புஹாரி
705. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நீரிறைக்கும் இரண்டு ஒட்டகங்களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்தார். அப்போது முஆத்
(ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷா தொழுகை) தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். உடனே அம்மனிதர் தமது ஒட்டகத்தை விட்டுவிட்டு, முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகையில் சேர்ந்)தார்.
அப்போது முஆத் (ரலி) அவர்கள் (பெரிய அத்தியாயங்களான) ‘அல்பகரா’ அத்தியாயத்தை, அல்லது ‘அந்நிசா’ அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச்) சென்றுவிட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, முஆத் (ரலி) அவர்களைப் பற்றி அவர் முறையிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் (ரலி) அவர்களை வரவழைத்து) “முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்?” என்று (மூன்று முறை) கேட்டார்கள். பின்னர் “சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்சி வ ளுஹாஹா (91), வல்லை- இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா? ஏனெனில், உமக்குப் பின்னால் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் தொழுகின்றனர்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(‘ஏனெனில் உமக்குப் பின்னால்...’ எனத் தொடங்கும்) கடைசி வாக்கியமும் நபி (ஸல்) அவர்களின் சொல் என்றே நான் கருதுகிறேன்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், “முஆத் (ரலி) அவர்கள் இஷாவில் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார்கள்” என்று (ஐயப்பாடின்றி)) காணப்படுகிறது.
Comments
Post a Comment