சனிக்கிழமை தடுக்கப்பட்ட நாளை மீறிய சமூகம்
7:163. (நபியே!) கடலோரத்திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேளும்; அவர்கள் சனிக்கிழமையன்று வரம்புமீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால், அவர்களுடைய சனிக்கிழமையன்று நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே மீன்கள் வந்தன; ஆனால், சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) வருவதில்லை; அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
7:164. (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்னபோது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ இருக்கிறானோ, அந்தக் கூட்டத்தாருக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு (அந்த நல்லடியார்கள்), "உங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவதற்காகவும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்)" என்று கூறினார்கள்.
7:165. அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்துவிட்ட போது - தீமையைவிட்டு விலக்கிக்கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்புமீறி அக்கிரமம் செய்துகொண்டிருந்தவர்களை அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொண்டு நாம் பிடித்தோம்.
7:166. எதனை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை விட்டும் அவர்கள் வரம்பு மீறியபோது, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
2:65. உங்கள் முன்னோர்களிலிருந்து சனிக்கிழமை அன்று வரம்பு மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள்; அதனால், நாம் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த குரங்குகளாகிவிடுங்கள்" என்று கூறினோம்.
7:167. (நபியே!) உம்முடைய இறைவன் - அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள் மீது (ஆதிக்கம் செலுத்துமாறு) மறுமை நாள் வரை, திண்ணமாக அவன் அனுப்புவான் என்று அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன்; மேலும், நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
7:168. அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராக (சிதறித் திரியுமாறு) பிரித்துவிட்டோம்; அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; அதுவல்லாத (கெட்ட)வர்களும் அவர்களில் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
2:66. இன்னும், நாம் இதனை (அவ்வாறு மாறியவர்களை ) அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும், (நம்மை) அஞ்சுபவர்களுக்கு உபதேசமாகவும் ஆக்கினோம்.
இவர்களை நம்மளுடைய மக்கள் உருவங்கள் பன்றியாக அல்லாஹ் மாற்றிவிட்டான் என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.
5:60. "அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவர்களைச் சபித்து இன்னும், அவர்கள் மீது கோபமும் கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வணங்கியவர்களும்தான்; அவர்கள்தாம் தீய இடத்திற்குரியவர்கள்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
இந்த அடுத்த வசனத்தை கவனியுங்கள் சிந்தியுங்கள்
5:61. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உம்மிடம் வந்தால் "நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்!" என்று கூறுகிறார்கள்; ஆனால், உண்மையிலேயே அவர்கள் நிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இன்னும், அதனுடனேயே வெளியேறியும் விட்டார்கள்; அவர்கள் மறைத்து வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
5:62. அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறுவதிலும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதிலும் விரைந்து செல்வதை (நபியே!) நீர் காண்பீர்; அவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகும்.
5:63. அவர்கள் பாவமானதைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதிலிருந்தும், வணக்கசாலிகளும், (அவர்களுடைய) மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகும்.
Comments
Post a Comment