கு வஹி (வேதம்) அறிவிக்கப்பட்டதற்கு,கடைசியில் தன் மகன்களுக்கு உபதேசித்ததும்,அதற்க்கு அவருடைய மகன்கள் ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் சாட்சிம் கூறினர் (2:83,84)(2:132,133)(4:163)(6:84)
இதன் அடிப்படையில் அவர்கள் அந்த அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது,பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்பதும் ,மனிதர்களிடம் அழகானதைப் பேசவேண்டும் என்றும் ,தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வரும்படியும்,; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வரும்படியும் வாக்குறுதி கூறிய இறைவனின் வார்த்தையை மீறியதாலும் அவர்களை ஃபிர்அவுன் மூலம் சில காலம் அவர்களுக்கு சில சோதனை கொடுத்தான்.
(இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 166) ஃபிர்அவுன் என்பது பண்டைய எகிப்த் அரசர்களின் புனை பெயராகும் பெரும்பாலும் அவர்கள் கொடுங்கோலர்களாக இருந்தார்கள் அவனது பெயர் வலீத் பின் முஸ்அப் பின் அர்ரய்யான் இரண்டாம் ரம்சேஸ் இவன் அமாலிகா அரசபரம்பரையில் இருந்து வந்த கி மு 15 ஆம் நூற்றாண்டின் எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு சர்வாதி காரி ஆவான்,............ (பனி இஸ்ராயீல் இல்லை இவன்)
இந்த ஃபிர்அவுன் பற்றி சிறிய தொகுப்பு பாப்போம்.
பனி இஸ்ரவேலைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் ஃபிர்அவுனிடம் உங்கள் ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒருவர் பனி இஸ்ராயீலின் சந்ததியில் இருந்து வருவார் என்று ஃபிர்அவுனிடம் அவர் கூறியதால், பனி இஸ்ரவேலர்களில் யாருக்கு குழந்தை பிறந்தால், அது இறக்க வேண்டும் என்று அவர்மக்களிடம் கட்டளையிட்டார். அவ்வாறு அவர்களும் கொல்லப்பட்டனர். (தபிஸீர் அல்தகி உஸ்மானி)
இதே நீங்கள் பைபிளும்,The Talmud Selections, page 124. 23)., காணலாம்
தபிஸீர் மௌதூதி
பைபிளில் அதன் விளக்கம் இதுதான்:
"அப்போது எகிப்தில் யோசேப்பை அறியாத ஒரு புதிய ராஜா இருந்தார்,
மேலும் அவர் தனது மக்களிடம் கூறினார்: 'இதோ, இஸ்ரவேலர்கள் அதிகம். நம்மை விட அவர்கள் பலமாகிவிட்டார்கள், எனவே நாம் அவர்களை புத்திசாலித்தனமாக கையாள்வோம், அவர்கள் அதிகமாகி, அந்த நேரத்தில் போர் வெடிக்கும் போது, அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து எங்களுடன் சண்டையிட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்.
அதனால்தான் அவர்கள் மீது பிச்சைக்காரர்களை போன்று அவர்களை நியமித்து அவர்களைத் துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து கடின உழைப்பைப் பெற்றார்கள்.
எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைச் சித்திரவதை செய்து, அவர்களை வேலை செய்ய வைத்து, சாந்தையும் செங்கற்களையும் செய்து, வயல்களில் எல்லாவிதமான வேலைகளையும் செய்து, அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பானதாக்கிவைத்து அவர்களை பாரோவின் சேமிப்பு நகரங்களை சிரமப்பட்டு மற்றும் காமிஸைக் கட்டினார்கள்
. அவர்களுக்கு அவர்கள் செய்யும் அனைத்து சேவைகளும் சித்திரவதைகள்தான். . . . . . .
