இஸ்லாத்தில் தூங்குவதின் ஒழுக்கம்

 💞 இஸ்லாத்தில் #தூங்குவதின்_ஒழுக்கம் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

* தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதன் உடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும்!

* மனிதனுக்கு உணவு தண்ணீர் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று உறக்கமும் முக்கியமான ஒன்றாகும்!

உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்!

(அல்குர்ஆன் : 78 : 9)

* ஒரு மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், சோர்வு மன குழப்பம் வெறுமை கோவம் என அனைத்துமே ஏற்படும்!

* மனிதனுக்கு என்ன தான் பிரச்சனை கவலை இருந்தாலும் அனைத்தையும் மறந்து மனிதன் நிம்மதியாக இருப்பது உறங்கும் போது மட்டுமே!

* இஸ்லாத்தில் உறங்கும் போதும் கூட ஒழுக்கம் பேன சொல்லி உள்ளது அதற்கான வழி காட்டுதல்களையும் நமக்கு கூறி உள்ளது! அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

💟 குழந்தைகளை வெளியே விட கூடாது :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்' அல்லது 'அந்திப் பொழுதாம்விட்டால்' உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள்!

ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் பூமியெங்கும் பரவுகின்றன! இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை வெளியே செல்ல விட்டுவிடுங்கள்!

(நூல் : புகாரி : 5623)

💟 விளக்கை அணைக்க வேண்டும் :

* இரவில் நாம் உறங்கும் போது மின் விளக்குகளை நாம் அணைத்து விட்டு உறங்க வேண்டும்! இது சுன்னாஹ் ஆகும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள்!

(நூல் : புகாரி : 6296)

💟 கதவுகளை மூட வேண்டும் :

* நாம் இரவில் தூங்க செல்லும் முன் கதவுகளை முடி கொள்ள வேண்டும்!

* கதவுகளை மூடும் போது பிஸ்மில்லாஹ் கூறி மூட வேண்டும் இதனால் வீட்டினுல் ஷைத்தான் நுழைய மாட்டான்! அதே போன்று மூடப்பட்ட கதவுகளை ஷைத்தான் திறக்க மாட்டான்! 

(நூல் : புகாரி : 6296 & 5623)

💟 பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

1) உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்!

2) உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்! (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள்!

* இவ்வாறு செய்வதால் ஷைத்தான் அதை திறக்க மாட்டான்!

3) ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை!

(நூல் : புகாரி : 5623 &  முஸ்லீம் : 4099 &  4102)

* நமது வீட்டில் உள்ள உணவு பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் வைத்து உள்ள பாத்திரங்களை இரவு உறக்குவதற்கு முன் மூடி வைக்க வேண்டும்!

💟 Gas Cylinder Off செய்ய வேண்டும் :

* இரவில் நாம் உறங்கும் முன்பு வீட்டில் உள்ள போது Gas Cylinder யை Off செய்ய வேண்டும் அல்லது வீட்டில் அடுப்பு இருந்தால் அதை அணைக்க வேண்டும்!

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது :

மதீனாவில் ஒரு வீடு இரவில் (தீ விபத்துக்குள்ளாகி) வீட்டாரோடு எரிந்துவிட்டது. அவர்களின் நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது!

இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானதே ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்! 

(நூல் : முஸ்லிம் : 4104)

💟 அவசியம் தேவை இல்லாமல் இரவில் நீண்ட நேரம் உறக்காமல் இருக்க கூடாது :

* நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்!

(நூல் : புகாரி : 568)

💟 வித்ரு தொழுகை :

* ஒற்றைப்படையாக நாம் வித்ரு தொழுகை தொழ வேண்டும்!

* வித்ரு தொழுகை பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் நமக்கு விதி விளக்கு கொடுத்து உள்ளார்கள்!

* நம்மால் தஹஜ்ஜத் தொழுகைக்கு உறுதியாக எழ முடியும் என்றால் வித்ரு தொழுகையை தஹஜத் நேரத்திற்கு எழுந்து தொழுகலாம்!

* தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுவது சந்தேகம் என்றால் நாம் இஷா பிறகு வித்ரு தொழுது கொள்ளலாம்!

(நூல்: முஸ்லிம் : 1255)

* ஹதீஸை தவறாக விளக்கியதன் காரணமாக பலர் வித்ரு தொழுகைக்கு பின்பு தொழ கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் இது தவறு ஆகும்! வித்ரு தொழுகைக்கு பின்பு நபில் அல்லது தஹஜ்ஜத் தொழுகை தொழுது கொள்ளலாம்! 

(நூல் : முஸ்லிம் : 1344)

💟 வயது அடைந்த பிள்ளைகளுக்கு தனியாக உறங்க வைக்க வேண்டும் :

* பத்து வயதடைந்த பிள்ளைகளை தனித்தனியாக பிரித்து தூங்க வைக்க வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பிள்ளைகள்) பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களின் படுக்கை இடத்தை பிரித்து விடுங்கள்!

(நூல் : அஹ்மத் : 469)

💟 ஒளு செய்து கொள்ளுதல் :

* இரவில் நாம் உறங்குவதற்கு முன்பு தொழுகைக்கு ஒளு செய்வது போன்று ஒளு செய்து கொள்ள வேண்டும் பின்பு உறங்க வேண்டும்!

* தொழுகைக்கு செய்த ஒளு இருந்தால் நாம் மீண்டும் ஒளு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது!

(நூல் : புகாரி : 247)

💟 பாதுகாப்பான இடத்தில் உறங்க வேண்டும் :

வளைத்து பாதுகாப்பில்லாத (மொட்டை) மாடியில் தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!

(நூல் : திர்மிதி)

💟 குப்புற படுக்க கூடாதா? 

* ஒரு மனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்!

(நூல் அபூதாவூத் : 4383 & திர்மிதி : 2692 & முஸ்னத் அஹமத் :  7524, 7698 & 14993 & 22512)

* இது பலகீனமான ஹதீஸ் ஆகும்! என இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்! 

(நூல் : தாரீகுல் கபீர் : 4 / 365)

* பொதுவாக ஆண் மற்றும் பெண் தலைகுப்புற கவிழ்ந்து படுப்பதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும்! ஏன் என்றால் நாம் பல மணி நேரம் அசைவில்லாமல் தலை குப்பற உறங்குவதால் நம்முடைய வயிறு பகுதி மற்றும் மர்ம உறுப்பு ஆகியவை அதிகம் அதிகம் அழுத்தம் ஏற்படும் இதனால் உடல் மற்றும் மருத்துவ அளவில் நமக்கு பாதிப்பு ஏற்படும்!

💟 மல்லாந்து படுத்து கொள்ளலாம் :

* பொதுவாக ஆணோ அல்லது பெண்ணோ மல்லாந்து படுத்து கொள்ளலாம் ஆனால் கால் மீது கால் போட்டு கொண்டு உறங்க கூடாது!

(நூல் : முஸ்லீம் : 4265 & 4266)

* பெண்கள் மல்லாந்து படுக்க கூடாது என்று ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி உள்ளது ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது!

💟 விரிப்பில் உறங்க வேண்டும் :

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் :

பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது! 

(நூல் : புகாரி : 6456)

💟 விரிப்பை உதற வேண்டும் :

* நாம் உறங்க செல்லும் போது விரிப்பை உதற வேண்டும் அல்லது ஏதேனும் ஆடையை கொண்டு தட்டி விட வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள்!  அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது!

(நூல் : முஸ்லிம் : 5257)

💟 சுர்மா இட்டுக்கொள்ளுதல் :

இஸ்மித் என்ற (கருப்புக்) கற்களால் சுருமா இடுங்கள் அது பார்வையைக் கூர்மையாக்கும். இமைகளின் முடியை வளரச்செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

என அறிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சுர்மாக்கூடு ஒன்று இருந்தது. ஒவ்வொரு இரவிலும் இரு கண்களிலும் மூன்று தடவைகள் இட்டுக் கொள்வார்கள் என்றும் அறிவித்தார்கள்! 

