வேதமுடையோர் உங்கள் மீது நன்மை இறங்குவது
விரும்பவில்லை, அல்லாஹ்வின் அறிவுரை
அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
(அல்குர்ஆன் : 2:105)
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 2:106)
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 2:107)
Comments
Post a Comment