2:1. அலிஃப், லாம், மீம்.
2:2. இது வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; இறையச்சமுடையோருக்கு நேர்வழி காட்டும்.
2:3. அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4. (நபியே!) இன்னும், அவர்கள் உமக்கு அருளப்பட்ட (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும், மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
2:5. இவர்கள்தாம், தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும், இவர்களே வெற்றியாளர்கள்.
Comments
Post a Comment