மறுமை நாள்

 செயலுக்கு (ஹதீத்) தகுந்தது போல் குர்ஆனை ஆதரமாக எடுக்க கூடாது. குர்ஆனுக்கு தகுந்தது போல் ஹதீதை ஆதரமாக எடுக்கவேண்டும்.


குர்ஆனை அரபியில் மட்டும் படித்தவர்கள்,அதன் கொள்கையை விளங்காமல் 

குர்ஆனை தமிழில் மட்டும் படிக்க தெரிந்தவர்கள், அரபியின் பொருள் அர்த்தம் விளங்காமல்.இரண்டும் நஷ்டவாளிகள் 


இரண்டையும் கற்றவர்கள் கல்வி அறிவு பெற்றவர் ஆவர்


73 கூட்டத்தில் 72 கூட்டம் நரகம் செல்வார்கள், ஒரேயொரு கூட்டத்தை தவிர...........


உலகதில் உள்ள குடும்பம், சமூகம், ஜாதி, மதம், இனம், மொழி, பிறப்பில், தொழிலில், இப்படி ஏராள வகை பிரிவினை ஆனால் 

இறைவனால் அனுப்பபட்ட நபி வந்துவிட்டார் என்றால் அவரை மட்டுமே பின்பற்ற வேண்டும்.


முதலில் அவர் அரபு தேசத்திற்கு மட்டுமே தூதர் அவரின் வேலை உலகின் முழு வகையான மக்களுக்கும் ஒரு முன்மாதிரி இருக்கிற காரணத்தால் அவரை உலகின் தூதராக அல்லாஹ் மாற்றி விட்டான்.


நாம் இறைவனை நம்பி நபி ஸல் அவர்கள் இறைவனின் தூதர்தான் என்ற ஒற்றை வார்த்தை ஒரு வரியின் மூலம் மனதின் நினைத்து கொண்டால் மட்டும் இறைவனின் மார்க்கத்தின் ஏற்று கொண்டவறாக வராமட்டோம்.

ஏனென்றால் அவர்கள் கற்று தந்த மார்க்கம் முழுவதுமே அவர்களின் பின்தோன்றல்களின் சிலரை தவிர்த்து பெரும்பலான பேர் மார்க்கத்தை முழுமையாக திருப்பி விட்டார்கள்.


குர்ஆன் கூறும் சத்தியங்கள் எப்படியோ அதேபோல் வாக்குறுதி மீராத ஒருவன் அவன் (உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்.)


15:89. “பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நபியே நீர் கூறுவீராக;



15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,


புஹாரி 4706. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


“(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர்மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே” எனும் (15:90ஆவது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறித்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தமது வேதத்தில்) சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள்.


இதை அபூழப்யான் ஹுஸைன் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்


தவ்ராத், இன்ஜீல்,கொடுத்த வேதத்தை (மூஸா, ஈசவை, பின்பற்ற கூடிய) இவர்கள் பலவாராக  பிரித்தார்கள் என்று கூறுகிறான்.


அதே போன்று 


15:91. இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).


இது இந்த முஸ்லீம் உம்மத் உள்ள குற்றசாட்டு மட்டும் முன்னறிவிப்பு,

இந்த உம்மத் குர்ஆனை பிரிக்கும் என்று கூறுகிறான். ஹதீத்தகளில்

உள்ள பிரிவினை சொல்ல வில்லை.குர்ஆனில் பிரிவினை  என்று கூறுகிறான், அதை பின்வருமாறு பாப்போம்.


15:92. உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.


இதன் மூலம் அல்லாஹ் கூறக்கூடிய வார்த்தை குர்ஆனை பிரிப்பீர்கள் என்று குர்ஆனை பிரிப்பது என்றால் என்ன குர்ஆன் தொடங்கிய முதல் இப்போது வரை அதனுடைய வசனங்களும், அத்தியாயங்களும் ஒரு எழுத்தோ, ஒரு புள்ளியோ மாறவில்லை, அப்போது எதைத்தான் அல்லாஹ் பிரிப்பதாக கூறுகிறான்.குர்ஆனின் வசனத்தை அதன் பொருள் வடிவத்தைதான் இவர்கள் அவர்அவருக்கு எற்றார் போல் பிரிப்பார்கள். என்று கூறுகிறான்.


