ஹலால் ஆக்கப்பட்டுள்ள பொருள்,கருத்து வேறுபாடு கொண்டவர்கள் உடைய நிலமை

 ஹலால் ஆக்கப்பட்டுள்ள பொருள்,கருத்து வேறுபாடு கொண்டவர்கள் உடைய நிலமை 


2:172. நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்.


2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுக்கப்பட்டதையும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது தடைசெய்திருக்கிறான்; ஆனால், எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனுமாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.


2:174. எவர் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குப் பகரமாக சொற்ப தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.


2:175. அவர்கள் தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்; இவர்களை நரக நெருப்பைச் சகித்துக்கொள்ளச் செய்தது எது?

2:176. இதற்குக் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் இறக்கியுள்ளான்; இன்னும், இவ்வேதத்திலே நிச்சயமாக கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) தூரமான பிளவிலேயே இருக்கின்றனர்.

Comments