அப்போது எகிப்து அரசன் எபிரேய மருத்துவச்சிகளிடம் கேட்டான். . . . . . . எபிரேய (அதாவது இஸ்ரேலிய) பெண்கள் பிரசவிக்கும் போது அவர்கள் கல் இருக்கைகளில் அமர்ந்திருப்பதைக் கண்டால் மகனாக இருந்தால் கொன்றுவிடுங்கள்,
மகளாக இருந்தால் வாழ விடுங்கள் என்று பேசிக் கொண்டார்கள். (யாத்திராகமம், அத்தியாயம் 1, வசனம் 8,)
16). ஹஸ்ரத் யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு எகிப்தில் ஒரு தேசியவாதப் புரட்சி ஏற்பட்டது என்றும், அதிகாரம் மீண்டும் கோப்ட்களின் கைகளுக்கு வந்ததும் என்றும் கூறப்படுகிறது, புதிய தேசியவாத அரசாங்கம் பனி இஸ்ரேலின் அதிகாரத்தை உடைக்க முடிந்தவரை முயற்சித்தது. .
இது சம்பந்தமாக, இஸ்ரவேலர்கள் அவமானப்படுத்தப்பட்டனர் மற்றும் குறைந்த அளவிலான சேவைகளே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது அது போதாதுஎன்று,
அவர்களிடம் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது,
மேலும் அவர்களின் ஆண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருக்க வேண்டும் அவர்களின் பெண்கள் தேசியவாதப் புரட்சியால் கைப்பற்றப்படுவார்கள் என்றும் இஸ்ரேலுக்கு பதிலாக அவர்களிடமிருந்து ஒரு காப்டிக் இனம் பிறக்கும் என்றும் அவர்களுக்கு மத்தியில் எண்ணம் இருந்தது.
இதன் பின் ஹஸ்ரத் யூசுப் (AS) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த புரட்சி நடந்ததாக (யூத ஞ்சிகலைக்களயம் கட்டுரை தி டால்முட் தேர்வுகள் விவரங்களை வழங்குகிறது.
புதிய தேசியவாத அரசாங்கம் ஆரம்பத்தில் இஸ்ரேலியர்களின் வளமான நிலங்களையும் அவர்களது வீடுகளையும் சொத்துக்களையும் பறித்ததாக அவர் கூறுகிறார்.
பின்னர் அவர்கள் அனைத்து அரசாங்க பதவிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர், தேசியவாதப் புரட்சி ஆட்சியாளர்கள் இஸ்ரேலியர்களும் அவர்களது இணை மதவாதிகளான எகிப்தியர்களும் போதுமான சக்திவாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்த பிறகும், அவர்கள் இஸ்ரேலியர்களை அவமானப்படுத்தத் தொடங்கினர், மேலும் அவர்கள் கடினமாக உழைக்கத் தொடங்கினர் ஊதியம் இல்லாமல் அவர்கள் கொடுமை படுத்தப்பட்டனர்.
அவர்கள் எகிப்தின் மக்கள்தொகையில் ஒரு பிரிவினரை அவமானப்படுத்தினார் என்பதும் (குர்ஆனின் கூற்றுக்கும்), ஃபிர்அவ்ன்கள் இஸ்ரவேலர்களைக் கடுமையாகத் தண்டித்ததாக அல்லாஹ்வின் சூரா அல்-பகராவின் கூற்றுக்கும் இது ஒத்துப்போகிறது.
ஆனால் பைபிள் மற்றும் குர்ஆன் இரண்டும் ஒரு ஜோதிடர் இஸ்ரயேல் மக்களிடையே ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியதாக குறிப்பிடவில்லை, அவர் பார்வோனின் சக்தியை வீழ்த்தி இந்த ஆபத்தை தடுக்கிறார் . அல்லது பார்வோன் ஒரு பயங்கரமான கனவு கண்டான், இஸ்ரவேலர்களிடையே இப்படிப்பட்ட ஒரு பையன் பிறக்கப் போகிறான் என்றுதான் அவர்கள் மத்தியில் கூறப்பட்டது. இந்த புராணக்கதை டால்முட் மற்றும் பிற இஸ்ரேலிய மரபுகளிலிருந்து எங்கள் வர்ணனையாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது
(See the Jewish Academy, article "Moses" and (The Talmud Selections, page 124. 23)
இதை இன்றைய முஸ்லீம் சமூதாயத்தோடு பொருத்தி பாருங்கள்
ஃபிர்அவுனுடைய வரலாற்றில் பனி இஸ்ரயில் சமூகத்தை ஒடுக்க சொல்லித்தந்தது எந்த ஒரு வரலாற்று முறையாகவும் இருக்கலாம் ஆனால் பனி இஸ்ரவேலர்களை பல சமூகமாகி ஒடிக்கி பனி இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ்வின் மூலம் சோதனை இருந்ததா......இல்லையா.........
