மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன்

 அல்லாஹ் நாம் பார்க்கும் இந்த உலகில் எந்த பொருள்களில் மீது சத்தியம் செய்கிறானோ அதை மனிதன் பார்க்கவில்லையா.

சத்தியம் செய்யும் ஒவ்வொரு பொருளும் எப்படி உண்மையாக பணிகிறது என்று 

அதை மனிதன் கவனிக்க மறுக்கிறான்.

வானம்,பூமி,கீழ்த்திசை,மேல்திசை,இப்படி எல்லாம் அல்லாஹ்வை வணங்குகிறது.என்று கூறுகிறான்.இங்கு வணக்கம் ஸுஜூது செய்வது இல்லை.அல்லாஹ்வின் கட்டளைக்கு பணிவது.

நாம் செய்யும்.தொழுகை,நோன்பு,ஜக்காத்,ஹஜ்,இது எல்லாம் அதில் ஒரு பங்கு, மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கிறான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். என்னவென்றால் உதாரணம். சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லுங்கள்.என்ற ரஸூருல்லாஹ்வின் வார்த்தைக்கு தன் வாழ்நாள்முழுவதும் மறதி இல்லாமல் செய்தால் அதுதான் தன் இறைவனுக்கு மாறு செய்யவில்லை என்று அர்த்தம்,இதே போல் எத்தனை விஷயங்கள் மனிதனுக்கு அமானிதமாக தந்துள்ளான்.அதை மனிதன் தன்னுடைய மரணம் வரை பாதுகாக்கிறானா இல்லை.அதுதான் இங்கு அல்லாஹ்வின் வார்த்தை உறுதியாகிறது.

மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் என்று.


103:1. காலத்தின் மீது சத்தியமாக.


91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-

91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-

91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-


100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-


100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,


100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-


100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,


100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-


100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.


100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.


நிச்சயமாக என்ற வார்த்தையை அல்லாஹ் இங்கு கூறியுள்ளான்.அதற்க்கு மனிதன் சாட்சியாக இருக்கிறான் என்றும்.கூறுகிறான்.

எவ்வளவு பெரிய சத்தியமாக இருந்தால் இந்த வார்த்தை பயன்படுத்தவேண்டும். (9:111-அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்?) இந்த குர் ஆனின் மகத்துவம் (அதை 59:21 கூறுகிறான்.) மலை மீது இறக்கினால் அது  பிளந்து போகும் இத்தகைய உதாரணத்தை மனிதன் சிந்திக்க மறுக்கிறான்.

(59:21. (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.) இப்பேற்பட்ட குர் ஆனை மறந்து பொருளை அளவு கடந்து நேசிக்கிறோம்.இதற்கான விளைவை மனிதன் விரைவாக உணர்ந்து கொள்வான்.


100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.


100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-


100:10. மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

100:11. நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்


107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?


107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.


107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.


107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.


107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.


107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.


102:1. செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-


102:2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.


102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).


102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.


102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.


இந்த வசனங்கள் எல்லாம் மக்காவில் இறங்கியவை அக்காலத்தின் சிறப்பு பார்போமேயானால் அக்காலமும் இக்காலமும் வித்தியாசம் இல்லை.அக்காலம் கல்விஅறிவு இல்லாமல் அறியமைக்கலாம்,

இப்போது கல்வி அறிவு இருந்து அறியமைக்கலாம்.இவ்வளவுதான் வித்தியாசம்.


அறியாமைக்கால சில பழக்கவழக்கம்.

மக்காவில் குறைஷி குலத்தில் உள்ள பனுஹாசிம் இடையே உள்ள கொலை வழக்கில் உள்ள தீர்ப்பு 

1. நீ விரும்பி னால், எங்கள் ஆளை நீ கொலை செய்த தற்காக (நமது மரபுப்படி) நூறு ஒட்டகத்தை (நஷ்ட ஈடாகச்) செலுத்தலாம். 2. நீ விரும்பி னால் உன் சமுதாயத்திலிருந்து ஐம்பது பேர் “நீ அவரைக் கொலை செய்யவில்லை' என்று சத்தியம் செய்யலாம். 3. (இந்த இரண்டையும் செய்ய) நீ மறுத்தால் உன்னை நாங்கள் அவருக்குப் பதிலாகக் கொன்றுவிடுவோம்”


ஆனால் குர் ஆனில் கூறுவது கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,இதுயெல்லாம் சமமான தண்டனை குறித்து சொல்லப்படுகிறது.


