நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை.

 நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை.


இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.

(அல்குர்ஆன் : 2:118)


நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.


(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

(அல்குர்ஆன் : 2:119)

Comments