அதேதான் முஸ்லீம் சமுதாயத்திற்கு சூரா தவ்பாவில் அல்லாஹ் கூறுகிறான்.
முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்
(அல்குர்ஆன் : 9:5)
இது முஸ்லீங்களுக்கு சோதனை அல்லாஹ், நபி ஸல் அவர்களின் உடன்படிக்கை மறந்து இருந்ததால் இன்று உலகத்தில் பெரும்பாலான மக்கள் இந்தவசனத்தை எடுத்துக்காட்டி (பாருங்கள் முஸ்லீம்கள் வேதத்தில் தீவிரவாதம் போதிக்கிறது) என்று வாதம் வைத்து இன்று உலக அரங்கில் முஸ்லீம்களை ஒதுகிறார்கள்.
மனிதன் இறைவன் சொன்ன முறையில் வாழ்ந்தால் முஸ்லீம்களை பார்த்து இஸ்லாம் மார்க்கம் எவ்வளவு புனிதமானது என்று பார்த்து இஸ்லாமில் வருவார்கள்.
ஆனால் இப்போது இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலமை இருக்கிறது, இது எந்தக்கால கட்டத்தில் பொருந்தும் என்று விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது.
இதெல்லாம் முஸ்லீம்கள் அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்கை மீறியதால் அல்லாஹ் இறைமாறுப்பாளர்கள் கையில் இருந்து நமக்கு சோதனை தருகிறான். இதை மறுக்க முடியாது.
முஸ்லீம்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் வேததில் உள் உள்ள வசனம் உங்களை தொடரும்.
அதனால் அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால், அல்லாஹ்வும் நிறைவேற்றுவான்
இனி அல்லாஹ் பனி இஸ்ரேலை பற்றி கூறுவதை பாப்போம்
பின்பு பனி இஸ்ராயிலுக்கு நன்மை செய்ய நாடினான்
28: 4 ஃபிர்அவ்ன் இப்பூமியில் பூமியில் பனி இஸ்ராயீலின் ஒரு கூட்டத்தை பிரிவாக்கி அதில் ஒரு சமூகத்தவரில் உள்ள ஆண் குழந்தைகளை கொன்று பெண் குழந்தைகளை விட்டுவைத்தான்.
28:5மேலும் அந்த பலகீன படுத்தப்பட்ட மக்களை நான் பலப்படுத்த நினைக்கிறன் என்றும் தலைவர்களாகவும்,அந்த நாட்டுக்கு வாரிசு ஆக்க விரும்புவதாகவும் அல்லாஹ் அப்போதுதான் நாடுகிறான்.
