மேற்க்கில் உதிக்கப்போகும் சூரியன்

 புஹாரி 


3199. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன்.


நபி (ஸல்) அவர்கள், ‘‘அது இறை அரியணைக்குக் கீழே சிரவணக்கம் செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறை வனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒருநாள்) அது சிரவணக்கம் செய்ய, அந்த சிரவணக்கம் ஏற்கப்படாமல் போகவிருக்கிறது.


அப்போது அது (வழக்கம்போலக்) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘‘வந்த வழியே திரும்பிவிடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள்.


‘‘இதைத்தான், சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ (36:38) எனும் இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள்.

Comments