மனிதனை படைத்ததின் நோக்கம்

 103: 1 காலத்தின் மீது சத்தியமாக


காலம் என்பது உலகம் தொடங்கி மனிதனை படைத்த காலம் முதல் மறுமை நாள் வரை உள்ள நேரம் காலம் ஆகும் 


103:2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.


இதன் மூலம் மனிதன் ஆனவன்  காலம் முழுவதுமே நஷ்டத்தில் இருக்கின்றான். மனிதன் எல்லாரும் ஒரு சமூகமாகும் அந்த சமூகம் நஷ்டத்தில் தான் இருக்கின்றது.


103:3 ஈமான் கொள்ளனும்,ஸாலீகான நல் அமல்கள் செய்யணும்,என்ற சத்தியத்தை  கொண்டும் பொறுமை கொண்டும் ஒருவருக்கு ஒருவர் உபதேசம் செய்யனும் இவர்களை தவிர மீதி உள்ளவர்கள் நிச்சயமாக நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.


ஈமான் கொண்டு நல் அமல்கள் செய்து அதாவது தொழுவது நல் அமல்கள் செய்வது இதுபோன்ற செயல்கள் செய்துவிட்டு மாறாக மக்கள் ஒரு ஊரில் முழுவதும்  இருந்து மனிதனுக்கு மனிதன் உபதேசம் செய்யாமல் இருந்தாலும் அந்த ஊர் அழிக்க படும் என்பது அல்லாஹ்வுடைய சத்தியம்.


நபி ஸல் அவர்களுக்கு பின்பு எந்த ஒரு ஊரும், நாடும் சீர்திருத்தம் செய்ய இனிமேல் இன்னொரு நபி வரமாட்டார்கள். அதனுடைய வேலைகளை முழுவதுமாக அவர்களை ஈமான் கொண்ட முஸ்லீங்களின் பின்தோன்றல்களின் மேல் பொறுப்பாக வந்துவிடும்.


சீர்திருத்தம் செய்யாமல் இருந்தால் அந்த ஊர் அழிக்கப்படும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.


11:117 ஒரு ஊராரை அவர்கள் சீர்திருத்தி கொண்டியிருக்கும் நிலையில் அந்த ஊரை அல்லாஹ் அநியாயமாக அழிக்க மாட்டான்



நீங்கள் அநியாயம் செய்பவர்கள், வரம்பு மீறி நடபவர்கள் இவர்களுக்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கையும்,நற்செய்தி சொல்ல வேண்டும். இதற்காக மட்டுமே தூதரை அல்லாஹ் அனுப்பினான்.


6:48 நற்செய்தி சொல்லவும், எச்சரிக்கை செய்வதற்காகவும் இல்லாமல் நான் தூதரை அனுப்பவில்லை, யார் இவரை நம்பி சீர்திருத்தி நடந்தார்களோ  அவர்களுக்கு அச்சமோ துக்கமோ இல்லை.


நபிக்கு மற்றவர்களை கண்காணிப்பது வேலை இல்லை. அவர்களுக்கு ஈமான் கொடுப்பதும், ஈமனை இல்லாமல் ஆக்கி விடுவதும் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளது.


4:80 தூதருக்கு கீழ்படிபவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிபவர் ஆவர் யாரவது இதை நிராகரித்தால் நபியை கண்காணிப்பாளராக அனுப்பவில்லை.



அதே போல் நீங்கள் ஒரு ஊரை சீர்திருத்தாமல் விட்டுவிட்டால் சீர்திருத்தாமல் விட்டவர்களையும், தவறு செய்பவர்கள், அதாவது வரம்பு மீருப்பவர்களையும் சேர்த்து அந்த ஊரையே அல்லாஹ் அழித்து விடுவான். அல்லாஹ்வுடையை அறிவுரையை யார் கூறிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களை தவிர, அறிவுரை கூறாதவர்களையும், வரம்பு மீருபவர்களையும் அல்லாஹ் சேர்த்து அந்த ஊரை அழித்து விடுவான். உதாரணம்: சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற கூட்டத்தை அல்லாஹ் அழித்ததாக சொல்லும் வரலாற்றில் இது இருக்கிறது.


4:154 அவர்கள் மேல் தூர்மலையை உயர்த்தினோம்,இந்த வாசலில் தாழ்மையாக நுழையுங்கள் என்றும்,சனிக்கிழமை வரம்பு மீராதீர்கள் என்றும் வாக்குறுதி வாங்கினோம்.


7:163  சனிக்கிழமையில் அவர்கள் வரம்பு மீறினார்கள் சனிக்கிழமை கடலில் மேல் மீன் வந்து கொண்டு இருந்தது சனிக்கிழமை அல்லாத மீதி நாளில் அது வெளிவருவதில்லை. அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக.அவர்களை அல்லாஹ் சோதித்தான்.


7:164 அறிவுரை செய்யாமல் இருந்த சிலர், அறிவுரை செய்து கொண்டு இருந்தவர்களை நோக்கி அல்லாஹ் அவர்களை அழிக்க நாடியுள்ளான். ஏன் அவர்களை மீன் பிடிக்காமல் தடுகிறார்கள் விட்டு விடுங்கள் என்று சொன்னனர் .அதற்க்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் எங்கள் மீது அல்லாஹ் தந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கூறினார்கள்.


7:165 அறிவுரையை மறந்து மீன் பிடிக்க  சென்ற போது. அறிவுரை செய்து கொண்டு இருந்தார்களே அவர்களை தவிர்த்து விட்டு மீதி இருந்த இரண்டு கூட்டத்தையும் வேதனை செய்தான்.


7:166 வரம்பு மீறி மீன் பிடிக்க சென்றவர்களை அல்லாஹ் குரங்காக மாற்றிவிட்டான்.




