துஆ கேட்பதில் ஒரு வரைமுறை இருக்கிறது. இஸ்லாத்தில் எதுவும் நிர்பந்தம் இல்லை கேட்பவர்க்கு கேட்கலாம், ஆனால் இஸ்லாத்தில் உள் வந்தால் ஒரு வரைமுறையின் மேல் ஒருவர் பயணிக்க வேண்டும்.
துஆ அதே போன்றுதான்
ஒருவர் யா அல்லாஹ் எனக்கு மரணத்தில் இருந்து விலக்கு தா என்று கேட்டால் நிறைவேறுமா என்றால் இல்லை, மரணம் விதிக்கு உட்பட்டது.
மறுமை நாளும் விதிக்கு உட்பட்டது
அதற்க்கான அடையாளங்களும் விதிக்கு உட்பட்டது
அந்த மறுமை நாள் இல்லவே இல்லை என்று சொல்கிறவர்களும், அது வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறவர்களும், அந்த மறுமை நாளின் அடையாளங்கள் சில நிகழ்காலத்தில் நடப்பது அது அடையாளங்களே இன்று சொல்கிறவர்களும், விதியை மறுக்க கூடிய வட்டத்திற்கு வந்துவிடுவார்கள்.
மறுமையை மறந்தவர்கள் யார் என்று இந்த ஆயத்தில் கூறுகிறான். தனது மார்க்கத்தை விளையாட்டாக நினைக்கிறவர்கள்தான் அவர்கள்
الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا فَالْيَوْمَ نَنْسٰٮهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ يَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
(அல்குர்ஆன் : 7:51)
நிகழ்காலத்தில் நடக்கும் அடையாளங்கள் நமக்கு இதுதான் என்று தெரியாமல் இருக்கலாம்.
அது இறைவன் வகுத்தது. அந்த விதியை யாராலும் மாற்ற இயலாது.
முஸ்லீம் 1357
சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் ஆயிஷா ரலி அவர்களிடம் நபி ஸல் அவர்களை பற்றி கேட்க சென்ற போது ஆயிஷா ரலி அவர்கள் நீ குர்ஆன் ஒதவில்லையா என்று கேட்டு அதன் விளக்கத்தில்
நபி ஸல் அவர்கள் குர்ஆனாக வாழ்ந்தார்கள் என்று கூறினார்கள்
குர் ஆனாக வாழ்வது அவர்கள் வாழ்க்கை வரலாற்றில் போரையே வாழ்க்கையாக கொண்டால் மட்டுமே குர் ஆனாக வாழமுடியும்
புஹாரி 3949. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?” என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?” என்று வினவப் பட்டபோது, “பதினேழு” என்றார்கள்.
தலைப்பிற்கும் நபி ஸல் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லையே என்று நினைக்க வேண்டாம்
நபி ஸல் வாழ்க்கையே போர்கள், அதை தொடர்ந்து வரக்கூடிய மறுமை அடையாளங்களும் போர் சம்பந்தபட்டவை
போர் ஏன் வருகிறது பூமியின் ஆட்சியை பிடிக்க
இறைவன் தான் நாடியவருக்கே ஆட்சி கொடுகிறான்.
இறைவன் நாடுகிறவன் யார் என்று மனிதன் முடிவு செய்ய வேண்டும் இறைவன் கூறும் அடிப்படையில் வாழ்ந்தால் கட்டுப்பட்டு வாழ்கிறவர்க்கு அல்லாஹ் ஆட்சியை கொடுப்பான் இல்லையென்றால் ஆட்சியை மாற்றி கொடுத்து முஸ்லீமை அல்லாஹ் கேவலப்படுத்தி விடுவான்.
இதை ஆதம் நபி முதல் அழிவில்லாத அரசாங்கத்தை தருவதாக இபிலீஸ் மனிதனுக்கு காட்டிய ஆசையாகும் இப்போது வரை அது முடியவில்லை தொடர்கிறது.
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
(அல்குர்ஆன் : 20:120)
சில காலகட்டத்தில் சிலதை ஒரு சமூகத்திற்கு விதியாக்குவான்
போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
(அல்குர்ஆன் : 4:77)
இனி வரும் காலம் மறுமை நாள் அதன் அடையாளத்தில் சிலது நடக்கும் போது ஏன் இதை விதியாக்கினாய் என்று கூறுவதை விட்டு அப்படி பட்ட காலத்தில் நன்மை செய்ய எது விறைய வேண்டும் என்று தேடுங்கள்.
ஏனென்றால் நபி ஸல் வாழ்க்கை இலகுவானது இல்லை முழுக்க முழுக்க போர்களே. அதோடு மனிதர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்றுதற எவ்வளவு இன்னல்களை சந்திதுஇருக்க வேண்டும்.
Comments
Post a Comment