இப்போது நபி ஸல் அவர்கள் முழு சமுதாயத்திற்கும் வந்ததன் நோக்கம் இங்கு பல பேர்கள் பல விதமான நோக்கங்களை கூறுகிறார்கள்.
அவர்கள் மக்காவில் இருக்கும் சிலைகளை அகற்றி இணைவைப்புகளை நீக்கி மஸ்ஜிதுல் ஹரமை புனித படுத்த வந்தார்கள் என்றும்,
வேறு சில கூட்டம் மனித இனம் முழுவதும் நன்மையை ஏவி தீமை தடுத்து ஒரு நல்ல மனிதர்களாக ஆக்கவும் நபி ஸல் அவர்கள் வந்தார்கள் எனவும் மேலும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
இதுவெல்லாம் நபி ஸல் அவர்கள் வந்ததிற்கு இதெல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும்
அல்லாஹ் நபி ஸல் அவர்களை நான் ரசூலாக அனுப்ப காரணங்கள் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான் பார்ப்போமா?
நபி ஸல் அவர்களை நான் தூதுவராக அனுப்ப மனிதர்களாகிய நீங்கள் அவர்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று முஸ்லீங்களுக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
அதை நான் தவ்ராதில்லும், இன்ஜீலிலும் கூறி இருக்கிறேன் என்றும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
இன்ஷாஅல்லாஹ் முதலில் அல்லாஹ் தவ்ராதில்லும், இன்ஜீலிலும் என்ன கூறி இருக்கிறான் என்று சொன்னதை பார்ப்போம்
மேலும் குர்ஆனில் சொன்னதாக சொன்னதையும் வார்த்தை கூட மாறாமல் என்ன சொல்லி இருக்கிறான் என்று பார்ப்போம்
اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:157)
அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று கேளுங்கள்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ
(அல்குர்ஆன் : 7:157)
இந்த எழுத படிக்க தெரியாத தூதரை யார் பின்பற்றுகிறார்களோ என்று கூறிவிட்டு அதன் பின் தவ்ராத், இன்ஜீலில் கூறப்படுகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அப்போது இந்த இரண்டு வேதங்களில் உள்ளவர்கள் தவ்ராத், இன்ஜீல் வேதத்தை பின்பற்றுகிறார்கள் அப்படித்தானே
மேலும் அவர்கள் இந்த நபி ஸல் அவர்களை பற்றி அதில் எழுதினதை அவர்கள் காண்பார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
நபி ஸல் அவர்கள் முன்னர் தவ்ராத், இன்ஜீலில் அவர்களுக்கு கொடுத்த நேரிமுறைகளை அவர்கள் பின்பற்றாத காரணத்தால் அந்த சமூகத்தின் மீது கோபம் கொண்டு அதில் உள்ள நாட்டத்தை மாற்றி அரபு சமூகத்தில் உள்ள ஒரு மனிதரின் மீது அல்லாஹ் தன்னுடைய அருளை அதவாதது பனி இஸ்ரயிலுக்கு கொடுத்த அதே வேலையை அரபு சமூகத்திற்கு கொடுகிறான் அதன் பின்பு நபி ஸல் அவர்கள் என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் அவருக்கு உம்மாத்தார்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் அல்லாஹ் கூறுகிறான்
நபி ஸல் அவர்கள் வந்து என்ன செய்வார்கள் என்று அல்லாஹ் கூறுவதை கேளுங்கள் இது தவ்ராத், இன்ஜீலை பற்றி பேசுவதால் இந்த வசனத்தின் பின் வரக்கூடிய (அவர்கள் ) என்று சொல்லக்கூடிய வார்த்தையை பனி இஸ்ரயில் என்று எடுத்துக்கொள்வோம்,
மேலும் பின் வரக்கூடிய உம்மாத்தார்களையும் இந்த (அவர்கள் ) என்ற வார்த்தைக்கு ஒத்துப்போக வாய்ப்புண்டு, நபி ஸல் அவர்கள் இந்த வசனம் இறங்கும் போது அந்த மக்கள் தான் இருந்தார்கள் ஆகவே அந்த ( avargalai) நாம் பனி இஸ்ரவேலர்களாக எடுத்துக்கொள்வோம்
நபி ஸல் அவர்கள் பனி இஸ்ரவேலர்களை நன்மையான காரியங்களை ஏவுவார்,பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார், தூய்மையான ஆகாரங்களை அவர்களுக்கு ஆகுமாக்குவர், கெட்டவற்றை தடுத்து விடுவார்கள்,
இதுவரை சாதாரண மனிதர்கள் இதனை படிக்கும்போது நேரடியாக விளங்கும் ஆனால் இதன் பின் வரக்கூடிய வார்த்தைகளை கவனிக்கவும்
அவர்களுடைய பாளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் இறக்கிவிடுவார் என்று அல்லாஹ் நபி ஸல் அவர்கள் வந்த நோக்கத்தில் இதுவும் உண்டு என்று கூறுகிறான்.
இந்த ஒரு செய்தி யாரையாவது சிந்திக்க வைத்ததுண்டா?
சில பேர் இதற்க்கு கொடுக்கும் விளக்கம் என்ன?
