புஹாரி 7533 இந்த ஹதீதில் இருந்து நாம் ஒரு பாடம் எடுக்கலாம்.
காலத்தை ஒப்பிட்டு கூறி அல்லாஹ் மனிதனுக்கு நன்மை ஒரு கிராத், இரண்டு கிராத் நன்மை கூறுவதை பற்றி கூறுகிறான்.
ஆனால் இதில் மறுமை நாளின் அடையாளத்தில் ஒரு செய்தி ஒளிந்து இருக்கிறது.
அது என்னவென்றால் வேதம் கொடுக்கப்பட்டு அதை செயல்படுத்தும் மற்றும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது கவனித்தீர்களா?
கவனியுங்கள்,‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள்.
காலைமுதல் நண்பகல் வரை என்பது நீங்கள் எந்த நேரம் முதலும் முடிவும் எடுத்துக்கொள்ளுங்கள் நான் இங்கு தோராயமாக 6 முதல் 12 வரை எடுத்துக்கொள்கிறேன்.இதற்க்கு இடையில் 6 மணி நேரம் இருக்கிறது. 1 மணி நேரத்தை 1000 வருடமாக எடுத்துக்கொள்வோம் (இது வரலாறு என்று எடுக்கவேண்டாம் மனிதன் புரிந்து கொள்ள நான் இந்த வருடக்கணக்கை எடுத்து உங்களுக்கு காட்டுகிறேன்)
1 மணி நேரம் 1000 வருடம் அப்போது 6 மணி நேரம் 6000 வருடமாக வைத்துக்கொள்வோம்.பிறகு.
பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டார்கள்
இங்கு நண்பகல் முதல் அஸர் வரை இப்போது நாம் விட்ட நேரம் முதல் தொடங்குவோம்.இங்கு தோராயமாக 12 முதல் 04 வரை
அப்போது இவர்களுக்கு நேரம் காலமாக மாற்றினால்
12 மணி முதல் 4 மணிவரை (4 மணி நேரம் ஆகும் இதை நாம் வருடத்திற்கு மாற்றுவோம்)
1 மணி நேரம் 1000 வருடம் வைத்தால்
4 மணிநேரம் 4000 வருடம் கொடுக்கப்பட்டிருக்கு.
பின்னர் உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்பட்டீர்கள்\
இங்கு நேரம் அஸர் முதல் மக்ரிப் வரை விட்ட நேரம் 4 மணி முதல் 6 மணி வரை எல்லாம் கால அளவும் தோராயமாக எடுக்கப்படுகிறது.வரலாறு இல்லை மனிதன் புரியமட்டுமே .........
இப்போது நேரம் 4 மணி முதல் 6 மணி வரை அப்போது 2 மணி நேரம் ஆகும்.
1 மணி நேரம் 1000 வருடம்
2 மணி நேரம் 2000 வருடம் ஆகும்.
இப்போது.தவ்ராத்’ வேதக்காரர்கள் 6000 வருடம்
இன்ஜீல்’ வேதக்காரர்கள் 4000 வருடம்
குர்ஆன் வழங்கப்பெற்றவர் 2000 வருடம்
இப்போது குர்ஆன் வழங்கப்பெற்றவர்கள் உம்மத் முடியவில்லை.அப்போது தவ்ராத்’ வேதக்காரர்களும் இன்ஜீல்’ வேதக்காரர்களும் கொடுக்கப்பட்ட கால அளவை விட இங்கு நமக்கு கம்மி
அப்போது நாம் 2000 வருடமே இருப்போம்.
அது எப்படி நீங்கள் மனதில் தோன்றியதை கூறுகிறீர்கள் என்று கேட்கலாம்.
தவ்ராத்’ வேதக்காரர்களுடைய வரலாறு உள்ளது எத்தனை வருடம் என்று பார்த்துக்கொள்ளலாம்.
இன்ஜீல்’ வேதக்காரர்ளுடைய வரலாறு உள்ளது சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இதையெல்லாம் நீங்கள் கவனித்தால் குர்ஆன் வழங்கப்பெற்ற நாம் நம்மளுடைய கால அளவை இந்த ஹதீதின் அடிப்படியில் கணக்கு போட்டு கொள்ளலாம்.
இந்த பாடம் எல்லாம் மனிதனை பிரிவினைக்காக இல்லை மக்கள் தங்கள் ஈமான்களை வலுப்படுத்தவே......
7533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது.
பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு “கீராத்’கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், “இவர்கள் வேலை செய்ததோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்குரிய உரிமை (கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், “அது (முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான். இதில் புஹாரி இமாம் கூறியதாக ரஹ்மத் பப்ளிகேஷன் கூறிய விளக்கம் (பாடம்) இது
பாடம்: 47 “(நபியே!) கூறுக: (யூதர்களே!) தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக்காட்டுங்கள்” எனும் (3:59ஆவது) இறைவசனம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள். ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அதன்படி செயல்பட்டார்கள். உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் அதன்படி செயல்பட்டீர்கள்.172 “அதை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகிறார்கள்” எனும் (2:121ஆவது) வசனத்திற்கு அபூரஸீன் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில், “அதைப் பின்பற்றி முறையாக அதன்படி செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளார்கள். ‘யுத்லா’ எனும் சொல்லுக்கு ‘ஓதப்படுதல்’ என்பது பொருள். ‘ஹசனுத் திலாவத்’ என்றால், குர்ஆனை அழகிய முறையில் ஓதுதல் என்பது பொருள். குர்ஆன்மீது (உண்மையான) நம்பிக்கை கொண்டவர்தான் அதன் சுவையையும் பயனையும் அடைவார். அதை உறுதியோடு நம்பியவர்தான் உரிய முறையில் அதைச் சுமப்பார். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தவ்ராத் வேதத்தைச் செயல்படுத்தும் (பொறுப்புச்) சுமை வழங்கப்பட்டு அதைச் சுமக்கத் தவறியவர்கள் ஏடுகளைச் சுமக்கும் கழுதை போன்றவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை நம்ப மறுத்துவிட்டவர்களின் நிலை மிகவும் கெட்டது. அக்கிரமக்கார மக்களை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை (62:5). நபி (ஸல்) அவர்கள் கீழ்ப்படிதல் (இஸ்லாம்), நம்பிக்கை (ஈமான்), தொழுகை ஆகிய அனைத்தையும் ‘செயல்’ (அமல்) என்றே குறிப்பிட்டார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அதிகமான நன்மையை எதிர்பார்த்துச் செய்த நல்லறம் எது?” என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “அதிக நன்மையை எதிர்பார்த்து நான் செய்த நற்செயல் எதுவெனில், நான் அங்கத் தூய்மை (உளூ) செய்து தூய்மையாகிக் கொள்ளும்போதெல்லாம் (இரண்டு ரக்அத்கள்) தொழுதுகொள்வேன்” என்று பதில் சொன்னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல் களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் நம்பிக்கை கொள்வதும், பின்னர் அறப்போர் புரிவதும், பின்னர் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ்ஜும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
Comments
Post a Comment