அஹ்லல் கிதாப், ஊத்துல் கிதாப்
அல்லாஹ் குர்ஆனில் ஒரே நோக்கத்தோடு மட்டுமே பேசுவான்
அதாவது இனைவைப்பு என்பதைத்தான் எல்லா நபி மார்களுக்கும் அறிவுரையாக சொல்லி அவர்களுடைய சமூகத்திற்கு அல்லாஹ் அனுப்பி வைத்தான்.இதுதான் அல்லாஹ்வின் நோக்கமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது (அல்லாஹ்வே அறிந்தவன்)
நீங்கள் என்னதான் சிறிதாக பாவம் செய்தாலும் அதன் மூலதனம் அல்லாஹ் கூறின கட்டளைகளை அடிபணியவில்லை என்றால் அது இனைவைப்புதான் இங்கு இதை சிறியது பெரியது வரையெறுக்க முடியாது ஆனால் இனைவைப்பு என்பது இருப்பதில் பெரிய பாவம் (இனைவைப்பு,இனைவைப்புதான்)
அஹ்லல் கிதாப், ஊத்துல் கிதாப் என்ற தலைப்புக்கு இனைவைப்பை பற்றி பேசுகிறேன் என்று என்ன வேண்டாம்
இனை வைப்பு என்பது சிலையை வைத்தோ, இறந்த மனிதர்களை வைத்தோ செய்கிற விஷயம் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது (சிலை,மனிதன்)இந்த இனைவைப்பு என்பது எல்லை மீறி போனதாகும். (அதாவது உச்சக்கட்டம்) இனைவைப்பாகும்
இங்கு அல்லாஹ் ஒரு செயலை மனிதற்க்கு கூறுகிறான்.
மனிதன் அதை செய்ய மறுக்கிறான் என்றால் அது இனைவைப்பு(இணைவைப்பின் முதல்கட்டம்)
இங்கு செய்யும் செயல் மட்டுமே இனைவைப்பு என்று ஆகிவிடாது
அல்லாஹ் கூறிய செயலை செய்யாமல் (மறுப்பது) இருப்பது இனைவைப்பில் சேர்ந்துவிடும்
இதற்காக வரலாறுகள் உதாரணமாக குர் ஆனை வைத்தே நிறைய கூறிக்கொண்டே போகலாம்
ஆனால் தலைப்பு மாறுகிறது என்ற காரணத்தினால்
இனைவைப்பு என்பது அல்லாஹ் கூறின செயலை செய்யாமல் இருப்பதே இனைவைப்பு ஆகும் இதை இந்த தலைப்புக்கு முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம்
அஹ்லல் கிதாப், ஊத்துல் கிதாப் மக்கள் எல்லோரும் செய்யும் செயலை மறுப்பது இனைவைப்பு ஆகும் அதை பின்வருமாறு பார்ப்போம்.
அஹ்லல் கிதாப் என்றால் வேதம் வைத்து இருப்பவர்கள் என்று பொருள்
இந்த தறப்பினரில் குர் ஆன் வைத்து இருப்பவர்களும் வருவோம் (குர் ஆன் மட்டும் என்று நான் சொல்லவரவில்லை வரலாற்று நிகழ்வை பொறுத்து சில வசனங்களில் குர் ஆன் வைத்து இருப்பவர்களும் வருவார்கள்)
ஊத்துல் கிதாப் என்பது வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்று பொருள்
இதில் பெரும்பாலான இடங்களில் பனி இஸ்ரவேலர்கள்,ஜபூர்,இன்ஜீல்,மேலும் இது போன்ற சமுதாயம் வேதம் கொடுக்கபட்டவர்களாக வருவார்கள்)
ஊத்துல் கிதாப் என்ற வார்த்தை உதாரணமாக (2:145) வசனம் எடுத்துக்கொள்வோம்.
