யூதர்கள்,கிறிஸ்தவர்கள் வழியை பின்பற்றாதவரையில் திருப்பதி கொள்ள மாட்டார்கள்,வேதத்தை ஒதுபவர்கள் அதன் முறைப்படி ஒதுகிறார்கள்.

 யூதர்கள்,கிறிஸ்தவர்கள் வழியை பின்பற்றாதவரையில் திருப்பதி கொள்ள மாட்டார்கள்,வேதத்தை ஒதுபவர்கள் அதன் முறைப்படி ஒதுகிறார்கள்.



(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.

(அல்குர்ஆன் : 2:120)



யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

(அல்குர்ஆன் : 2:121)

Comments