ஆனால் அதில் தீர்ப்பு என்னவென்றால் பொய்சத்தியம் செய்யவேண்டும் என்று கடைசியில் அந்த பொய் சத்தியம் செய்த பேர்கள் ஒருவரிடத்தில் இறந்துபோனதாக ஹதீத் புகாரி :3845 இல் உள்ளது.இந்த ஹதீத் பெரிது.சந்தேகம் உள்ளவர்கள்.சென்று கண்டுகொள்ளலாம்.


இது போன்று சட்டம் இப்போது சர்வசாதாரணம்.அதனால் உலகஅழிவைமிக சமீபமாகவே எதிர்பாருங்கள் 

மேலும் :புஹாரி :6107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் சத்தியம் செய்யும் போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’ வின்மீதும் சத்தியமாக என்று கூறிவிட் டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும். யார் தம் நண்பரிடம், ‘வா! சூது விளையாடுவோம்’ என்று கூறுகிறாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும்.


இங்கு ‘லா இலாஹ இல்லல்லாஹு’ என்ற சொல்லைத்தவிர எதுவுமே அறியாமை காலமே.


மேலும் புஹாரி: 7143. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்து போனாலும் அவர் அறியாமைக்கால மரணத்தையே தழுவுகிறார்.


இப்போது முஸ்லீமில் பிரிவினை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் இல்லை.


இந்த பூமியில் நான் அறியாமையினால் பேசப்படும் ஒரு வார்த்தையும் மறுமைநாளில் இறைவனை பயப்படவேண்டும்.ஆனால் இப்லீஸ் இங்கு எவ்வளவு பெரிய பகிரங்கமான விரோதி என்று உங்கள் மறதியை குறித்து சிந்தித்தோமானால் அதுவே மனிதன் எவ்வளவு பெரிய நஷ்டத்தில் இருக்கிறான்  என்று தெரியும்.


மனிதனே இங்கு உனக்காக ஒதுக்காமல் நீ ஒரு நாளில் இருக்கும் நேரம் முழுவதும் இறைவனை வணங்கினாலும் அவனுடைய படைப்புக்கு ஈடாகாது.


இந்த கட்டுரை மனிதனால் உண்டாக்கப்பட்டது.இதில் பிழை அல்லாஹ்வுக்காக இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.தயவு செய்து குர் ஆனை முழுமையாக பொருள் அர்த்தம் புரிந்து படியுங்கள்.


குர் ஆன் பாதுகாப்பாக வைக்கும் ஒரு பொருள் இல்லை,அதை இறைவன் மறுமைநாள் வரை அவன் பாதுகாக்கிறான்,


இந்த குர் ஆனை காஃபீர்கள் படித்து இது இந்த முஸ்லீம் கையில் இருந்தால் நமக்கு ஆபத்து என்று முஸ்லீம்களை கொன்று குவித்து கொண்டு இருக்கிறார்கள்.


இதை முஸ்லீம் ஆனவன் படித்தாலும் படிக்காமல் இருந்தாலும்,இதனுடைய விளைவை லா இலாகா இல்லல்லாஹ்  என்று மொழிந்தவன் இதனுடைய விளைவை சந்தித்தே தீரவேண்டும்.


புஹாரி :5761. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கும், அல்லாஹ் "இறைநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா?" (57:16) என்று இந்த வசனத்தின் மூலம் எங்களைக் கண்டிப்பதற்கும் இடையே நான்கு ஆண்டுகள் மட்டுமே இடைவெளி இருந்தது.


ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.

(அல்குர்ஆன் : 57:16)



3:142. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சொர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா?


அல்லாஹ்வுடைய சத்தியம் என்றும் பொய் ஆகாது

Comments