தீயதும் நல்லதும் சமமாகாது,தேவையில்லாத கேள்வியை கேட்காதீர்கள்.
5:100. (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும் நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்; அதனால், நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக!
5:101. நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக்கொண்டிராதீர்கள்: (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) வருத்தம் தரக்கூடும்; மேலும், குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிடும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்துவிட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், சகிப்புத்தன்மையுடையோனுமாவான்.
5:102. உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர், அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகிவிட்டார்கள்.
Comments
Post a Comment