முதலில் நபி ஸல் அவர்களின் குணம் எப்படி இருந்தது என்று பாப்போம் 

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களை பற்றி நபி ஸல் அவர்கள் குர்ஆனாக வாழ்ந்ததாக கூறினார்கள்,


முஸ்லிம் 1357. ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் 

சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் பற்றி  ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்கள் சொன்ன வார்த்தை என்னவென்றால், "நீர் குர்ஆனை ஓதவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கி றேன்)" என்றேன், அதை தொடர்ந்து இந்த கேள்வியை சஅத் கேட்கிறார். 

நான் (சஅத்) "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!" எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் 

"நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது" என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன் என்று சஅத் கூறினார்.


நபி ஸல் அவர்கள் இபாதத் தொழுகை மட்டும் எடுத்தால் தொழவேண்டும் என்று மட்டும் அவர்களுடைய குணம் இல்லை நபி ஸல் அவர்களை பார்த்துதான் இபாதத் மற்றும் தீன் செயல் படவேண்டும், இன்று உம்மத் தீனை விட்டுவிட்டு இபாதத்தை மட்டும் பிடித்து கொண்டு இருக்கிறது.


ஆனால் நபி ஸல் அவர்கள் தன்னுடைய 23 வருட நுபுவத்தில் இந்த இபாதத் ஒரு பகுதி மட்டுமே மீதி ஒரு பகுதி என்ன என்பது ஹதீதுகளில் உள்ளது ஆனால் உள்ளத்தில் வஹ்ன் (நோய்) உள்ளவர்கள்.அந்த பகுதியை மறுத்துவிட்டார்கள்.(மறைத்துவிட்டார்கள்) 


எப்படி குர்ஆனை பிரித்தார்களோ.அதேபோன்று


அது என்னவென்றால்.

நபி ஸல் அவர்கள் தோராயமாக முதல் 10 வருடம் குர் ஆனில் மக்காவில் அருளப்பட்ட வசனத்தை ஓதும் போது அல்லாஹ்வை வணங்குங்கள்,என்று சொல்லக்கூடிய அவனை போற்றக்கூடிய வசனமாகவும் நன்மை செய்யுங்கள் என்ற வசனமாகவும்,எச்சரிக்கை செய்யும் வசனமாகவும்,வரலாறு,இது போன்ற சாயலில் இருக்கும். உதாரணம். 



மேலும்,ஸூரத்துல் காஷியா,ஸூரத்துல் கியாமா,ஸூரத்துல் முஃமின்,சூரா மாஊன், சூரா காஃபிரூன்,சூரா ஜில்ஜால்,சூரா லுஹா இப்படி நிறைய சூராக்கள் உள்ளன.


ஆனால் மதினாவில் இறங்கிய வசனங்கள்,அவர்கள் தன்னுடைய இறைவனுக்காக போர் செய்பவர்களாக இருக்கும்.


போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.

(அல்குர்ஆன் : 2:216)


அந்த அறவழிபோர் சில நயவஞ்சகர்களால் இது நபி ஸல் அவர்கள் காலத்தில் மட்டும் உள்ளது அது பின்வரும் உம்மத்துக்கு கடமை இல்லை என்று அதை மறைக்கப்பட்டுவிட்டது.


3:7

அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 3:7)



இந்த நயவஞ்சகர்கள்  நபி ஸல் அவர்கள் காலத்தில் உள்ள போர் அவர்களுக்கு மட்டுமே நமக்கு இபாதத் மட்டுமே என்று சொல்லும் நபர்கள் அவர்களுக்காக அல்லாஹ் இந்த வசனம் தயார் செய்துள்ளான். யார் மனதில் வழிகேடு உள்ளதோ அவர்கள் முதஷாபிஹாத் வசனத்தை தேடுவார்கள்.


மேலும் 3:144

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

(அல்குர்ஆன் : 3:144)



இதுவே மிக சிறந்த ஆதாரம் உங்களுடைய பழைய மதத்திற்கு திரும்பி விடுவீர்களா........ என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.


எந்த பள்ளியிலும் குர்ஆன் மட்டும் தப்ஸிர் மட்டும் வைத்து பயான் செய்வது இல்லை ஒருவரை ஒருவர் பழி தீர்த்து கொண்டு விதமாக பயான் நடக்கிறது.


நபி ஸல் அவர்கள் மதினாவில் 13 வருடம் அல்லாஹ்வுடைய மார்க்கம் நிலை பெற அவர்கள் யுத்தம் செய்த முறை வரலாறு ஒவ்வொரு நபரையும் கண் கலங்க வைக்கும், போருக்கு வந்த ஷாகாப்பாகள் குறித்து சில தவறை அல்லாஹ் சுட்டி காட்டி உள்ளான்.