(நூல் : திர்மிதீ : 1757)

💟 உறங்கும் முன் ஓத வேண்டிய தஸ்பீக் & துஆ & சூராக்கள் :

💜 தஸ்பீக் செய்தல் :

* இரவு நாம் உறங்குவதற்கு முன்பு தஸ்பீக் செய்ய வேண்டும் :

1) சுபஹானல்லாஹ் 33 முறை

2) அல்ஹம்துலில்லாஹ் 33 முறை

3) அல்லாஹு அக்பர் 34 முறை 

(நூல் : முஸ்லீம் : 5274)

❤️ சூரா ஓதி கொள்ளுதல் :

* இரவு நாம் உறங்குவதற்கு முன்பு கிழே உள்ள மூன்று சூராக்களை ஓதி கொள்ள வேண்டும்! 

1) குல்ஹுவல்லாஹு அஹத் - 112

2) குல்அஊது பிரப்பில் ஃபலக் - 113

3) குல் அஊது பிரப்பின்னாஸ் - 114

* ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114)  மூன்று சூராக்களையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவி கொள்ள வேண்டும்!

(நூல் : புகாரி : 5748)

💟 இரவில் கடைசியாக ஓத வேண்டிய துஆ :

* வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வரும் இரண்டு துஆக்களையும் ஓதி கொள்ள வேண்டும்!

 اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ.

‘ அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(எ)வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(இ)(த்)தன் வரஹ்ப(இ)(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(இ)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(இ)நபி(இ)ய்யி(க்) கல்லதீ அர்ஸல்(த்)த ’

பொருள் : யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்!

(நூல் : புகாரி : 247)

سُبْحَانَكَ اللهُمَّ  رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

‘ சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ பிக்க வளஅத்து ஜன்பீ, வ பிக்க அர்ஃபஉஹு, இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா. வ இன் அர்சல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பி மா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன் ’

(பொருள்: இறைவா! நீ (அனைத்துக்  குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!)

(நூல் : முஸ்லிம் : 5257)

❤️ ஆயத்துல் குர்ஸி ஓதி கொள்ளுதல் :

‘ அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம் ’

(அல் குர்ஆன் : 2 : 255)

சிறப்பு : நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்! 

(நூல் : புகாரி : 3275)

💟 நிய்யத் வைத்து கொண்டு உறங்க வேண்டும் :

* நாம் தூங்கும் போதே தஹஜ்ஜத் தொழுகைக்கு அல்லது பஜ்ர் தொழுகைக்கு எழ வேண்டும் என்ற உறுதியான நிய்யத் உடன் உறங்க வேண்டும்!

* ஒரு வேலை நாம் உறங்கி விட்டாலும் அல்லாஹ் நமக்கு தொழுகை உடைய நன்மையையும் கொடுத்து விடுவான் அதே போன்று நம்முடைய தூக்கம் நமக்கு தர்மம் ஆக ஆகி விடும்!

* ஆனால் இதையே வழமையாக செய்ய கூடாது 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவில் எழுந்து தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் யார் தனது படுக்கைக்குச் சென்று சுபஹ் வரை தூக்கம் அவரை மிகைத்து விடுகின்றதோ அவர் எண்ணியது (இரவுத் தொழுகையில் ஈடுபட்ட நன்மை) அவருக்குப் பதியப்படும். அவரது உறக்கம் என்பது ரப்பிடமிருந்து அவருக்குக் கிடைத்த ஸதகாவாக இருக்கும்! 

(நூல் : நஸயீ : 1787)

💟 வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு வலது பக்கத்தில் சாய்ந்து தூங்க வேண்டும் :

* நம்முடைய வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ் வைத்து கொண்டு வலது பக்கத்தில் சாய்ந்து கொண்டு தூங்கும் போது ஓது துஆ ஓதி கொண்டு உறங்க வேண்டும்!

