இப்ராஹீம் நபி சந்ததிகள் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள்தான் என்று கூறுதல்
2:140. "நிச்சயமாக இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் (அவர்களுடைய) சந்ததியினர் யாவரும் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: "நீங்கள் நன்கு அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவைப்பற்றிப் பராமுகமானவனாக இல்லை."
2:141. அது ஒரு சமூகம்; திட்டமாக அது சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே! நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்துகொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.
Comments
Post a Comment