இந்த வசனம் பனி இஸ்ரவேலர்களை பற்றி பேசுகிறது
இதில் கிப்லா மாற்றம் குறித்து பேசுகிறது. அவர்கள் கிப்லா மாற்றம் முன்பு ஏராளமான இஸ்ரவேளர்ல் ரசூருல்லாவை பின்பற்றினார்கள்
பின்பு கிப்லா மாற்றம் நடந்து முடித்த பின்பு அவர்கள் அதை வெறுத்தார்கள் (ஆகையால் இங்கு ஊத்துல் கிதாப் இங்கு பனி இஸ்ரவேலர்களை பற்றி பேசுகிறது)(அவர்கள் வெறுத்ததற்கு பல காரணங்கள் இருக்கிறது அதில் கிப்லாவும் ஒன்று)
அஹ்லல் கிதாப் என்ற வார்த்தை உதாரணமாக (2:109 முதல் 2:112) எடுத்துக்கொள்வோம்
இங்கு 2:109 வசனத்தை மட்டும் எடுத்தால் அஹ்லல் கிதாப் என்ற வார்த்தை எந்த சமூகத்தை பற்றி பேசுகிறது என்று மக்களாகிய நாம் சற்று குழப்பம் அடைவோம்.
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.
(அல்குர்ஆன் : 2:109)
இங்கு இப்ராஹிம் அலை அவர்களின் வம்சவழியில் வேதம் வழங்க பெற்றவர்கள் நிறைய பெயர்கள் இருக்கிறார்கள் ரசூல் என்ற பெயரில் உள்ள அதுவும் குர் ஆன் சொல்லக்கூடியவர்களில் நாம் இரண்டு அல்லது மூன்று பெயரை எடுத்துக் கொள்வோம்.
அஹ்லல் கிதாப் என்ற வார்த்தைகள் படி ஒன்று இப்ராஹிம் அலைஹி அவர்கள்
இன்னொன்று மூஸா அவர்கள் தொடர்ந்து ஈஸா அலைஹி அவர்கள் இவர்களை முழுவதுமாக எடுத்துக்கொள்ளலாம் இந்த வசனத்தில் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்
மேலும் அதே வசனத்தில்
ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:109)
இந்த ஒரே ஒரு வசனத்தின் படி பார்த்தால் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் சற்று குழப்பம் அடைவோம் மேலும் அல்லாஹ் அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறுகிறான்
அடுத்த வசனம் தொடர்ந்து பார்த்தால் சற்று குழப்பத்தில் இருந்து விடுபடலாம்,
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:110)
இந்த வசனத்தின் படி முஸ்லீங்களே நன்மைகளை செய்து கொண்டே வாருங்கள் நீங்கள் அல்லாஹ்விடம் நற்க்கூலி பெற்றுக்கொள்வீர்கள் இது வரை அஹ்லுல் கிதாப் என்ற பொருள் வேதம் உடைய எல்லா சமூகமும் என்று புரிய கூடிய வாய்ப்பு உள்ளது. (அதாவது இப்ராஹிம் அலை முதல் ஈஸா அலை அவர்கள் வரை)
இப்போது அடுத்த வசனத்தை பார்த்தால் அந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் யூதர்கள் கிறித்துவர்கள் என்று சற்று விளங்க முடிகிறது
وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَـنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى تِلْكَ اَمَانِيُّهُمْ قُلْ هَاتُوْا بُرْهَانَکُمْ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ
“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:111)
இங்கு யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்
ஆகவே அவர்கள்தான் (யூதரகள் கிறிஸ்துவர்கள் ) முஸ்லீங்களாகிய உங்களை காஃபீர்கள் ஆகவேண்டும் என்று முந்தைய (2:109) வசனத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அப்போது இங்கு அஹ்லல் கிதாப் உடைய இந்த வசனத்தில் கூறப்படும் மக்கள் பனி இஸ்ரவேலர்கள் ஆவார்கள் என்று விளங்க முடிகிறது.
