குர்ஆனில் மொத்தமாக ஒரு கூட்டத்தை பேசவேண்டும் என்றால் முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் பற்றி மிகவும் பெரிதாகவும், அவர்களை அல்லாஹ் பொருந்தி கொண்டுவிட்டதாகவும் அவர்களுக்கு சொர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான் 9:100
புஹாரி 3801. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்துபோய்விடுவார்கள். ஆகவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந் தன்மையுடன்) மன்னித்துவிடுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அன்சாரிகள் என்று எங்கெல்லாம் ஹதீஸ் வருவது அவர்களுக்கு சில தவறுகளை அனுமதித்துள்ளான் என்று நான் நம்புகிறேன், காரணம் சகாபாக்களில் முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் அல்லாஹ் முன்னிலை படுத்துவான்.
மேலும் அன்சாரிகள் என்று சொல்லக்கூடிய மதினாவில் நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய தீனில் உதவி செய்தவர்கள் அவர்களை பற்றி அல்லாஹ் மிகவும் உயர்த்தி கூறியுள்ளான் அவர்கள்தான் கருமிதனதிலிருந்து (உலோபிதனம்) விடுபட்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் குர்ஆனில்
நான் இங்கு கூறியுள்ளது நயவஞ்சக தனத்தில் உள்ளவர்களை நான் மட்டும் கூறவில்லை இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் குறிப்பிடுகிறார்கள் உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து வைத்து உதவி செய்தவர்களை பற்றி நானும் கூறுகிறேன், அதற்க்காக அவர்கள் யார் யார் என்று குர்ஆனிலும் ஹதீசிலும் தேடவேண்டிய அவசியம் இல்லை அப்படிப்பட்ட நபர்களே நான் யார் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று நான் கூறவில்லை
நான் கூற வருவது அல்லாஹ்வின் தீனில் நயவஞ்சகள்களும் கலந்து இருப்பார்கள் என்றுதான் கூறுகிறேன்.
அவர்களை எப்படி அறிந்து கொள்வதென்றும் ஹதீதில் உள்ளது
நயவஞ்சகர்களை பற்றி காண சூரா தவ்பா, சூரா காஃபிரூன், சூரா முஹம்மத் போன்ற சூராகளிலும் காணலாம்
புஹாரி 4882. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். ‘‘அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர்” என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் அருளப்பெற்றுக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்” என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், ‘அல்அன்ஃபால்’ எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பத்ர் போர் குறித்து அது அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘அது பனுந் நளீர் குலத்தார் குறித்து அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.2
மேலும் சில சூராகளிலும் அல்லாஹ் கூறியுள்ளான், அந்த உண்மையாக உதவிய அன்சாரிகள் வேறு இவர்கள் வேறு
அல்லாஹ்வுடைய தீனில் உதவி செய்தவர்களை இங்கு சொல்லமுடியும்.(57:10)
وَ مَا لَـكُمْ اَلَّا تُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْـرَاثُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ لَا يَسْتَوِىْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ اُولٰٓٮِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقَاتَلُوْا وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 57:10)
இங்கு பதவியால் முன்னிலை படுத்தியுள்ளான் இங்கு முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் அல்லாஹ் குறிப்பிடவில்லையே என்று சில பேர்கள் கேட்கலாம்,
அதாவது மக்கா வெற்றிக்கு முன்பு என்று கருவது அவர்கள் வெற்றிக்கு முன்னர் பல இன்னல்களில் போர் தொடுக்க வந்தவர்கள்
வெற்றிக்கு பின்பு வந்தவர்கள் பெரும்பாலான பேர்கள் நபி ஸல் அவர்களின் மேல் உள்ள பயத்தினால்
இன்னும் விளங்க வில்லை என்றால்
மக்கா வெற்றிக்கு முன்னுள்ளவர்கள் யார், வெற்றிக்கு பின்னுள்ளவர்கள் யார் என்று சோதனை செய்து கொள்ளலாம்
அன்சாரிகளுக்கு சில விஷயங்களில் விதி விலக்கு இருக்கும் அதை நபி ஸல் அவர்கள் அந்த விதி விலக்கு தன் வாயால் மொழிந்து சொல்லிருக்கமாட்டார்கள் மக்களுக்கு சூச்சமமுமாக சொல்லிருப்பதை காணலாம்
அதில் ஒன்று இசை கருவி அவர்களுக்கு அனுமதித்து இருக்கிறது அப்போது நமக்கும் அனுமதி உள்ளதுதானே என்று சொல்வது வேடிக்கை
அவர்கள் செய்த தீனில் நான் எந்த அளவில் வகித்துள்ளோம் என்று சிந்தித்து இந்த ஹதீதுகளை வாசித்து கொள்ளுங்கள்
இசை கருவி (தவறில் ஒன்று)
இங்கு அன்சாரிகள் சிறுமிகள் என்று வருகிறது, அவர்களுக்கு இதை அனுமதித்ததால் உலகம் முழுவதும் இசை அனுமதித்தது ஆகாது. நபி ஸல் அவர்களை அனுமதித்து விட்டு தன் முகத்தை வேறு பக்கம் திரும்பிவிட்டார்கள்.
நபி ஸல் அவர்களின் முழு வாழ்க்கையும் அல்லாஹ்வுடைய தீனுக்காக போராடினாதாக இருந்தது. இதை தவிர்த்து உலக விஷயத்துக்காக ஒன்றை தேர்ந்தெடுத்து செய்ய இஸ்லாத்தில் இடம் இருக்கிறதா என்று தேடுவதே
உலக வாழ்வை ரசிக்க தன்னுடைய ஆன்மா இச்சை தூண்டுகிறது.
3931. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஈதுல் பித்ர்' அல்லது “ஈதுல் அள்ஹா' (பெரு)நாளில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது “புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கை யில்லா கஞ்சிராவை அடித்துக்கொண்டு) பாடியபடி இரு பாடகியர் என்னருகே இருந்தனர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஷைத்தா னின் (இசைக்) கருவி” என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நமது பண்டிகை (நாள்) இந்த நாள்தான்” என்று சொன்னார்கள்.179
949. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் அருகில் இரு (அன்சாரி) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்து) ‘புஆஸ்’ போரைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.2 படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக்கொண்டார்கள் (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை).
அப்போது (என் தந்தை) அபூபக்ர்
(ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, “நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக ஷைத்தானின் இசைக் கருவியா?” என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, “அவர்களை(ப் பாட) விடுங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபுறம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் நான் விரல்களால் தொட்டுணர்த்தி (வெளியேறிவிடுமாறு கூறி)னேன். உடனே அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர்.
952. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு அன்சாரிச் சிறுமியர் ‘புஆஸ்’ போர் நாளில் அன்சாரிகள் (ஒருவரை யொருவர் தாக்கியும் தூக்கியும்) பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்தபடி) பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்.- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும்.
அப்போது (படுத்துக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.
2906. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் முன்னால் (அன்சாரி) சிறுமிகள் இருவர் புஆஸ்58 போரைப் பற்றிய பாடலைப் பாடிக்காட்டிக்கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கை யில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக்கொண்டார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்க வில்லை.) அப்போது, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஷைத்தானின் இசைக் கருவியா?” என்று கடிந்துகொண் டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘அவர்களை (பாட) விடுங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பியபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் சாடை காட்டி னேன். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள்.
Comments
Post a Comment