அதன் பின் மூஸாவின் தாயிடம் அல்லாஹ்
28:7 இதன் பின்தான் மூஸாவின் தாயை பார்த்து அவரை ஆற்றில் எறிந்து விடு நீ பயப்படவும் வேண்டாம்,நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம் என்றும் அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம் என்றும் வஹீ அறிவித்தோம் என்று கூறுகிறான் அல்லாஹ்
மூஸா நபியின் வரலாறை குர் ஆனில் இருந்து முழுவதும் கூற கட்டுரையை படிக்க சிரமமாகும் என்ற அடிப்படையில் மூஸா நபியின் வரலாறுகள் அடங்கிய சில சூராக்களின் அட்டவணையை இங்கு கூறுகிறேன்.(61ஸூரத்துஸ் ஸஃப்ஃபு) (45ஸூரத்துல் ஜாஸியா) (44 ஸூரத்துத் துகான்) (43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (40 ஸூரத்துல் முஃமின்) (5 ஸூரத்துல் மாயிதா) (3 ஸூரத்துல்ஆல இம்ரான்) (4ஸூரத்துன்னிஸாவு) (2 ஸூரத்துல் பகரா) (26 ஸூரத்துஷ்ஷுஃரா) (29 ஸூரத்துல் அன்கபூத்) (32 ஸூரத்துஸ் ஸஜ்தா) (33ஸூரத்துல் அஹ்ஜாப்) (25 ஸூரத்துல் ஃபுர்ஃகான்) (23ஸூரத்துல் முஃமினூன்) (19 ஸூரத்து மர்யம்) (7 ஸூரத்துல் அஃராஃப்) (14ஸூரத்து இப்ராஹீம்) (10 ஸூரத்து யூனுஸ்) (11ஸூரத்து ஹூது) (6 ஸூரத்துல் அன்ஆம்) (37ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்) (28 ஸூரத்துல் கஸஸ்) (41ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா) (20 ஸூரத்து தாஹா) (27ஸூரத்துந் நம்லி)
ஷம்வீல் (சாமுவேல்)என்பது கி.மு.1100-1020 பழைய ஷாம் (சிரியா நாட்டில் ) ராமா எனும் ஊரில் வசித்து வந்த இறைத்தூதர் என்று சொல்லப்படுகிறது இந்த நபி யூஷஉ பின் நூன் தான் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் இது ஏற்புக்குரியதன்று ஏனெனில் இந்த சம்பவம் மூஸா அலை அவர்களுக்கு பிறகு நீண்ட காலத்திருக்கு பின் வாழ்ந்த நபி தாவுத் அலை அவர்களது காலத்தில் நடந்ததாகும் மூஸாவுக்கு தாவூதுக்கும் இடையே சுமார் 1000 ஆண்டு கால இடைவெளி உள்ளது ஆகவே தாவூத் அலை அவர்களது காலத்திற்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நபிதான் யூஷஉ தான் அந்த நபி என்று கூறுவது பொருந்தாது (இப்னு கஸீர் ) (பாகம் 1 பக்கம் 680)
விவிலியம் ஏற்பாட்டில் கூட சாமுவேலிடம் தான் பனி இஸ்ராயில் மக்கள் எங்களுக்கு ஒரு அரசறை எற்படுத்துங்கள் என்று கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது பைபிளில் மற்றும் குர்ஆனில்
I சாமுவேல்
8 அதிகாரம்
4. அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
5. இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
குர் ஆன்
2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
தாலூத் என்பவர் பழைய ஏற்பாட்டில் சவுல் (soul ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது இவர் கி.மு 1028 முதல் 1012 வரை என்று சொல்லப்படுகிறது.
தாலூத்துக்கு அல்லாஹ் அறிவாற்றல் மட்டும் உடல் வலிமையையும் அதிகமாக வழங்கியுள்ளான் என்று கூறினார் அவர்களுடைய அந்த நபி அந்த நபி அல்லாஹ்வால் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கபற்றிப்பதுடன் உங்களை விட அறிவாற்றலாகவும் உள்ளார் சிறந்த பண்பாளராகவும் உள்ளார் நல்ல தோற்றமுடையவராகவும் உள்ளார் வலிமைமிக்கவராகவும் உள்ளார் போர் நுட்பங்களை நன்றாக முழுமையாக அறிந்தவர் என்றும் உடல் வலிமை பெற்றவர் என்றும் கூறினார்
இந்த வசனத்தின் மூலம் ஆட்சியாளர் அறிவாற்றல் மிக்கவராகவும் நல்ல தோற்றம் உள்ளவராகவும் உடல் வலிமை மன வலிமை பெற்றவராகவும் விளங்க முடிகிறது (இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 682)
இதே போன்று நபி ஸல் குறைஷ் குடும்பத்தில் இருந்து வந்து ஆட்சி செய்த பின்பு வந்த குலஃபாய ராஷிதீன் உமரை குறிக்கலாம் (குலம்,ஆட்சி,மன வலிமை,உடல் வலிமை)இங்கு தாலூத்தும் அரச பரம்பரையில்; வந்தவரில்லை என்று குர் ஆன் கூறுகிறது
2 வது அத்தியாயம் 247 முதல் 251 வரை ஜாலூத் அவர்கள் வரலாறு சிறிதாகவும் பின்பு ஜாலூத்தை தாவூத் கொன்றதாகவும் ஜாலூத் (இவன் பெயர் கோலியாத் என்றும் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது)இவன் பாலஸ்தீனத்தில் மிக பெரிய சர்வாதிகாரியாக இருந்தான் என்றும் கூறப்படுகிறது (இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 687)
I சாமுவேல்
17 அதிகாரம்
4. அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
5. அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.
6. அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.
7. அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
நபி தாவூத் அலை அவர்கள் david கி.மு.1024 முதல் 963 வரை பெரும் படை வீரராக இருந்து அரசர் ஆனார்கள் அவர்களை அல்லாஹ் தன் தூதராகவும் ஆக்கினான் என்றும் அவர்களுக்கு ஸபூர் எனும் வேதத்தை அருளினான் என்றும் நபி சுலைமானின் தந்தை தாவீது என்று விவிலியம் ஏற்பாட்டில் கூறப்படுகிறது (இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 687)
I சாமுவேல்
17 அதிகாரம்
48. அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
49. தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
50. இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
நாம் மூஸா நபிக்கு கொடுத்த வேதம் தவ்ராத்
17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்
ஆணவத்தோடு நீங்கள் நடப்பீர்கள் என்று தவ்ராத்தில் பனி இஸ்ரவேலர்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்து இருந்தான் அதை நமக்கு அவர்களுக்கு எப்படி முன்னறிவிப்பு செய்தான் என்றும் அவர்களுக்கு வாக்குறுதி மீறினார்கள் என்றும் அதற்க்கு கொடுத்த வேதனையும் நீங்கள் வரலாறில் பார்க்கலாம்.
அவர்கள் செய்த தவறும் அதற்க்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று மட்டும் குர்ஆன் கூறும் அது எப்படி என்று மனிதனாகிய நாமே தேடி சென்று படிப்பினை பெறணும்.
குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.
(அல்குர்ஆன் : 7:84)
7:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்
பனி இஸ்ராயீல் சூராவில் 4 வசனம் அடுத்து 5 வசனத்தின் இடைவெளி என்னவோ ஒன்றுதான் (அதை அடுத்ததடுத்த வசனத்தில் கூறிவிட்டான்) அதை அவர்களின் காலத்தின் பொருத்தி பார்த்தோமானால் கிட்டத்தட்ட 2400 வருடம் ஆகும்
குறிப்பு : நபி ஸல் அவர்களுக்கு முன்பு வரை வரலாறுகள் சரியாக கிடைக்காததால் துல்லியமாக எடுத்து கொள்ளமுடியவில்லையென்றாலும் சில ஆய்வின் அடிப்படையில் அனுமானம் இட்டு கூற இயலும் அதன் அடிப்படையில் இந்த வருடக்கணக்குகள் மூலம் பின்வரும் வரலாறுகளை தருகிறோம்
17:5. எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
Nebuchadnezzar II (பாபிலோனிய பேரரசர்) இந்த வரலாறு பொதுவாக எல்லாராலும் பேசப்படுகிற வரலாறு குர் ஆனில் இந்த வசனத்தோடு ஒத்துப்போகிறது
சிதேக்கியா என்றவர் யூதர்களின் ராஜாவாக நியமிக்கப்பட்டதிலிருந்து, சிதேக்கியா என்பவர் பாபிலோனிய கட்டுப்பாட்டை தூக்கி எறிவதற்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தார். அப்போது கிமு 595 இல் பார்வோன் நெக்கோ II இறந்த பிறகு, சூதாட்டத்தில் பனையதிற்க்காக பணம் கொடுக்காமல் தலைமறைவாக போனதிற்க்காக விவகாரங்களில் எகிப்திய தலையீடு அவரது வாரிசுகளான Psamtik II (r. 595-589 BC) மற்றும் Apries (r. 589-570 BC) ஆகியோரின் கீழ் மீண்டும் அதிகரித்தது. -பாபிலோனிய கிளர்ச்சிகள்.