முஹ்லிசீன் மற்றும் முஹ்லசீன்

முஹ்லிசீன் மற்றும் முஹ்லசீன் 


இரண்டும் ஒன்றல்ல இதேபோல் நிறைய வார்த்தைகள் ஒரே அர்த்தம் தரக்கூடியது அல்லாஹ் அரபியில் இரண்டு தரத்தில் பேசுவானானால் இரண்டு அர்த்தம் இருக்க வாய்ப்பு உண்டு உதாரணத்திற்க்காகவே இந்த முஹ்லிசீன் மற்றும் முஹ்லசீன் 


முஹ்லசீன் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுக்கக்கூடிய பதவி 

 

மக்கா வசனம் முஹ்லசீன்


اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏

“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).

(அல்குர்ஆன் : 38:83)


மக்கா வசனம் முஹ்லசீன்


لَـكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏

“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.

(அல்குர்ஆன் : 37:169)


اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏

அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.

(அல்குர்ஆன் : 37:160)


اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏

அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)

(அல்குர்ஆன் : 37:128)


اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏

அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-

(அல்குர்ஆன் : 37:40)


اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏

தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.  

(அல்குர்ஆன் : 37:74)


மக்கா வசனம் முஹ்லஸ்


وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى‌ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا‏

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.

(அல்குர்ஆன் : 19:51)


மக்கா வசனம் முஹ்லசீன்


اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏

“அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 15:40)


قَالَ هٰذَا صِرَاطٌ عَلَىَّ مُسْتَقِيْمٌ‏

(அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.

(அல்குர்ஆன் : 15:41)


முஹ்லிசீன் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு நீங்களே கூறிக்கொள்ளுங்கள் என்ற தரத்தில் பேசுவது 


இதை இப்படியும் புரியலாம் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு தன் பேசுவதில் மூலம் பொருள்கவும்,மற்றொன்று நீங்களே கூறும்போது இப்படி கூறுங்கள் என்று சொல்வதுமாகவும் இருக்கலாம்.


மதினா வசனம் முஹ்லிசீன் 


قُلْ اَ تُحَآجُّوْنَـنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّکُمْ وَلَنَآ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَۙ‏

அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.

(அல்குர்ஆன் : 2:139)


மக்கா வசனம் முஹ்லிசீன் 


قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۙ‏

(நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக.

(அல்குர்ஆன் : 39:11)


மக்கா வசனம் முஹ்லிசீன்


فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.

(அல்குர்ஆன் : 40:14)


மக்கா வசனம் முஹ்லிசீன்


فَاِذَا رَكِبُوْا فِى الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  فَلَمَّا نَجّٰٮهُمْ اِلَى الْبَـرِّ اِذَا هُمْ يُشْرِكُوْنَۙ‏

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.

(அல்குர்ஆன் : 29:65)


முஹ்லிசீன்


 قُلْ اَمَرَ رَبِّىْ بِالْقِسْطِ‌ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ‌    كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ‏

“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.

(அல்குர்ஆன் : 7:29)

Comments