உண்மையான வரலாறு

 வரலாறு என்பது இறைவன் மனிதனை படைத்த காலம் முதல் இன்று வரை உள்ளது.


ஆனால் வரலாறு குர்ஆன் மட்டுமே உண்மையான வரலாறு கூறுகிறது அதாவத.குர் ஆனை தவிர உலகில் எந்த ஒரு வேதமோ கிதாப்களோ சத்தியம் பேசாது.  மனிதன் கை படிந்தது ஆகும்.


அதன் முன்னே இறங்கிய இன்ஜீல் வேதம் மனிதனால் கறைபடியப்பட்டது.அப்போ மனிதனால் கரை படிந்த வேதம் என்று சொல்லக்கூடிய பைபிள்,தோரா,யூதர்கள் கையில் உள்ள வேதத்தில் ஏதாவது வசனம்  சொல்லிருக்குமானால் அது அல்லாஹ்தான் சொல்லி இருக்கிறான் என்று எப்படி நாம் நம்பமுடியும்.அதுவும் அல்லாஹ் இந்த குர் ஆனில்  நான் தவ்ராத்திலும்,இன்ஜீலிலும் இந்த வசனத்தை கூறியுள்ளேன்.மனிதர்களே பாருங்கள் என்று குர் ஆனில் சொல்லி இருக்கும் வசனம் மட்டுமே சத்தியம் ஆகும். பின்னால் நாங்கள் சிறு வசனங்களை குறிப்பிட்டுள்ளோம்.


12:102. (நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.


28:3. நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.


(61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்


இந்த வசனம் இப்போது உள்ள பைபிளில் இருக்கிறது.)


யோவான் 14:16,17

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

யோவான் 15:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 16:7

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.


இப்படி சில வசனங்கள் மட்டுமே இருக்கும்,மீதி எல்லாம் கரை படிந்து விட்டது.


குர் ஆன் 

7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.


நபி ஸல் அவர்கள் உலகிற்கு வந்தது முழுமையான இபாதத்திற்க்காக மட்டும் இல்லை,அதாவது நோன்பு,தொழுகை,ஹஜ்,கலிமா,இப்படி இறைவனை வணங்கக்கூடிய செயல் மட்டுமே உலகிற்கு எடுத்து சொல்ல வரவில்லை.உலகிற்கு வந்ததின் முழு நோக்கம். (7:157) குர் ஆன் இறங்கும் முன் தவ்ராத்திலும் இன்ஜீலிலும்இந்த வசனத்தை கூறிவிட்டான்.நோன்பு,தொழுகை,ஹஜ்,கலிமா,இப்படி இறைவனை வணங்கக்கூடிய செயலில் தீன் என்று சொல்லக்கூடிய (7:157) வசனங்களும் சேரும்.


3:50. “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”



5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.


மூஸா நபியை பின்பற்றும் மக்களுக்கு அல்லாஹ் வாக்குறுதி கொடுத்தான் அவர்கள் செய்ய வில்லை.


5:66  தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன.



நபி ஸல் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தான் அவர்கள் செய்தார்கள்.அவர்களுக்கு பின் வந்த சிலருக்கு வாக்குறுதி கொடுத்ததை அல்லாஹ் செய்தான்.                                                                                                                                            24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்


5:44. ‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!



2:121. (நபியே!) எவர்கள் நாம் கொடுத்த (‘தவ்றாத்') வேதத்தை அதன் முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே!


குர் ஆன் 

48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.


தொழுகை,நோன்பு,ருகூஃ , ஸுஜூது,இப்படி எங்களுக்கு கொடுத்ததை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று நாம் கூறுவதும் நியாயம் இல்லை 


இது மட்டுமே நபி ஸல் அவர்கள் செய்ய வந்தார்கள் என்று பிரித்து வைத்ததுனால் நமக்கு கஷ்டங்களுக்கு மேல் கஷ்ட்டம் வருகிறது.


நபி ஸல் அவர்களுக்கு பின்னால் வந்த நமது உம்மத் செய்ய தவறிய செயல் பின்வருமாறு,தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும்,மூன்றிலும் சொன்ன செயல்,நபி ஸல் அவர்கள் அவர்களுடைய தோழர்கள் மட்டுமே செய்யும் செயல்.

அதை விட்ட காரணத்தினால் உம்மத் சீரழிகிறது.


9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.



48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள்,


நபி ஸல் அவர்களுடைய தோழர்கள் தவிர பின் வந்த சில குலஃபாய ராஷிதீன்கள்.சில பேர்களை தவிர  காஃபிர்களிடம் கண்டிப்பானதாக இருப்பதை விட்டு ஒதுக்கினார்கள்.


வேதத்தை பலவாறாக பிரித்தார்கள்.


62:5. ‘தவ்றாத்' என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்.


2:44. நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகிறீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?


9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!


103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).


ஆகவே பின்னில் வரக்கூடிய நாம் எல்லாரும் இதை செய்தாலும்.உயர்ந்தோனாகிய  அல்லாஹ் கருணை காட்டவேண்டும் இல்லையானால்.நமக்கு நஷ்டம். அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.                                                                                                                                                        இந்த வரலாறு எல்லாம் மக்களை தலைவர்களாக  ஏற்று நடந்தார்களே அவர்களே சாரும் அதுதான் ஆட்சி ஒரு முள் படுக்கை அதை ஏற்று நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.

ஒரு வீட்டின் தலைவன் எப்படி பொறுப்பில் வருவானோ?

அதே போன்று ஒரு நாட்டின் தலைவனும் ஒப்பாவான்

Comments