இதையெல்லாம் அல்லாஹ் முஸ்லீம்களுக்கு அறிவுரையாக சொல்லிவிட்டு இப்போது (2;109)கூறப்பட்ட வேதம் கொடுக்கப்பட்டவர்களே அப்படி என்ற சொல் முஸ்லீம்களை குறிப்பது போல் (2:112) அல்லாஹ் (எவனொருவன் என்று) தொடங்குகிறான் என்று சொன்னால் இங்கு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் யார்.
மேலும் அல்லாஹ் அடுத்த வசனத்தை சேர்த்து பார்த்தால் கடைசியாக முஸ்லீங்களையும் சேர்த்து எச்சரிக்கை செய்வான் பாருங்கள்
بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:112)
இங்கு எவனோருவன் தன்னை (தான் முகத்தை பணியவைத்தவர் என்ற வார்த்தை மொழிபெயர்ப்பில் வருகிறது) முழுமையாக அர்ப்பணம் செய்பவர் என்று பொருள்
(இந்த பொருளின் அடிப்படையில் முஸ்லீம் வேறு முனாஃபிக் வேறு)
இந்த உலகத்தில் முஸ்லீம் பெயர் வைத்தவர்கள் எல்லாம் முஹ்மீன்களா இல்லை
அதாவது இங்கு முஹ்சீன் என்று வந்துள்ளது
அதாவது முழுமையாக தன் முகத்தை அர்ப்பணம் செய்து நன்மை செய்பவர்கள் தவிர (முஹ்சீன்)
அப்போது மேலே (2:109) இல் கூறப்பட்ட அஹ்லல் கிதாப் மக்கள் இங்கு (2:112) இந்த வசனத்தை சேர்த்தால் முஸ்லீங்களும் அடங்குவார்கள்(அதாவது முனாஃபிக் போன்ற முஸ்லீம்கள்)
உதாரணமாக (2:112) இல் கூறப்பட்ட (முழுமையாக தன் முகத்தை அர்ப்பணம் செய்து நன்மை செய்பவர்கள்) இவர்களை காஃபீர்களாக மாற வேண்டும் என முனாஃபிக்கள் விரும்புகிறார்கள்
மேலும் நபி ஸல் காலத்தை இந்த வசனத்தை பொருத்தி காண இங்கு இதை கூறவில்லை
இப்போது உள்ள காலகட்டத்தில் உள்ள உண்மையான முஹ்மீன்களை (முஸ்லீங்களான முனாஃபிக்கள் ) சேர்ந்து அவர்களை (முழுமையாக தன் முகத்தை அர்ப்பணம் செய்து நன்மை செய்பவர்களாக விடாமல்) காஃபீர்களாக முயற்சி செய்கிறார்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திளும் இந்த வசனங்கள் அன்றைய காலகட்டத்தில் உள்ளவர்கள் நிகழ் காலத்தில் பொருத்தி பார்க்க வேண்டும் அதுவே முஹ்மீன்களுக்கு சோதனையாகும்.
அஹ்லல் கிதாப், ஊத்துல் கிதாப் என்ற வார்த்தைகளின் விடைகளை ஒவ்வொரு வசனங்களின் மூலம் யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்று
இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்தால் புரியும்.
இறுதியாக ஒரு மனிதன் பயான் (விளக்கவுரை)கொடுக்கும்போது முன் சென்ற வரலாறில் செய்த தவறை கூறிவிட்டு அதே போன்று நீங்கள் செய்யாதீர்கள் என்று அந்த பயான் முடியும்.
குர் ஆன் என்பது அல்லாஹ்வின் விளக்கவுரை அது எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்
75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம்மீதே உள்ளன.
75:18. எனவே, (ஜிப்ரீல் வாயிலாக) அதனை நாம் ஓதிவிட்டோமாயின், அப்பால் அதன் ஓதுதலைப் பின்தொடர்ந்து (ஓதிக்) கொள்ளும்.
75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
மனிதன் தொகுத்த பயானை படித்தீர்கள் இப்போது அல்லாஹ்வின் பயானை படியுங்கள்.
உதாரணம்
சூரா ஹிஜ்ர் என்ற சூரா அல்லாஹ்வின் பயானில் ஒன்று
பயான் எப்படி இருக்கிறது சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்.
