எந்த ஒரு இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை

 3455. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு) அமர்ந்திருந்தேன். (ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:


‘‘இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் உத்திர விடுகிறீர்கள்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘அவர்களில் முதலாவ தாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருப வரிடம் (அந்தக் கடமையை நிறை வேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் அல்லாஹ் கேட்கவிருக் கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

Comments