நம்பிக்கை கொண்டவர்களே,முஹ்மீன்களே

 நம்பிக்கை கொண்டவர்களே,முஹ்மீன்களே 


2:207. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்; அல்லாஹ் (இத்தகைய தன்) அடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.


2:208. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர, ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவன் ஆவான்.


2:209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும், நீங்கள் சறுகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; ஞானமுள்ளவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Comments