இப்னு அப்பாஸ் மற்றும் அ­லி (ர­ழி) சிறிய உரையாடல்

 அ­லி (ர­ழி) அவர்களுக்கும் முஆவியா ர(ரழி) அவர்களுக்கும் மத்தியில் சிப்பீன் போன்ற யுத்தங்கள் நடைபெற்றதை நாம் அறிவோம்.


போரின் போது முஆவியா (ரழி) அவர்களின் படையினர் குர்ஆனை உயர்த்திக் சமாதானத்திற்கு உடன்படுவது போல் செய்தனர்.


இறுதியில் அபூமூஸா (ரழி)அவர்களும் அம்ரு பின் ஆஸ் (ரழி) அவர்களும் என்ன முடிவு செய்கிறார்களோ அந்த முடிவின் படி இரண்டு தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


அ­லி (ர­ழி) அவர்கள் #ஸிப்பீன் யுத்தத்தி­ருந்து திரும்பி தனனுடைய தலை நகரான கூபாவிற்குள் நுழைந்தார்கள். 

ஆனால் அ­லி(ரழி) அவர்களுடன் இருந்த கவாரிஜ் என்ற பிரிவினர் அ­லி (ர­ழி) அவர்களுடன் கூபாவிற்கு செல்லாமல் ஹரூவ்ரா என்ற இடத்திற்கு சென்றுவிட்டனர். இவர்கள் 6 ஆயிரம் நபர்கள் இருந்தார்கள். 


மேலும் கவாரிஜ்கள் நாங்கள் அந்த இரு நபித்தோழரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம். தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது என்று வாதிட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ர­ழி) அவர்கள் ஒரு நாள் அ­லி (ரழி) அவர்களிடம் வந்து.. ..


இப்னு அப்பாஸ் : 

அமீருல் முஃமீன் அவர்களே லுஹரை தொழுகையை சற்று தாமதப்படுத்துங்கள் நான் அவர்களிடம் (கவாரிஜ்கள்) பேசுகிறேன்.


அ­லி (ர­ழி) : உங்களை கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறேன்.


இப்னு அப்பாஸ் (ரழி) : 

இல்லை நான் நல்ல குணமுள்ளவன் நான் யாருக்கும் தொல்லை கொடுத்தது கிடையாது ஆகையால் என்னை கொல்லமாட்டார்கள்


அலி(ரழி) அவர்கள் அனுமதி வழங்குகிறார்கள்.


இப்னு அப்பாஸ் (ரழி) : 

நான் நல்ல ஆடையை அணிந்து கொண்டேன் மேலும் தலைவாரிக் கொண்டேன்.


இப்னு அப்பாஸ் (ர­ழி): நான் பக­ல் பாதியில் அவர்களிடத்தில் சென்று ஸலாம் சொன்னேன்.


கவாரிஜ்கள் : வாருங்கள் இப்னு அப்பாஸ் வாருங்கள் எதற்காக வந்தீர்கள்.


இப்னு அப்பாஸ் (ர­ழி): 

நான் அன்சார்கள் மற்றும் முஹாஜிர்கள் இருந்தும் நபி ஸல் அவர்களின் சொந்தத்தி­லிருந்தும் வருகிறேன். 

அந்த நபித்தோழர்களுக்குத்தான் குர்ஆன் இறங்கியது அவர்கள் இக்குர்ஆனை நன்கு விளங்கக்கூடியவர்கள்.


கவாரிஜ்கள்: நாங்கள் அ­லி (ர­ழி) அவர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகளை கூறுகிறோம்.


இப்னு அப்பாஸ் (ரழி): கூறுங்கள்.


கவாரிஜ்கள் : ஒன்று அ­லி(ரழி) அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாமல் மனிதர்களின் தீர்ப்பை ஏற்றுள்ளார். அல்லாஹ் குர்ஆனில் அல்லாஹ்வை தவிர தீர்ப்பு வழங்குபவர் இல்லை என்று கூறுகிறான். 


இரண்டாவது  முஆவியா உடனான போரில் ஈடுபட்டார். ஆனால் யாரையும் சிறைபிடிக்கவில்லை கனீமத் (என்னும் போரில் கிடைத்த வெற்றிப்பொருள்) எடுக்கவில்லை. 


மூன்றாவது ஓப்பந்தத்தின் போது அமீருல் என்ற வார்த்தை ஏழுதப்பட்டது அதை #அ­லி அழித்துவிட்டார்.


இப்னு அப்பாஸ் (ர­ழி) : இது தவிர வேறு உண்டா ?


கவாரிஜ்கள் : 

இல்லை.


இப்னு அப்பாஸ் (ர­ழி) : உங்களுடைய குற்றசாட்டுகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்கிறேன்.


உங்களுடைய முதல் குற்றசாட்டு அ­லி (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை புறக்கணித்துவிட்டு மனிதர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார் என்பது;

 மனிதர்களின் தீர்பபை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றால் குர்ஆனே வேறு சில இடங்களில் மனிதர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறதே


அல் குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்.


கணவன் மணைவி ஆகிய இருவருக்கு மத்தியில் பிரிவினையை நீங்கள் பயந்தால் கணவன் வீட்டி­ருந்து ஒருவரையும் மணைவி வீட்டி­ருந்து ஒருவரையும் நீதிபதியாக்கி கொள்ளுங்கள் அல் குர்ஆன் 4 : 35. எனவே அ­லி (ரழி) அவர்கள் மனிதர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது தவறில்லை.


இரண்டாவது குற்றசாட்டு அ­லி (ர­ழி) அவர்கள் போர் செய்தார் யாரையும் சிறைபிடிக்கவில்லை கனிமத் பெறவில்லை என்பது


ஆயிஷா (ரழி) அவர்கள் உங்களுடைய தாய் நீங்கள் அவரை தாய் இல்லை என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள். 

இல்லை, நாங்கள் ஆயிஷா (ரழி) அவர்களை சிறைபிடிப்போம் என்றால் அப்போதும் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள்.


அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவருடைய (நபி) மனைவிமார்கள் உங்களுடைய தாய்மார்களாகும்


இப்னு அப்பாஸ் (ரழி) : சரியா?


கவாரிஜ்கள் : ஆம்.


இப்னு அப்பாஸ் (ரழி) : 


உங்களுடைய மூன்றாவது குற்றசாட்டு அலி(ரழி) அவர்கள் அமீருல் முஃமினீன் என்ற வார்த்தையை அழித்துவிட்டார்கள் என்பது;


உங்களுக்கு தெரியாதா நபி ஸல் அவர்கள் ஹீதைபிய்யாவில் காபிர்களுடன் ஒப்பந்தம் செய்கையில் ரசூலுல்லாஹ் என்ற வார்த்தையை அழிக்கச் சொன்னார்கள். 

நபி ஸல் அவர்களும் அதை அழிக்கச் சம்மாதித்தார்களே அ­லி(ரழி)அவர்களை விட நபி ஸல் அவர்களே அழித்திருக்கும் போது அலி (ரழி)  மட்டும் அழித்தால் என்ன? 


இதை கேட்ட அங்கிருந்த கவாரிஜ்களில் இரண்டாயிரம் பேர் விலகி அ­லி(ர­ழி) அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.


தொகுப்பு : யூசுப் பைஜி

Facebook

Comments