[48] கிமு 601 இல் எகிப்தின் மீது படையெடுப்பதில் பாபிலோனியத் தோல்வியானது பாபிலோனியப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டுவதற்கு உதவியது. இந்த முயற்சிகளின் விளைவு நேபுகத் நஸ்சர் அதிகாரத்திற்கு எதிராக சிதேக்கியா என்பவரின் வெளிப்படையான கிளர்ச்சியாக இருந்தது துரதிர்ஷ்டவசமாக, இக்காலத்திலிருந்து கியூனிஃபார்ம் ஆதாரங்கள் எதுவும் பாதுகாக்கப்படவில்லை, மேலும் யூதாவின் வீழ்ச்சியின் அறியப்பட்ட கணக்கு விவிலியக் கணக்கு மட்டுமே
ஜெருசலேமை அழித்துகைதிகளை அழைத்துச் செல்லும் பாபிலோனியர்களின் ஓவியம் மற்றும்
ஜெருசலேமின் அழிவு மற்றும் பாபிலோனிய சிறையிருப்பின் ஆரம்பம், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பைபிள் உவமையில் சித்தரிக்கப்பட்டுள்ளது
கிமு 589 இல், சிதேக்கியா என்பவர் நேபுகத் நஸ்சர்க்குக் கப்பம் செலுத்த மறுத்துவிட்டார்,
மேலும் அவர் தீரின் அரசரான மூன்றாம் இத்தோபால் என்பவர் சிதேக்கியாவின் அவரைப் பின்தொடர்ந்தார். கிமு 587 இல், அம்மோன், ஏதோம் மற்றும் மோவாப் ஆகிய நாடுகளும் இதேபோல் கலகம் செய்தன.
சிதேக்கியாவின் எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில்,[48] நேபுகத் நஸ்சர் கி.மு. 586 இல் யூதா இராச்சியத்தை கைப்பற்றி அழித்தார்,
அவரது ஆட்சியின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகும்.
586 கி.மு. கோடையில் முடிவடைந்த இந்த பிரச்சாரம்,
யூதாவின் நிரந்தர முடிவான ஜெருசலேம் நகரத்தின் சூறையாடலுக்கும் அழிவுக்கும் வழிவகுத்தது,
மேலும் யூதர்கள் கைப்பற்றப்பட்டு பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டதால், பாபிலோனிய சிறைப்பிடிப்புக்கு வழிவகுத்தது. தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் ஜெருசலேமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அழிக்கப்பட்டு மக்கள்தொகை இல்லாததை உறுதிப்படுத்துகின்றன.
இந்த நேபுகத் நஸ்சர் கொடுத்த இஸ்ரேல் மக்களின் அழிவின் பின் அந்த மக்களுக்கு அல்லாஹ் மீண்டும் ஒரு கருணை காண்பிக்கிறான்.
(சில அழிவுகளை விவிலியம் ஏற்பாட்டில் எரேமியாவில் கூறியுள்ளது
எரேமியா
52 அதிகாரம்
13. அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
14. காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
15. ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
16. ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.)
பின்பு பனி இஸ்ராயிலுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தது பற்றி
17:6. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
இது என்ன உதவி என்னவென்று கீழே காண்போம்.
வெற்றி வாய்ப்பு தான் ஆலயம் நிர்ணயம் செய்தது
பின்பு அல்லாஹ் அந்த ஆலயத்தை நிர்ணயம் செய்தது
குர் ஆன்
2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.
இங்கு ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரை மட்டுமே கூறப்படுகிறது இவர் யார் என்ற விவரங்கள் தபிஸீர்ரில் கிடைக்கிறது.
