மனிதர்களில் ஒருவன் உமக்கு கொடிய பகைவனாவான்.

 மனிதர்களில் ஒருவன் உமக்கு கொடிய பகைவனாவான்.


2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இதயத்தில் உள்ளது பற்றி அல்லாஹ்வையே சாட்சியாக்குவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன்தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.


2:205. அவன் (உம்மை விட்டுத்) திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான், விளைநிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயற்சிப்பான்; இன்னும், கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.


2:206. "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது; நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிகக் கேடானதாகும்.

Comments