9:16 

9:16. (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.



போரில் இறங்கிய வசனம் அப்பேர்ப்பட்ட நிலையில் உங்களை சோதிக்காமல் அல்லாஹ் விட்டுவிடுவான் என்று எண்ணுகிறீர்களா என்று சஹாபாக்களை பார்த்து கேட்கிறான் என்றால். இன்று நீங்கள் நாங்கள் செய்யும் அமல் என்ன. இதை வைத்து சொர்க்கம் போக முடியும் எண்ணுகிறீர்களா இல்லை.



உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?

(அல்குர்ஆன் : 3:142)


ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

(அல்குர்ஆன் : 3:195)


இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 3:152)


“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”

(அல்குர்ஆன் : 4:77)


(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், “அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்” என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.

(அல்குர்ஆன் : 4:72)


அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் : 3:86)


(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).

(அல்குர்ஆன் : 3:168)


(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர் தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.

(அல்குர்ஆன் : 6:36)


உங்களையும் எங்களையும் சொர்க்கம், நரகம், என்ற இடத்தில் இட தீர்மானிப்பது அல்லாஹ்வுடைய எண்ணம் மட்டுமே நீங்களோ, நானோ செய்யும் அமல் இல்லை.


நிச்சயமாக எந்த மனிதரையும் அவருடைய அமல் அவரை சொர்க்கத்தில் நுழைவித்துவிட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கூடவா? என்று கேட்டனர். அதற்கவர்கள், ஆம், நானும் கூட, அல்லாஹ்வின் கருணையும் பவமன்னிப்பும் என்னை சூழ்ந்து கொள்ளவில்லை என்றால் என்னைக் கூட என்னுடைய அமல் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடாது என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : புகாரீ 5986) இந்த புகாரி நம்பர் சில கிதாப்களில் வேறுபடும்.


அல்லாஹ் மன்னிப்பவன் என்ற  எண்ணம் மட்டும் இருந்தால் 4:31 வசனத்தை படிக்கவும் 


நாம் என்ன நினைத்து கொண்டு இருக்கிறோம் அல்லாஹ் சொல்லும் பெரிய பாவமான காரியத்தை விட்டுவிட்டால் சிறிய பாவத்திற்கு அல்லாஹ் மன்னித்து விடுவான் என்ற எண்ணம் மட்டுமே எவனுடைய உள்ளத்தில் வந்து சிறிய பாவம் செய்யலாம் என்ற எண்ணம் வந்தால் 53:32 வசனத்தை யோசித்து கொள்ளுங்கள்.


53:32


(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.  

(அல்குர்ஆன் : 53:32)


எந்த நபி எந்த ஒரு சமூகத்திற்கு வந்தார்களோ அவர்களுடைய சமூகத்தை வறுமை போன்ற காரணங்களால் சோதிக்காமல் இருந்தது இல்லை, அப்போது மட்டும் நபி ஸல் அவர்களை ஏற்ற நமக்கு மட்டும் பணம், புகழ், பதவி, இதெல்லாம் கொடுத்து நம்மளை அழகு பார்க்கவா....... இல்லவே இல்லை உலகை அழிக்க மட்டுமே...... அந்த ஒரு பேரு நிகழ்வை பார்த்து பயந்து கொள்வோம்.......


நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.

(அல்குர்ஆன் : 7:94)


செல்வ செழிப்பு இந்த உம்மதுக்கு கூடுதலாக தந்தால் இந்த உம்மத்தை அல்லாஹ் நேசிக்க வில்லை இனி அழிவு மட்டுமே அதுவே மறுமை நாள்.......நபி ஸல் அவர்களுடைய ஒரு பெரும்பகுதியை மறைத்ததினால் அவர்களின் நிலை அல்லாஹ் கூறுகிறான்.


பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.

(அல்குர்ஆன் : 7:95)



கருத்து வேறுபாடு கொண்டால் கோழைகள் ஆவர்கள்


இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:46)



அந்த ஒரு கூட்டம் அவர்களுக்கு மறுமை வெற்றி என்று அல்லாஹ் கூறும் கூட்டம்.


இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும்  பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

(அல்குர்ஆன் : 9:100)


(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

(அல்குர்ஆன் : 9:111)


மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

(அல்குர்ஆன் : 9:112)

Comments