அல்லாஹ் கூறின செயலை செய்யவில்லையாயின் அவர்களுக்கு முன்னர் ஹாலால் ஆக்கப்பட்ட உணவு ஹராம் ஆக்கப்படும்
யூதர்களுக்கு ஹலால் என்று அல்லாஹ் அறிவித்தது மூஸா அலைஹி காலத்தில் அறிவித்த அல்லாஹ்
அதன் பிறகு அக்கிரமம் பண்ணிய விஷயங்களுக்காகவும் கலகம் பண்ணினதுற்காகவும் ஈஸா அலைஹி அவர்களை கொன்னதும் தான் அக்கிரமம் பண்ணதற்க்காகவும் தான் அவர்களுடைய ஆகாரம் ஹராம் ஆக்கினான் அவ்வாறு ஆக்கினதை அவர்களுக்கு அதை பின்பு அறிவிக்க வேண்டும் ஆனால் அறிவிக்க வில்லை அதை அறிவிக்க வேண்டுமேனில் நபி வேண்டும் ஆனால் குர் ஆனில் அவர்களுக்கு ஹராம் ஆக்கினேன் என்று அல்லாஹ் கூறுகிறான், அது என்ன வென்றால் மனிதர்கள் அநியாயம் பண்ணினாலோ, கலகம் பண்ணினாலோ அவர்களுக்கு நபி வராமலே எப்படி ஹலால் ஆன உணவை ஹராம் ஆக்கினானோ, அதேபோன்று நமக்கும் நாம் கலகம் பண்ணினாலோ, நபி ஸல் அவர்களுடைய குடும்பத்தை இப்போது அவர்களை துரத்தி விட்டதினால் நமக்கும் ஹலால் ஆன உணவும் ஹராம் ஆக்கிருக்கிறான். அது என்னவென்று மனிதனுக்கு தெரியாது அதனால்தான் மனிதனுக்கு உலகில் உணவின் பழக்கவழக்கத்தில் நோய் வருகிறது.மனிதன் இதை உணரமாட்டான்.
ஈஸா அலைஹி அவர்களை நிராகரிக்கும் கூட்டம் எப்படி கொன்னதோ,
நாம் உம்மத்தும் நபி ஸல் அவர்களுடைய குடும்பத்தை கொன்றது, கொன்றத்திற்கு அர்த்தம் என்னவென்றால் போர்களில் கிடைக்க கூடிய பொருளை நபி ஸல் அவர்களின் குடும்பத்திற்கு 1 பங்கு விநியோகம் செய்ய வேண்டும்,
இப்போது எங்கே நபி ஸல் அவர்களின் குடும்பத்திற்கு கொடுக்க கூடிய அந்த பங்கு எங்கே இந்த நிலமை கொண்டு வந்த நம்மளும் அக்கிறமகாரர்கள்.
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
(அல்குர்ஆன் : 4:160)
எதனால் அவர்களுக்கு ஹராம் ஆக்கினேன் என்றும் கூறிவிட்டான். அல்லாஹ் அல்லாஹ்வின் பாதையின் செல்லவிடாமல் தடுத்தால் இது நடக்கும்.
இதில் கூறப்பட்ட உணவு ஹலால் ஆக்கபட்டுள்ளன இது நபி ஸல் அவர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கு எல்லா உணவும் ஹலால் ஆக்கப்பட்டுள்ளன ஆனால் பின்னால் வந்த சில நயவஞ்சகர்கள் நபி ஸல் அவர்களுடைய வேலையை செய்யாததினால் அவர்களுக்கு அவர்களுக்கு ஹலால் ஆக்கப்பட்டுல உணவு ஹலால் உணவு ஹராம் ஆக்க பட்டு விட்டது (இனி வர்றவர்களுக்கு நபி ஸல் அவர்கள் வேலையை செய்ய வில்லையென்றாலும் அவர்களுக்கு ஹராம் ஆக்கப்பட்டு விடும்) இதன் அர்த்தம் அல்லாஹ்வின் வேலையை செய்ய வில்லைஎன்றால் உடம்பில் அந்த ஒரு தயாரிப்பை அல்லாஹ் இயற்கையாகவே கொடுத்துருக்கிறான். அதனால் முஹமீன்கள் மட்டும்தான் மரணத்தை சுவைக்கும்போது அதை அவர்களுக்கு இனிமையாக ஆக்கியுள்ளான்.
இதை போன்ற விஷயங்களை மனிதனுக்கு தெளிவாக விளக்க மனிதனால் முடியாது. இது மறைவான ஞானம் இதை விளக்க அல்லாஹ்வால் மட்டுமே முடியும்.
போதுமான அளவு விளக்கி உள்ளோம்.
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
(அல்குர்ஆன் : 5:5)
எல்லா உணவும் ஹலால் ஆக்கியது காரணம் அல்லாஹ் கொடுத்த வேலையை நபி ஸல் அவர்கள் முடித்து விட்டார்கள் அதனால் அவர்களுக்கு அது ஹலால்.
Comments
Post a Comment