தூர் மலையை உயர்த்திய சமூகமும், சனிக்கிழமை மீறிய சமூகமும்
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
(அல்குர்ஆன் : 2:63)
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
(அல்குர்ஆன் : 2:64)
தூர் மலையை உயர்த்திய சமூகத்திற்கு முந்தின சமூகம்தான், சனிக்கிழமை மீறிய சமூகம்
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
(அல்குர்ஆன் : 2:65)
இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 2:66)
Comments
Post a Comment