(15:76)வசனம் லூத் அலை அவர்களின் ஊரை அழித்தது பற்றி மக்கா காஃபீர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் போகும் வழியில்தான் இருக்கிறது.
15:76. நிச்சயமாக அது (அவ்வூர் நீங்கள் பயணத்தில் வரப்போகும்) நேரான வழியில்தான் இருக்கிறது.
அதன்பின்பு ஷுஐபுடைய சமூகத்தை அழித்தது பற்றி பேசுகிறான்
அதுவும் நீங்கள் போகும் பாதையில் தான் இருக்கிறது என்று
15:79. எனவே, அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்: (அழிந்த) இவ்விரண்டு (ஊர்களும்) பகிரங்கமான (போக்குவரத்து) வழியில்தான் இருக்கின்றன.
இதெல்லாம் ஹிஜ்ர்ரில் விளக்கமாக கூறிய பின்புதான் கடைசியில் முஸ்லீம்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
15:89. "பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்" என்று நீர் கூறுவீராக!
15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது, முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே-
15:91. இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கிவைப்போம்).
15:92. உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்
அல்லாஹ்வின் வசனத்தை விளக்க யாரும் அவசியம் இல்லை,
நாம் புரிந்து கொள்ளும் முறை தவறு,
அரபு மொழியின் பொக்கிஷங்களை புரியவும்,அது எந்த காலத்தில் இறங்கியது என்பதை புரியவும் அறிஞ்சர்கள் அவசியம்
அஹ்லல் கிதாப் என்ற வார்த்தைகளை வைத்து சிறு வசனங்களை உதாரமாக கூறி இருக்கிறேன்.
يٰۤـاَهْلَ الْكِتٰبِ(3:65) என்ற வசனத்தில் வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்ராஹிம் நபி யூதரா கிறிஸ்துவரா என்று தர்க்கம் செய்து கொண்டு இருந்தார்கள்
அதற்க்கு அல்லாஹ் அதே வசனத்தில் அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று பாருங்கள் (அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லை; (இதைக் கூட) நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?) இதை கூறி விட்டு அதை தொடர்ந்துதான் (3:68) வசனம் படியுங்கள்.
اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:68)
இங்கு இப்ராஹிம் நபியை பற்றி பேசம்போதும் மேலே அவர்களை பின்பற்றுபவர்கள் இங்கு அஹ்லல் கிதாப் உபயோகப்படுத்தப்படுகிறது.
இதை தொடர்ந்து ஓதப்படும் வசனம் பனி இஸ்ரவேலர்களை பற்றி பேசப்படுகிறது. ( اَهْلِ الْكِتٰبِ)
وَدَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
(அல்குர்ஆன் : 3:69)
( يٰۤـاَهْلَ الْكِتٰبِ) (3:70)
يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ
வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
(அல்குர்ஆன் : 3:70)
(يٰۤـاَهْلَ الْكِتٰبِ) (3:71)
قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
“வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 3:99)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ
நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
(அல்குர்ஆன் : 3:100)
ஊத்துல் கிதாப் (இங்கு ஊத்துல் கிதாப் இந்த குர் ஆனில் பெரும்பாலும் பனி இஸ்ரவேலர்களை பற்றியே பேசும்)
(اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ )(3:23) (யூதர்களின் வேதத்தில் இருந்து தீர்ப்பளிக்க அழைப்பது பற்றி.
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ
வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
(அல்குர்ஆன் : 3:23)
ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ وَغَرَّهُمْ فِىْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
(அல்குர்ஆன் : 3:24)
இப்படி நிறைய கூறிக்கொண்டே போகலாம்.
என் இறைவனின் வரலாறுகளை கூற வார்த்தைகள் இல்லை.
18:109. (நபியே!) நீர் கூறுவீராக: "என் இறைவனுடைய வார்த்தைகளுக்காக (- அவற்றை எழுதுவதற்காக) கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அது போன்றதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!"
Comments
Post a Comment