வீரத்தின் மரணம் - முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி)
இரண்டு சிங்கங்கள் ஒன்றாக இணைந்து சினேகம் கொண்டால் காடு யாருக்கு சொந்தம்?. இஸ்லாத்தின் வரலாற்றிலும் இது நிகழ்ந்தது. அந்த இரண்டு சிங்கங்களும் காடுகளிற்கு பதிலாக போர்க்களைங்களை தங்களிற்கு சொந்தமாக்கி கொண்டன.
நபி மதீனாவிற்கு வந்தடைந்ததும் கூட உள்ள முஹாஜிர்களில் ஒருவரை ஓர் அன்சாருடன் இணைத்து வைத்தார்கள். அந்த வகையில் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அவ்ஸ் கோத்திரத்து முஹம்மது இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு தோழரானார்.
அமைதியான முகம், ஆழ்ந்த இறைவழிபாடு, கவித்துவமான பார்வை இவையெல்லாம் சேர்ந்து முஹம்மது இப்னு மஸ்லமாவை ஒரு சாந்தப்போக்காளராக இனங்காட்டும். ஆனால் அதற்கு பின்னால் ஒரு அரேபியாவின் சிறந்த குதிரை வீரன், எதற்கும் கலங்காத சிந்தை கொண்ட செயல்வீரன், எடுத்த காரியத்தை சப்தமில்லாமல் முடிக்கும் ஆளுமை என்பன மறைந்து கிடந்தன.
அபூ உபைதா தான் கண்ட விஷயங்களை நபிக்கு சொல்ல நபியவர்கள் முஹம்மது இப்னு மஸ்லமாவை தனது அன்டர் கவர் ஒப்பரேசன்களிற்கான சரியான தெரிவாக தேர்ந்து கொண்டார்கள்.
நபியின் எல்லா போர்களிலும் செகன்ட் கொமாண்டாக செயற்பட்டவர். தபூக்கில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. மதீனாவின் சடோ டிபன்ஸ் லைனை நபி இவரிடம் கொடுத்திருந்தார். முஹம்மத் அஸ் எ மிலிட்டரி லீடர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் முஹம்மது இப்னு மஸ்லமாவை அவர் ஹேண்டில் பண்ணிய விதம்.
நபி மற்ற ஸஹாபாக்களிற்கு இன்னென்ன பொழுதுகளில் இப்படியிப்படி செய்யுங்கள் என இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தே சண்டைகளிற்கு அனுப்புவார். ஆனால் மஸ்லமாவிற்கு அப்படியல்ல, அசைன்மென்டை மட்டும் தான் சொல்வார்கள். பிளேனிங் அன்ட் எக்ஸிகியூட்டிங் எல்லாமே மஸ்லமா தான் டிசைட் பண்ணி மிசனை சக்ஸஸாக கொம்ப்ளீட் பண்ணுவார். அல்லாஹ் அவரிற்கு வழங்கிய அருள் அது.
கஅப் இப்னு அஷ்ரஃபினை படுகொலை செய்த வரலாற்றிலும், பனூ நளீர்கள் மீதான முற்றுகை வரலாற்றிலும் தான் முஹம்மது இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹுவை ஆலிம்கள் இனங்காட்டுவார்கள்.
நபியின் வழியில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் முஹம்மது இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹுவை ஒரு நிழல் இராணுவமாகவே பயன்படுத்தினார்கள். உமரின் காலத்தில் அவர் ஒரு படி மேலே போய் தன்னால் நியமிக்கப்பட்ட கவனர்களையும் அவர்களின் ஆட்சி முறைகளையும் பற்றிய கண்காணிப்பையும் விசாரணையையும் முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் வழங்கியிருந்தார்கள்.
கூஃபாவில் அதன் ஆளுனர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ஆடம்பரமாக வாழ்கிறார், கிலாபாவின் நிதியை விரயம் செய்கிறார் என உமர் அறிந்த போது அவர் அனுப்பியதும் மஸ்லமாவைத்தான். நேராக கூபா வந்த அவர் முதலில் செய்த வேலை ஸஅத்தின் மாளிகையின் வாசலின் பெரிய மரக்கதவுகளை கொளுத்திவிடும் படி தனது டீமிற்கு உத்தரவிட்டார்.
ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹுஅன்ஹு அதனை கண்டு வாளை உருவவில்லை. என்ன சொன்னார் தெரியுமா “யா மஸ்லமா நீங்கள் நபியின் நிழல் கரம், நீங்கள் இதனை செய்தால் அதில் நியாயமிருக்கும். நான் இனி இந்த தவறை செய்ய மாட்டேன்” என்று. இது தான் நபி தம் தோழர்களிற்கு அளித்த தர்ப்பியத்.
உஸ்மான் ரலியல்லாஹுவின் படுகொலை, அலி ரலியல்லாஹு நடத்திய யுத்தங்கள் முஹம்மது இப்னு மஸ்லமாவை துயர் கொள்ள வைத்தது. வாளை முஆவியாவிற்கு எதிராக உருவ கையை வைத்தார்கள். அப்போது நபியின் வார்த்தைகள் அவர் இதயத்தில் ஒலித்தன.
“ ஓ முஹம்மது! ஒரு காலத்தில் சண்டையும் சோதனையும் கருத்து வேறுபாடும் தோன்றும். நீ உனது வாளை முறி; தூரம் செல்; விலகி விடு; உன் இல்லத்தில் தங்கிவிடு”. தருணம் சரி என்று உணர்ந்தார்கள். தனது வாளை, இஸ்லாத்தின் கொடிய எதிரிகளின் தலைகளை பந்தாடிய வாளை ஒரு பாறையில் தெண்டி முறித்தெறிந்தார்கள்.
“குஃபாரை கொன்ற வாள் ஒரு போதும் முஸ்லிமை கொல்லாது” இது அதனை உடைக்கும் போது அவர் சொன்ன வார்த்தை.
மதீனாவிற்கு அப்பால் ரப்தா என்ற இடத்திற்கு சென்று அங்கேயே வாழ்வின் இறுதி வரை தங்கிவிட்டார்கள். 77 வயது முதிர் கிழவர். நபியின் சீக்ரட் அசைன்மென்ட்களை கச்சிதமாக சப்தமில்லாமல் செய்து முடித்த சடோ கொமாண்டர், முஆவியா ரலியவர்கள் மதீனாவை வந்தடைந்த போது, ஒரு கொடியவன் முஹம்மது இப்னு மஸ்லமாவை தேடி வந்து குத்திக் கொன்றான்.
“முஹம்மது இப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற ஒவ்வொருவரையும் ஃபித்னா தாக்கும் என அஞ்சுகிறேன். , முஹம்மது இப்னு மஸ்லமாவை ஃபித்னா தாக்காது" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பதிவர் @ Abu Maslama.
Comments
Post a Comment