ஒரு மகிழ்ச்சியான செய்தி

 ஒரு மகிழ்ச்சியான செய்தி


அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சில கூட்டம் சொல்லக்கூடாது என்று கூறுகிறது.


நபி ஸல் அவர்கள் கூறிய அல்லாஹ்வின் மீது ஆணையாக என்ற சொல்லில் எவ்வளவு உண்மை ஒளிந்துள்ளது என்று நாம் கண்கூடாக காண்கிறோமோ இல்லையோ நான் காண்கிறேன்.


புஹாரி 3158


ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்.


அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும்,


உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக் கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அது அழித்து விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நபி ஸல் அவர்கள் அஞ்சினது நடந்து கொண்டு இருக்கிறது.


இந்த அறிவுரை அரேபியர்களுக்கு மட்டும் இல்லை

இது அவர்களுக்கு இது முதல் அறிவுரை.


இரண்டாவதாக நபி ஸல் அவர்களை பின்பற்றி நடக்கும் உம்மத்தான அரேபியர்கள் அல்லாத நாங்கள் தான்,

இது இல்லை என்று வாய்மொழியில் சொல்லலாம் ஆனால் நபி ஸல் அவர்களின் அறிவுரை படி நடக்காத மக்களக்குத்தான் சோதனை என்பது இருக்கும் என்பது நிகழ்கால சோதனை நமக்கு புரியவில்லையா,

இல்லை இதுவும் இல்லை என்று தீர்மானிக்கும் எண்ணம் இருக்கிறதா,

இதற்க்கு நான் ஒரே வரியில் பதில் கூறுகிறேன்.


சிந்திப்போறுக்கு இதில் படிப்பினை உள்ளது அவ்வளவு தான்.


9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.


இந்த வசனம் மட்டும் இல்லை இந்த சூரா தவ்பா வே முனாஃபீக்கீன்களை பற்றிதான் ஹதீஸ் கிறந்தத்தில் உள்ளது.


முனாஃபீக்கீன்களை பற்றி விளக்கும் சூராதான் தவ்பா என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(உங்களுக்கு முன்னிருந்தவர் களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று) என்ற வாசகம் ஒரு வார்த்தை இல்லை ஒரு காவியம் ஆகும்


செல்வத்தை பற்றி ஒரு வரலாறு ஒன்று என்று இருக்கிறது என்று சொன்னால் அது குர் ஆன் என்று சொல்லலாம் 


நபி ஸல் அவர்களுக்கு பின் வருபவர்களுடைய சோதனை (9:24)நீங்கள் திரட்டிய செல்வங்களும்)  என்பதுதான் மிகப்பெரிய சோதனை


இதை பெரும்பாலான ஹதீஸ்களும் உறுதிப்படுத்திகிறது அதில் சிலதை பின்வருமாறு காணலாம்.


9:55. அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.


ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி) வில் அல்லாஹ் மனிதர்களுக்கு போதிக்க கூடிய இடது பக்கத்தில் உள்ளவர்கள் யார் என்று தெரிகிறதா என்ற கேள்வி அவர்கள் உலகத்தில் சுகமாக வாழ்ந்தவர்கள் செல்வந்தவர்கள் என்று கூறுகிறான்.


56:41. இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)


56:45. நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.  


ஸாலிஹ் நபி அவர்களின் சமூகத்தில்  பார்த்து இஸ்லாமை எத்திவைக்கும் போது 


26:142. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது


அவர்களோடு உள்ள சமூகத்தில் உள்ள தலைவர்களின் நிலைமை சுகமாகவும் சொகுசாகவும் வாழ்ந்தார்கள் 


26:146. “இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?


இந்த வரலாறு மட்டும் இல்லை குர் ஆன் சொல்லக்கூடிய நபி மார்கள் வந்த சமூகத்தில் எல்லா நிராகரிப்பளர்களின் தலைவர்களும் சுகபோகமாக வாழ்ந்தவர்கள்தான்


இங்கு நாம் இதை எப்படி புரிந்து கொள்ளவேண்டுமானால் ஒரு சமூகத்தை அல்லாஹ் தேர்ந்தெடுப்பான் அவர்களுக்கு அறிவுரை சொல்லப்படும் அந்த அறிவுரையை கேட்காத மக்களை (நிராகரிப்பாளர்களை)இனி இவர்களுக்கு அறிவுரை சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற நிலைமையை எட்டும் போது (அதாவது இறைவன் நாடும்போது) அவர்களுக்கு செல்வ செழிப்பை பெறுக செய்வான்.


முடிவில் அதாப் (வேதனை) முடிவு செய்யப்படும்.


இதுவே அல்லாஹ்வின் ஃபித்ரத்


இதே போன்று வரலாறு நாம் வரலாறில் (குர் ஆனில்) எங்கு தேடினாலும் கிடைக்கும்.