உஸைர் நபி (ezra) என்பது கி,மு,500 வாக்கில் நல்ல மனிதர் ஒருவரது பெயராகும்.அவர் இறைத்தூதர் என்பதில் கருத்துவேறுபாடு உண்டு பெரும்பாலோரின் கருத்து அவர் ஒரு இறைத்தூதர் என்பது விவிலியம் பழைய ஏற்பாட்டில் இவரது பெயர் எஸ்ராவின் புத்தகம் என்றொரு ஆகமம் உண்டு இவர் தவ்ராத்தை (தோரா)எழுதியவர் என்று கூறப்படுகிறது அவர்தான் இஸ்ரவேலர்களை மீட்டு வந்து பாலஸ்தீனம் சேர்த்தார் அங்கு ஜெருசலம் (பைத்தில் மக்தஸ்) பாழடைந்து கிடந்தது nebuchad nezzar என்ற மன்னன் ஜெரூசலத்தை தரைமட்டமாக்கி இருந்தான்.அதை கண்டபோது.அவர் உஸைர் நபி இதை எப்படி அல்லாஹ் புனரமைப்பான் என்று வியந்து போனார் (தபஸீர் மாஜிதி)
இந்த ஊரை கடந்து சென்றவர் யார் என்று பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன அவர் உஸைர் என்பவராவார் என அலி பின் அபீதாலிப் ரலி அவர் கூறியதாக ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது.
இதையே கத்தாதா,ஹசன் அல் பஸரி (ரஹ்),இப்னு அப்பாஸ் (ரலி)ஆகியோரிடமிருந்து இப்னு ஜரீர் (ரஹ்)அவர்கள் இதையே அறிவித்துள்ளார்கள். இந்த கருத்து மிகவும் பிரபலமானதாகும்.
சிலர் அவருடைய பெயரை ஹஸ்கீல் பின் புவார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
முஜாஹீத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர் இஸ்ரவேலர்களை சார்ந்த ஒருவராவர்
(பின்னர் அந்த ஊர் விஷயத்திலும் சில கருத்து வேறுபாடு காணப்படுகிறது.எனினும்)பைத்தில் மக்தஸ் என்பதே பெரும்பாலான கருத்தாகும். பக்த் நஸ்ர் என்ற அரசன் அந்த ஊரை அழித்து நாசமாக்கிய அங்கிருந்த மக்களையும் கொன்றான்.அதற்க்கு பிறகு உஸைர் அந்த ஊரை கடந்த போதுதான் இந்த சம்பவம்
அந்த ஊரை அவர் கடந்த பொது சிறிது நேரம் நின்று பிரம்மாண்டமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான பின்பு இந்த ஊரை அல்லாஹ் எப்படி நிர்மாணிப்பன் என்று சிந்தித்தார் அதன்பிறகு இதை எப்படி உயிர்ப்பிக்கப்போகிறான் என்று சொல்லிக்கொண்டார் அதாவது இந்த ஊரு கடுமையாக சேதமுற்றும் சிதிலமடைந்தும் இருந்ததை பார்த்துவிட்டு அந்த பழையநிலைக்கு கொண்டுவரமுடியுமா என்று எண்ணினார்.
அவரை அல்லாஹ் நூறாண்டுகள் வரை இறக்கச்செய்து பின்னர் எழுப்பினான்.உஸைர் இறந்து 70 ஆண்டுகள் முடிந்தபின் அந்த ஊர் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.மக்கள்தொகையும் பெருகியது.இஸ்ரவேலர்களும் அங்கு திரும்பி வந்தனர்.(இப்னு கஸீர் பாகம் 1 பக்கம் 713,714)
அந்த நூறாண்டுகள் இடைவெளியில் அந்த ஜெருசலம் புணரமைக்கப்பட்டதாகவும் சில தகவல் அடிப்படையில் உறுதிப்படுத்துகிறேன் இங்கு
நெகேமியா
1 அதிகாரம்
1. அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
2. என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.
3. அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.
4. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
5. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
6. உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.
7. நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
சுருக்கமாகச் சொன்னால், நெகேமியா ஜெருசலேமின் நகரச் சுவர்களை மீண்டும் கட்டியதாக பைபிள் சொல்லும் நேரத்தில்தான் கோபுரமும் சுவரும் கட்டப்பட்டன—சுமார் தோராயமாக கிமு 445-ல் என்றும் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தின் ஈலாட் மசார் குறிப்பிடுகிறார்கள்
குர் ஆன்
17:6 வது அத்தியாயம் படியும் பனி இஸ்ரவேலர்களுக்கு கருணை கொடுத்து வாரிசுதாரர்களாக ஆக்கி வைத்தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த வரலாறுகளில் பனி இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் நாடினபோது அவர்களுக்கு கருணை கொடுத்து பின்பு அந்த புனித இடத்திற்கு வாரிசுதாரர்களாக ஆக்கி அவர்களை ஆட்சியார்களாக ஆக்கினான் (17:6 வது அத்தியாயம் படி )
இதன் பின்புதான் நபி ஈஷா அலை அவர்கள் உலகத்திற்கு வருகிறார்கள்.