நபி ( ஸல் ) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது தன்னுடைய கையை தன்னுடைய கன்னத்திற்குக் கீழே வைத்து கிழே உள்ள துஆவை ஓதி கொள்ளுவார்கள்!

اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

‘ அல்லாஹீம்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா ’

பொருள் : அல்லாஹ்வே உன்னுடைய பெயரைக் கொண்டே நான் மரணிக்கச் செய்கிறேன் உயிர் பெறவும் செய்கிறேன்!

(நூல் : திர்மிதி : 6314)

💟 தூங்கி எழுந்த பிறகு ஓதும் துஆ :

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ 

‘ அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் ’

பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், மண்ணறையிலிருந்து வெளியேறி  அவனிடமே செல்லவேண்டியுள்ளது!

(நூல் : புகாரி : 6312)

💟 தஹஜ்ஜத் தொழுகை அல்லது விழிப்புடன் வந்து எழுந்தால் ஓத வேண்டிய துஆ :

‘ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹி ’

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.  அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு

அல்லாஹும்ம ஃக்பிர்லீ' ( இறைவா! என்னை மன்னித்துவிடு) என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்!

(நூல் : புகாரி : 1154)

💟 உறங்கி எழுந்த பிறகு செய்ய வேண்டியவைகள் :

1) நாம் தூக்கத்தில் இருந்து விழித்த பின்பு ஒளு செய்வதற்கு முன்பு கைகளை நன்கு கழுவி கொள்ள வேண்டும்! ஏனென்றால், தூக்கத்தில் நாம் நம்முடைய கைகளை எங்கே இருந்து அல்லது வைத்து இருப்போம் என்று அறிய மாட்டோம்!

(நூல் : புகாரி : 162)

2) மூக்கை நன்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்! ஏன் என்றால் நாம் தூங்கும் போது மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்!

(நூல் : புகாரி : 3295)

3) இரவில் நாம் உறங்கி எழுந்த பின்பு பல் துலக்க வேண்டும்!

(நூல் : புகாரி : 889)

💟 ஸ்கலிதம் (இச்சை நீர்) ஏற்பட்டால் :

* ஆனுக்கும் சரி பெண்ணுக்கும் சரி உணர்ச்சி அதிகம் ஆகும் போது மர்ம உறுப்பில் இருந்து வெளியேறும் ஒரு இச்சை நீர் ! இதை ஸ்கலிதம் என்று கூறுவார்கள்! 

* இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து கடினமான வெள்ளை நிறத்திலும்! இச்சை நீர் வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண நீர் போன்று இருக்கும்!

* ஆண்களுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் ஒழு செய்து கொண்டாள் போதும்!

(நூல் : திர்மிதி : 114)

* ஒழு செய்யும் முன் இச்சை நீர் வெளிப்பட்டால் உடலில் பட்ட இடத்தையும் மற்றும் மர்மஸானத்தையும் வலது கையில் தண்ணீர் ஊற்றி இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும்!

* பெண்களுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவர்கள் குளிப்பு கடமை நிறைவேற்ற வேண்டும்!

(நூல் : புஹாரி : 6091)

💟 இரவில் குளிப்பு கடமை ஆகி விட்டால் :

* இரவில் நமக்கு குளிப்பு கடமை ஆகி விட்டால் நாம் மர்ம உறுப்பை சுத்தம் செய்து ஒளு செய்து கொண்டு உறங்கி கொள்ளலாம்!

* தொழுகைக்கு முன்பு எழுந்து குளிப்பு கடமை நிறைவேற்றி கொள்ளலாம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவு நேரத்தில் தமக்குக் குளிப்புக் கடமையாகி விடுகிறது' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியதற்கு 'உளூச் செய்யும்; உம்முடைய உறுப்பைக் கழுவிவிட்டு நீர் தூங்கும் என்று கூறினார்கள்!

(நூல் : புகாரி : 290)

@அல்லாஹ் போதுமானவன் 💞

Comments