அவர்கள் கஷ்டப்பட்டு இருந்தார்கள் அவர்களை நபி ஸல் அவர்கள் மூலமாக அல்லாஹ் கஷ்டத்தில் இருந்து விலக்க வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் என்ன கஷ்டம் என்று விளக்கி சொல்ல வரலாறு தெரிய வில்லை.
இன்னும் ஒரு சில அரிஞ்சர்கள் அவர்கள் (பனி இஸ்ரவேலர்கள்) அன்றைய பெரிய பேரரசானா ரொமனும், பெர்ஸிய்யனும் இருந்த நேரத்தில் தன்னுடைய உழைப்புகளையெல்லாம் வரி என்ற பெயரில் கப்பாமாக கட்டி கொண்டு இருந்தார்கள்,
இதெல்லாம் ஒரு சமூகத்தில் உள்ள பெரிய முதலைகளுக்கு மட்டும் பயன்பட கூடாது என்றும்
அல்லாஹ் நபி ஸல் அவர்களை (அவர்களுடைய பாளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் இறக்கிவிடுவார்) என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். (அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்)
இந்த (அவர்களுடைய பாளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் இறக்கிவிடுவார் ) என்ற வார்த்தைக்கு அன்றைய வரலாறை வைத்து வேறு எந்த விளக்கங்கள் கொடுத்தாலும் வரலாறுக்கு மாற்றமாக அமையும்
இன்ஷாஅல்லாஹ் வேறு விளக்கங்கள் வராற்றுக்கு மாற்றம் இல்லாத எதுவாக இருந்தாலும் அதை நான் வரவேற்க்கிறேன்.
இதன் பின்புதான் உம்மாத்தார்கள் நபி ஸல் அவர்களுக்கு செய்ய வேண்டியதை கூறுகிறான்.
அது என்னவென்றால் 7:157 இல் இந்த எல்லா காரியங்களை அதாவது அவரை நம்பி, அவரை கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருக்கு அருளபட்டிருக்கும் வேதத்தை பின்பற்றுவர்கள்தான்
வெற்றியாளர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதில் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுகிறான்
இதனை புறிய சின்ன உதாரணம் நபி ஸல் அவர்கள் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் இது போன்ற விஷயங்களுக்கு மட்டும் வந்தால் நபி ஸல் அவர்கள் செய்யக்கூடிய தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் க்கு மற்றொருவர் எப்படி உதவி செய்ய முடியும்
இது ஒரு தனி மனிதனின் இபாதத் ஆகும்
ஆகவே நபி ஸல் அவர்கள் இதற்க்குதான் வந்தார்கள் என்றால் இதற்க்கு மற்றொருவர் உதவி தேவையில்லை
மேலும் நபி ஸல் அவர்கள் காலத்தில் ஒருவருக்கு மற்றொருவர் அடிமைகளாக்கி வைத்து வேலை வாங்குவதும், தான் நினைத்தது என்ன வேண்டும் என்றாலும் அந்த அடிமையை வைத்து செய்து கொள்வதும் இருந்தது
அதை இந்த பளுவான சுமைகளையும் அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் இறக்கிவிடுவார் என்பது பொருத்தமாக அமையும், மேலே சொல்லப்பட்டுள்ள நபி ஸல் அவர்கள் அனுப்பப்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆனால் அல்லாஹ்வின் நியதி அந்த ஒரு மக்கா பிராந்தயத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் நிலை நாட்டவா இல்லையென்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அல்லாஹ்வின் நியதி நிலைநாட்டவா என்றால் உலகம் முழுவதுமே என்பது சரியாக இருக்கும்.
நபி ஸல் அவர்கள் மக்காவிற்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்டிருந்தால் இந்த காரணத்தை எடுத்துக்கொள்ளலாம்
ஆனால் அவரை உலகம் முழுவதும் தூதராக அனுப்ப நாடி இருந்ததால்
அவர்கள் வரியாக மக்கள் பேரரசுக்கு கட்டி கொண்டிருந்த கப்பம் மட்டுமே பொருத்தமாக அமையும்
இதற்காகவே நபி ஸல் அவர்களுக்கு உதவ யார் இருக்கிறார்கள் என்று அகபா உடன்படிக்கை நடந்தது
உதவி தேவை படுவது எதுவெனில் ரொமன், பெர்ஸிய்யன் பேரரசுக்கு கட்டிகொண்டிருந்த வரியை நபி ஸல் அவர்கள் ஒருவரால் வைத்து கூட பாமரமக்களுக்கு அல்லாஹ் கொடுக்க முடியும்
இதில்தான் அல்லாஹ் நபி ஸல் அவர்கள் உம்மத்தார்கள் உதவி செய்ய சொல்லி அல்லாஹ் நேரடியாகவே கூறுகிறான்.
இந்த முழுமையான வரலாறை கொண்டு மக்களுக்கு சேர்க்காததால் பிரிவினைகள் நிறைய இருக்கிறது.
சத்தியத்தை அல்லாஹ்வே அறிந்தவன்
இந்த வரலாறு இல்லை என்று சொல்ல முடியாது
அல்லாஹ் சூரா (59) ஹஷ்ரில் நபி ஸல் அவர்களை வைத்து செய்தும் காட்டிவிட்டான்
Comments
Post a Comment