நாம் எல்லோரும் எந்த தவறு செய்யாமல் இருக்கிறோம் எல்லாரும் கவலை இல்லாமல் இருக்கலாம் என்று யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். சீர்திருத்தங்கள் செய்யாமல் இருந்தால் அந்த ஊரோ,நாடோ, உலகமோ சீர்கெட்டுப்போய் இருக்குமானால் அதில் சீர்திருத்தங்கள் செய்யாமல் இருந்தவர்கள் மீதும் குற்றம். ஆகும்.


நாம் பாவம் செய்யாமல் இருக்கிறோம். நாம் தப்பித்தோம் என்று எண்ணுவது அல்லாஹ்வின் எச்சரிக்கை கேளுங்கள்.


8:25 அவனின் வேதனைக்கு பயப்படுங்கள் அவனின் வேதனை உங்களில் அநியாயம் செய்தவரை மட்டுமே பிடிக்கும் என்று இல்லை அவன் தண்டனை தருவதில் கடுமையானவன்.


சரி சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் இருக்குமேயானால் அது என்ன என்பது பற்றி குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் அதற்க்கு அல்லாஹ் மனிதனை படைக்க நினைத்த முதல் வரலாற்றில் இருந்து பார்க்க வேண்டும்.


33:72 வானம் பூமி மலைகளிடம் அல்லாஹ் தன்னுடைய அமானிதங்களை சுமக்க கேட்டான் அது அஞ்சி அதை ஏற்க மருத்துவிட்டது. மனிதன்  அதை ஏற்றுகொண்டு பின்னர் அதை நிறைவேற்ற முடியாமல் அநியாயம் மற்றும் அறிவற்றவனாகவும் இருக்கிறான்.


இதனால்தான் இன்னும் அல்லாஹ்வுடைய அமானிதத்தை நிறைவேற்ற முடியாமல் விட்டதை அல்லாஹ்


103:2 மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.


என்று கூறுகிறான்.


2:30 வானவர்களை நோக்கி அல்லாஹ் பூமியில் என்னுடைய பிரதிநிதியை படைக்க போகிறேன் என்று சொல்லி படைத்தான்.



அமானிதங்களை நிர்வகிக்க அல்லாஹ் தன்னுடைய பிரதிநிதியை (ஆதம்) மனிதன் படைத்து அல்லாஹ்வின் அமானிதங்களை பெற்று அதை நிறைவேற்றாமல் போனது மற்றுமே மனிதனின் குற்றம்.


சொர்க்கவாசிகளின் அடையாளத்தில் ஒன்றானது அமானிதத்தை பேணுவது (70:32)இல் அல்லாஹ் கூறும் ஒன்று


(70:32 இன்னும் வாக்குறுதியையும்,அமானிதங்களையும் பேனிக்கொள்பவர்களும்)



நிர்வாகத்தில் உள்ளவர்கள் அமானிதங்களை காப்பாற்றுவது மிக முக்கியம் நாட்டை நிர்வாகிப்பவர் மீதும் இருக்கிறது அதே அமானிதம், வீட்டை நிர்வாகிப்பவர் மீதும் இருக்கிறது அதே அமானிதம், இப்படி நிறைய இருக்கிறது.


குர்ஆனில் எதையெல்லாம் அல்லாஹ் அமானிதம் என்று கூறுகிறானோ அதெல்லாம் இந்த கட்டுரையில் அதை சேர்க்க முடியாது மக்கள் படிப்பதில் சிரம படுவார்கள்.


இந்த கட்டுரையே மனிதனை சிரம படுத்தி இருக்கும்.


அமானிதம் மிக முக்கியம் உலகில் அதை நிர்வகிக்க தவறியவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பது தவறு அப்படி இருந்தால் அந்த சத்தியத்தை சீர்திருத்தி கொண்டு இருப்போர் உடைய கடமை இல்லையென்றால் அல்லாஹ்வுடைய வேதனை இருகூடத்தார் மீதும் வரும் என்பது மாற்று கருத்து இல்லை


18:14 கொடுமைக்கார அரசன் முன்னிலையில் நின்று அவனையின்றி வேறு யாரையும் நாயன் என்று அழைக்க மாட்டோம் 

அப்படி செய்தால் வரம்பு மீறுனவர்களை போன்று  ஆவோம்.

அவர்கள் உறுதியாக நின்ற நிலையில் அவர்களின் இதயங்களை வழுப்படுத்தினோம்                                                                                                                                                                                                                                                                                                                                                      மேலும் ஒரு ஹதீதை நீங்கள் படிக்க வேண்டும்.

அது யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டம் வர்ற நேரத்தில் நபி ஸல் அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை  செய்கிறார்கள்.

அதில் பாவங்கள் அதிகமாகும் நேரத்தில் நல்லவர்களும் சேர்த்து அழிக்க படுவார்கள்.

இதை எளிமையாக மேலே உள்ள கட்டுரையின் பிரகாரம் புரியவேண்டும் என்றால் அவர்கள் நடந்த பாவங்களை சீர்திருத்தம் செய்யாமல் இருந்ததனால் நல்லவர்களும் அழிக்க படுவார்கள் என்பது நபி ஸல் அவர்களுடைய கூற்று 


அல்லாஹ் சத்தியத்தை மட்டுமே பேசுபவன்.அவனுடைய வார்த்தையில் முரண்பாடு இருக்காது. 


புகாரி  3598. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத் தால் அரபியருக்குப் பேரழிவு நேரவிருக் கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிóருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள்.


அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்துகொண்டு) இருக்க (இறை தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! பாவங்கள் அதிகரித்து விட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள்

Comments