குர்ஆனில் நபி ஈஸா அலை அவர்களை மட்டும் இல்லை இந்த நபியை போன்று ஏராளமான நபியை கொல்ல திட்டம் இட்டு இருக்கிறார்கள் நபிமார்களை கொன்னதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.
وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
(அல்குர்ஆன் : 2:87)
பனி இஸ்ரவேலர்கள் சபிக்கப்பட்டதன் காரணம் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(அல்குர்ஆன் : 4:157)
நபி மார்களை கொல்லவும் செய்தார்கள் ஈஸா அலை அவர்களை கொன்றதாகவும் கூறிவிட்டார்கள் இதனாலே அல்லாஹ் அவர்களை சபித்தான்.
இவர்களை பற்றி இங்கு பெரிதாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இதன் தலைப்பு பனி இஸ்ரவேலர்கள் செய்த இரண்டு அத்துமீறல்களை பற்றி இங்கு பார்க்கிறோம்.
இந்த இடத்தில் அவர்கள் (பனி இஸ்ரவேலர்கள் ) மட்டுமே குற்றவாளிகள் நாம் (முஸ்லீம்மாகிய மக்கள் நாம் இல்லை நாம்தான் நபிமார்களை கொலை செய்யவில்லையே) என்று கூறலாம்
நபி ஸல் அவர்களின் கும்பத்தை என்ன செய்தோம். அவர்களுடைய குடும்பம் எங்கே இருக்கிறது என்று ஒருவராவது கவலைப்பட்டோமா
சில அறிவுஜீவிகள் நபி ஸல் அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லையே அதனால் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுபுவார்கள்,
நபி ஸல் அவர்களுக்கு குடும்பம் இல்லையென்றால் மறுமையின் அடையாளங்களில் என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்தான் மஹதி என்று சொன்னார்களே அது என்ன
வேறு ஒரு தலைப்பில் என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவிரில் இருந்துதான் ஒரு ஃபித்னா தலைதூக்கும் ஆனால் அவர் என்னுடைய குடும்பமே இல்லை என்று சொல்லும்போதே ரஸூறுல்லாஹ் உடைய குடும்பம் இருக்கிறது என்று தெரியவில்லையா....
நபி ஸல் அவர்களுடைய குடும்பத்தை அவர்கள் பாதுக்காக்க சொல்ல வில்லையே என்றும் நினைக்கலாம் குர்ஆனில் ஒன்றுகூட்டுதல் (அல் ஹஷ்ர்) அத்தியாயம் கூறும் நோக்கம் என்ன என்று சிந்திக்கவும் இந்த சூரா யாரை பற்றி கூறுகிறது என்று கூறவும் இந்த சூராவில் யார் யார் சம்பந்த படுகிறார்கள் என்று பார்க்கவும். ஏனென்றால் இந்த கட்டுரையின் நோக்கம் பனி இஸ்ரயிலின் அழிச்சாட்டியங்களை பற்றி கூறவே
நபி ஈஷா அலை அவர்கள் அவர்களுடைய சீடர் ஒருவர் இந்த கட்டிடங்கள் எப்படி பட்டது பாரும் என்று ஜெருசலேமில் உள்ள அவர்களின் தேவாலயத்தை பற்றி கேட்கிறார்.
ஆனால் ஈஷா நபி இது எந்த தரத்தில் இது இடிந்து போகும் என்பதே தன்னுடைய சீடருக்கு சொல்லி காண்பிக்கிறார் விவிலியம் புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாடு
மாற்கு
13 அதிகாரம்
1. அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்
இதன் பின்பு நபி ஏதும் வராததால் அதனுடைய வரலாறு விரிவாக குர் ஆனில் கிடைக்கவில்லை தபிஸீர்களில் கிடைக்கும்.
Comments
Post a Comment