இப்போது பின்வரும் வசனம் நபி ஸல் அவர்கள் காலத்தில் உள்ள முனாஃபிக்குகளை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.


9:69. (முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.


(செல்வம், மக்கள், வலிமை) ஞாபக வைத்து கொள்ளுங்கள்.


4:138. (நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக


முனாஃபிக்கள்  பற்றியும் குர் ஆன் சில வகைப்படுத்துகிறது என்றாலும்


சூரா நிஷா வில் இருக்கும் முனாஃபிக்கள் யார் என்று குழப்பம் அடையவேண்டாம்


அவர்கள் உலகத்தையை விரும்பக்கூடியவர்கள்.


مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌  وَكَانَ اللّٰهُ سَمِيْعًا بَصِيْرًا‏

எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் : 4:134)


குர் ஆன் சொல்லக்கூடிய நாயவஞ்சகம் என்பது எல்லா சமூகத்திலும் உள்ள நயவஞ்சகம் ஆகும் இதை இப்படியும் புரியலாம்.


எப்படி என்றால் ஒரு சமூகத்தை அல்லாஹ் தேர்ந்தெடுத்தால் அதில் நிராகரித்து போகும் மக்கள் ஹக்கானவர்கள் இடத்திலும், அசத்திய வாதிகள் இடத்திலும் இருந்து பயன்பெறுவதுதான் நயவஞ்சகம்.


இத்தக நயவஞ்சக வாதிகள், மதினாவிலும், மக்காவிலும் இருந்தார்கள்


இப்போது நபி ஸல் அவர்கள் பின்வரும் உள்ள நயவஞ்சகர்கள் பற்றி காண்ங்கலாம்,


நயவஞ்சகர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.


அவர்கள் செய்யும் சில செயல்களுக்கு செல்வம் அதிகமாக கொடுக்கப்படும்.


புஹாரி 1472. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கி னார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கி விட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையான தும் ஆகும். யார் இதைப் பேராசையின்றி எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் (பரகத்) வழங்கப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்தது” என்று கூறி னார்கள்.


இங்கு ஹக்கீம் பின் ஹிஸாமை நயவஞ்சகர் என்று குறிப்பிடவில்லை மாறாக அவர்க்கு செல்வத்தை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


நபி ஸல் அவர்களின் அறிவுரையை கேட்டு ஒரு வித பயத்தினாலோ என்னவோ தெரியவில்லை பின் வரும் காலத்தில் அபூபக்கர், உமர் அவர்களின் காலத்தில் அவர்களிடம் இருந்து ஹக்கீம் பின் ஹிஸாம் செல்வங்களை பெறவில்லை இந்த செய்தி ( புகாரி 1472) ஹதீஸில் முழுவதும் உள்ளது.


புஹாரி


1895. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:


(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், ‘‘குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். ‘‘நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்: ஒருவர் தம் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்), தமது செல்வம் விஷயத்தில் (அதைத் திரட்டு வதில் ஈடுபடுவதன் மூலமும்), அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப் படும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றேன்.


இங்கு செல்வம் என்பது குழப்பங்கள் வரிசையில் சேர்க்கப்படுகிறது.


இந்த செல்வத்தின் காலங்கள் கடந்து கடந்து சென்று அல்லாஹ் நாடினால் இப்போது இல்லையென்றால் வரக்கூடிய காலங்களில் 


கடைசியில் ஈஸா அலை அவர்கள் வரும் காலங்களின் ஜிஸ்யா வரி அவர்கள் வாங்கமாட்டார்கள்.


புஹாரி


2222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசாலிஅலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்


குர் ஆன் மறுமைக்கு முன் ஜக்காத் மூலம் தன்னை காத்து கொள்ள சொல்கிறது.


ஜக்காத் மற்றும் ஜிஸ்யா என்பதை பெரிதாக குழப்பிக்க வேண்டாம் ஒரு தனி மனிதனிடம் பெறுவது ஜக்காத், ஸதக்கா, ஒரு நாட்டிடம் (ஒரு தலைவரிடம் வசூலிப்பது) ஜிஸ்யா


ஜக்காத் மற்றும் ஜிஸ்யா என்பது  ஒருவிதம் சமம்தான்.


சூரா மாவூன்


فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

(அல்குர்ஆன் : 107:2)


وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِ‏

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

(அல்குர்ஆன் : 107:3)


உணவளிப்பதில்லை என்று அல்லாஹ் கூறவில்லை


உணவளிக்க தூண்டவில்லை என்று கூறுகிறான்.


இரண்டிலும் வித்தியாசம் உண்டு


மறுமை நாளை பொய்பிப்பவர்கள் யார் யார் என்று அந்த சூரவை விளக்குகிறது.


அதனால் செல்வம் எவ்வளவு பெரிய சோதனை என்பது தொடர்ந்து ஆழ்ந்து சிந்தித்தால் புரியவரும்


اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌  وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

(அல்குர்ஆன் : 18:46)

Comments