கிப்லாவை பின்பற்றுதல் பற்றி,ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு
2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என்று; (நபியே!) நீர் கூறும்: "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் செலுத்துவான்" என்று.
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் (மற்ற) மனிதர்களுக்குச் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள், யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங்கால்கள்மீது பின்திரும்பிச் செல்கிறார்கள் என்பதை நாம் அறிவிப்பதற்காகவேயன்றி, எதன் மீது (இதுவரை) நீர் இருந்து வந்தீரோ அந்தக் கிப்லாவை நாம் (மாற்றி) அமைக்கவில்லை; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருக்கிறது; அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள்மீது கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:144. நபியே! நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம்; ஆகவே, நீர் (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வதைப் பற்றிப் பராமுகமானவனாக இல்லை.
2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லா விதமான அத்தாட்சிகளையும் கொண்டு வந்த போதிலும், அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர், இன்னும், அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே, (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்தபின் நீர் அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றுவீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
2:146. எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்தோமோ அவர்கள், தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் இதனை (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்துள்ளதாகும்; ஆகவே, (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:148. ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர்; நன்மைகளின்பால் நீங்கள் முந்திக்கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் கொண்டுவருவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
2:149. ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே திருப்பிக்கொள்வீராக! நிச்சயமாக இது தான் உம் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மை; அல்லாஹ் நீங்கள் செய்பவைப்பற்றிப் பராமுகமானவனாக இல்லை.
2:150. ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது), உம் முகத்தை (கஃபா
Comments
Post a Comment